குவாலா என்கிற ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிறவர்கள் நபி (ஸல்) அவர்களின் மாமியார்.
இவர்கள் பிறந்த வருடமும் மரணித்த வருடமும் தெரியவில்லை.
அவர்களுக்கு பல சஹாபா பெண்மானி மற்றும் நபி தோழர்களின் தாய் என்கிற போற்றுதலுக்கு சொந்தக்காரர்.
இந்த மூதாட்டிக்கு ஒன்றன் பின் ஒன்றாக கணவர்கள் இறந்து போகவே அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் முடிகிறது.
அதன் மூலம் இவர்கள் 9 பிள்ளைகளை ஈன்று எடுக்கிறார்.
அதுவல்லாமல் இவர்களது கணவரின் மற்றொரு மனைவியின் 3 பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள்.
முதல் திருமணம்:
அவர்களுக்கு முதலாவதாக அல்ஜாஸி அல் zஜுபைதி என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்காக
1. மஹ்மியாஹ் இப்ன் அல்ஜாஸி அல் zஜுபைதி என்ற மகன் பிறக்கிறார்.
இரணடாவது திருமணம்:
அவரது முதலாவது கணவர் இறந்து போகவே அல் ஹாரித் இப்ன் ஹzசம் என்கிறவரை திருமணம் செய்கிறார்கள்.
அல் ஹாரித் என்பவருக்கு 2 மகள் மற்றும் 2 மகன்களை பெற்று எடுக்கிறார்கள்... அது போக அவரது மற்றொரு மனைவியின் 3 பெண் பிள்ளைகளையும் குவாலா தான் எடுத்து வளர்க்கிறார்கள்.
2. லுபாபா பின்த் அல் ஹாரித்
லுபாபா என இருவர் இக்குடும்பத்தில் இருப்பதால் இவர் முத்த லுபாபா என அழைக்கப்பட்டார் பின்னர் உம்மு ஃபளுள் என விளங்கப்பட்டார்.
இவர் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் இப்ன் அப்தல் முத்தலீப் இன் மனைவி,
நபி(ஸல்) அவர்களுக்கு அருகாமையில் இருந்து உதவியாக பணிவிடைகள் செய்து வந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாய்.
3. பர்ரா பின்த் அல் ஹாரித் (மைமூனா)
நபி (ஸல்) அவர்களின் கடைசி மனைவி.
ஹுதைபியா உடன்படிக்கை முடிந்த அடுத்த வருடம் அதாவது ஹிஜ்ரி 7 ஆம் வருடம் துல்காயிதா மாதம் நபி(ஸல்) உம்ராவிற்கு வந்திருந்த சமயம்.
பர்ரா அவர்கள் தனது சகோதரி லுபாபா (அப்பாஸ் (ரலி) மனைவி) இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க ஆசை படுவதாக கூற...
அதை தொடர்ந்து சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) தனது அண்ணன் மகனான நபி (ஸல்) அவர்களிடத்தில் வலியுறுத்தி வற்புறுத்த உம்ராவில் இருந்த திரும்பிய நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு திரும்பும் வேலையில் திருமணம் முடித்து விருந்து கொடுக்கிறார்கள்.
பின்னர் பர்ரா பின்த் அல் ஹாரித் என்ற அவரது பெயரை மைமூனா The Blessed என்று பெயர் மாற்றம் செய்து வைக்கிறார்கள்.
காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சிறிய தாயான மைமூனா (ரலி) அவர்களின் திருமணம் அவரை இஸ்லாத்தை ஏற்க செய்தது... காலித் பின் வலீத் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு மிக பிரயமாகவும் மிக நெருக்கமாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.
4. அல் சாயிப் இப்ன் அல் ஹாரித் (மகன்)
5. கதன் இப்ன் அல் ஹாரித் (மகன்)
அதுவல்லாமல் ஃபக்ஹிதா பின்த் அமீர் இப்ன் முஆதிப் இப்ன் மாலிக் என்கிற தனது கணவரின் மற்றொமொரு மனைவியின் பிள்ளைகள்
1. லுபாபா பின்த் ஹாரித் (சிறிய லுபாபா)
லய்லா அல்லது அஸ்மா என்றும் அழைக்கப்பட்டார். இவர் வலீத் பின் முகீரா என்கிற காலித் பின் வலீத் (ரலி) வின் தகப்பனாரை திருமணம் செய்துக்கொண்டார்.
வலீத் பின் முகீரா என்கிற கிழவன் பொல்லா பெருமைக்கொண்ட பெரும் பணக்கார கிழவன், 95 வயதுவரை வாழ்ந்து இறக்கும் போதும் சண்டைய வளர்த்துவிட்டு தான் இறந்து போனான்.
2. ஹுசைலா பின்த் அல் ஹாரித்
3. கோர்ரா பின்த் அல் ஹாரித்.
மூன்றாம் திருமணம்:
சிறிய லுபாபாவான காலித் பின் வலீதின் தாய் 3 வயதாக இருக்கும் போதே அல் ஹாரித் இறந்து விடுகிறார். அதையடுத்து குஸைமா இப்ன் அல் ஹாரித் என்கிறவரை திருமணம் முடிக்கிறார் குவாலா.
அவர் மூலியமாக,
6. சைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் பிறக்கிறார்கள்...
இவர்களும் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரி 4 ல் திருமணம் முடிக்கப்பட்ட ஐந்தாவது மனைவி என்பது குறிப்பிட தக்கது.
(ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) என்ற நபி(ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியை போன்றே பத்ரு போரில் விதைவையக்கப்பட்டவர். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 3ல் நான்காம் மனைவியாக திருமணம் முடிக்கப்பட்டவர். ஆனால் இவரை மணம்முடிக்கும் சமயம் நபி (ஸல்) அவர்களுக்கு சவ்தா(ரலி), ஆயிஷா (ரலி) என்கிற இரு மனிவியர் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.)
இவர் "உம்ம அல் மிஸ்கீன்" ஏழைகளின் தாய் என வர்ணிக்கப் படுபவர். மிக மிக இறக்க குணம் உடையவர்.
ஆனால் இவர் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடித்த அடுத்த இரண்டு வருடத்தில் இறந்து விடுகிறார்.
இவரது நல்லடக்கத்தின் போது இவரது தாய் வழி மூன்று (அல் சாயிப், கதன், அவ்ன்) சகோதரர்களும் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.
நான்காம் திருமணம்:
குஸைமா இப்ன் அல் ஹாரித் இறந்து போகவே உமைஸ் இப்ன் மஆத் என்பவரை திருமணம் செய்கிறார். அவர் மூலியமாக குவாலாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறக்கிறார்கள்.
7. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
மிகவும் குறிப்பிடும்படியான சஹாபா பெண்மணி... ராபியா இப்ன் ரியாப் என்பவரை திருமணம் முடித்து அவரது மரணத்துக்கு பின் ஜாபார் பின் அபிதாலிப்(ரலி) திருமணம் முடித்து, முஃதா போரில் அவரது இரு கைகளும் வெட்டப்பட்டு அவரது மரணத்துக்கு பின் அபு பக்கர் (ரலி) அவர்களை மணம்முடித்து பின்னர் அவரது மரணத்துக்கு பின் அலி இப்ன் அபிதாலிப் (ரலி) அவர்களை மணமுடித்தார்.
8. சல்மா பின்த் உமைஸ் (ரலி)
உஹது போரில் கொல்லப்பட்ட ஹம்சா பின் அப்தல் முத்தலீபின் மனைவி,
9. அவ்ன் இப்ன் உமைஸ் (மகன்)
என குவாலா என்கிற ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிற மூத்தட்டிக்கு மொத்தம் 9 + 3 பிள்ளைகள் இருந்தார்கள்.
இப்படிக்கு
பணிவன்புடன்
நாகூர் தீன்
22/09/2017