Thursday, September 21, 2017

ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிற மதிப்பிற்குறிய மாமியார்

குவாலா என்கிற ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிறவர்கள் நபி (ஸல்) அவர்களின் மாமியார்.

 இவர்கள் பிறந்த வருடமும் மரணித்த வருடமும் தெரியவில்லை.

அவர்களுக்கு பல சஹாபா பெண்மானி மற்றும் நபி தோழர்களின் தாய் என்கிற போற்றுதலுக்கு சொந்தக்காரர்.

இந்த மூதாட்டிக்கு ஒன்றன் பின் ஒன்றாக கணவர்கள் இறந்து போகவே அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் முடிகிறது.

அதன் மூலம் இவர்கள் 9 பிள்ளைகளை ஈன்று எடுக்கிறார்.

அதுவல்லாமல் இவர்களது கணவரின் மற்றொரு மனைவியின் 3 பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள்.


முதல் திருமணம்:


அவர்களுக்கு முதலாவதாக அல்ஜாஸி அல் zஜுபைதி என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்காக

1. மஹ்மியாஹ் இப்ன் அல்ஜாஸி அல் zஜுபைதி
என்ற மகன் பிறக்கிறார்.

இரணடாவது திருமணம்:


அவரது முதலாவது கணவர் இறந்து போகவே அல் ஹாரித் இப்ன் ஹzசம் என்கிறவரை திருமணம் செய்கிறார்கள்.

அல் ஹாரித் என்பவருக்கு 2  மகள் மற்றும் 2 மகன்களை பெற்று எடுக்கிறார்கள்... அது போக அவரது மற்றொரு மனைவியின் 3 பெண் பிள்ளைகளையும் குவாலா தான் எடுத்து வளர்க்கிறார்கள்.


2. லுபாபா பின்த் அல் ஹாரித்
லுபாபா என இருவர் இக்குடும்பத்தில் இருப்பதால் இவர் முத்த லுபாபா என அழைக்கப்பட்டார் பின்னர் உம்மு ஃபளுள் என விளங்கப்பட்டார்.

இவர் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் இப்ன் அப்தல் முத்தலீப் இன் மனைவி,

நபி(ஸல்) அவர்களுக்கு அருகாமையில் இருந்து உதவியாக  பணிவிடைகள் செய்து வந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாய்.

3.  பர்ரா பின்த் அல் ஹாரித் (மைமூனா)

நபி (ஸல்) அவர்களின் கடைசி மனைவி.

ஹுதைபியா உடன்படிக்கை முடிந்த அடுத்த வருடம் அதாவது  ஹிஜ்ரி 7 ஆம் வருடம் துல்காயிதா மாதம் நபி(ஸல்) உம்ராவிற்கு வந்திருந்த சமயம்.

பர்ரா அவர்கள் தனது சகோதரி லுபாபா (அப்பாஸ் (ரலி) மனைவி) இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க ஆசை படுவதாக கூற...

அதை தொடர்ந்து சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) தனது அண்ணன் மகனான நபி (ஸல்) அவர்களிடத்தில் வலியுறுத்தி வற்புறுத்த உம்ராவில் இருந்த திரும்பிய நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு திரும்பும் வேலையில் திருமணம் முடித்து விருந்து கொடுக்கிறார்கள்.

பின்னர் பர்ரா பின்த் அல் ஹாரித் என்ற அவரது பெயரை மைமூனா The Blessed என்று பெயர் மாற்றம் செய்து வைக்கிறார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சிறிய தாயான மைமூனா (ரலி) அவர்களின் திருமணம் அவரை இஸ்லாத்தை ஏற்க செய்தது... காலித் பின் வலீத் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு  மிக பிரயமாகவும் மிக நெருக்கமாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

4. அல் சாயிப் இப்ன் அல் ஹாரித் (மகன்)
5. கதன் இப்ன் அல் ஹாரித் (மகன்)

அதுவல்லாமல் ஃபக்ஹிதா பின்த் அமீர் இப்ன் முஆதிப் இப்ன் மாலிக் என்கிற தனது கணவரின் மற்றொமொரு மனைவியின் பிள்ளைகள்

1. லுபாபா பின்த் ஹாரித் (சிறிய லுபாபா)
லய்லா அல்லது அஸ்மா என்றும் அழைக்கப்பட்டார். இவர் வலீத் பின் முகீரா என்கிற காலித் பின் வலீத் (ரலி) வின் தகப்பனாரை திருமணம் செய்துக்கொண்டார்.

வலீத் பின் முகீரா என்கிற கிழவன் பொல்லா பெருமைக்கொண்ட பெரும் பணக்கார கிழவன், 95 வயதுவரை வாழ்ந்து இறக்கும் போதும் சண்டைய வளர்த்துவிட்டு தான் இறந்து போனான்.

2. ஹுசைலா பின்த் அல் ஹாரித்
3. கோர்ரா பின்த் அல் ஹாரித்.

மூன்றாம் திருமணம்: 

சிறிய லுபாபாவான காலித் பின் வலீதின் தாய் 3 வயதாக இருக்கும் போதே அல் ஹாரித் இறந்து விடுகிறார். அதையடுத்து குஸைமா இப்ன் அல் ஹாரித் என்கிறவரை திருமணம் முடிக்கிறார் குவாலா.

அவர் மூலியமாக,

6. சைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் பிறக்கிறார்கள்...
இவர்களும்  நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரி 4 ல் திருமணம் முடிக்கப்பட்ட ஐந்தாவது மனைவி  என்பது குறிப்பிட தக்கது.

(ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) என்ற நபி(ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியை போன்றே பத்ரு போரில் விதைவையக்கப்பட்டவர்.  ஹஃப்ஸா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 3ல் நான்காம் மனைவியாக  திருமணம் முடிக்கப்பட்டவர். ஆனால் இவரை மணம்முடிக்கும் சமயம் நபி (ஸல்)  அவர்களுக்கு சவ்தா(ரலி), ஆயிஷா (ரலி) என்கிற இரு மனிவியர் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.)

இவர் "உம்ம அல் மிஸ்கீன்" ஏழைகளின் தாய் என வர்ணிக்கப் படுபவர். மிக மிக இறக்க குணம் உடையவர்.

ஆனால் இவர் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடித்த அடுத்த இரண்டு வருடத்தில் இறந்து விடுகிறார்.

இவரது நல்லடக்கத்தின் போது இவரது தாய் வழி மூன்று (அல் சாயிப், கதன், அவ்ன்) சகோதரர்களும் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.

நான்காம் திருமணம்: 

குஸைமா இப்ன் அல் ஹாரித் இறந்து போகவே உமைஸ் இப்ன் மஆத் என்பவரை திருமணம் செய்கிறார். அவர் மூலியமாக குவாலாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறக்கிறார்கள்.

7. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
மிகவும் குறிப்பிடும்படியான சஹாபா பெண்மணி...  ராபியா இப்ன் ரியாப் என்பவரை   திருமணம் முடித்து அவரது மரணத்துக்கு பின் ஜாபார் பின் அபிதாலிப்(ரலி) திருமணம் முடித்து, முஃதா போரில் அவரது இரு கைகளும் வெட்டப்பட்டு அவரது மரணத்துக்கு பின் அபு பக்கர் (ரலி) அவர்களை மணம்முடித்து பின்னர் அவரது மரணத்துக்கு பின் அலி இப்ன் அபிதாலிப் (ரலி) அவர்களை மணமுடித்தார்.

8. சல்மா பின்த் உமைஸ் (ரலி)
 
உஹது போரில் கொல்லப்பட்ட ஹம்சா பின் அப்தல் முத்தலீபின் மனைவி, 

9. அவ்ன் இப்ன் உமைஸ் (மகன்)

என குவாலா என்கிற ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிற மூத்தட்டிக்கு மொத்தம் 9 + 3 பிள்ளைகள் இருந்தார்கள்.

இப்படிக்கு
பணிவன்புடன் 
நாகூர் தீன்
22/09/2017

மியான்மாரின் உண்மையான நடப்பு நிலவரம் தான் என்ன?

1. மியான்மரின் கச்சின் மற்றும் ஷான் மாநில எல்லை ஓர பகுதியின் அயுதம் ஏந்திய போராட்டத்தில் சீனாவின் நெடுங்காலமான ஈடுபாடு.

2. அரகான் மாநிலத்தின் கடல் எல்லையில் உள்ள   கியோக் பியுவில் இருந்து சினாவின் கன்மிங் வரை செல்லும் சீனாவின் இரண்டு எண்ணை பைப்லைன்கள் மற்றும் சமீபத்திய திட்டமான ரெயில் போக்குவரத்து தடம். இத்திட்டம் ஏற்கனவே OBOR one belt one road initiative என்கிற முந்தைய அடிப்படையில் போடப்பட்டுள்ள புதிய பெயர் கொண்ட modern silk road என்கிற லாவூஸ் முதல் லண்டன் வரையிலான செயற்பாட்டில் இருக்கும் இரயில் தடத்துடன் 18 பில்லியன் டாலர் செலவில் இனைக்கப்பட இருப்பதும் இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதும்.

3. மியான்மாரின் கியோக் பியு இயற்கை துறைமுக பங்குகள் சினாவால் 85% கையகப்படுத்தப்பட்டு உருமை கோரப்பட்டுள்ளதும் அதனால மீன் பிடி தொழில் பாதிக்கப்படுள்ளதும்.

அதனால் சீனாவின் கப்பல் சரக்கு போக்குவரத்தில் மலக்கா மார்க்கமாக வராமல் செலவில்  30% மிச்சப்படுகிறது.

மலகா வழியாக வருவதை தவிர்ப்பதால் அமெரிக்காவின் குறுக்கீட்டை முற்றிலுமாக சீனா தவிர்த்து விட்டது.

4. கியோக் பியு இயற்கை துறைமுகத்திற்கு 100 கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு துறைமுகம் கட்ட இந்தியா கடன் உதவி செய்து முதலீடு செய்து இருப்பது.

5. இந்தோ மியன்மார் தாய்லாந்து டிரைலேட்ரல் ஹைவே (1360km) சாலை கட்டுமான வேலை திட்டம் மற்றும் ரெயில் சேவை திட்டத்தில் இந்தியாவின் பெரும்பங்கு.

6. தென் கொரியா வின் POSCO iron and steel நிறுவனத்தால் சில வருடங்களுக்கு முன் 3 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட DAEWOO நிறுவனம் மியான்மாரின் ராகைன் மாநிலத்தை ஒட்டியுள்ள கடல்பகுதியில் ஏகப்பட்ட எரிவாயுவை கண்டெடுத்த உள்ளது.

7. தங்க சுரங்கத்திற்கு மியான்மர் அரசாங்கம் ஏழை மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பது.

8. உள்நாட்டு ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் மத்தியில் சரணடைய வைக்க பேச்சு வார்த்தை.

9. அயல்நாட்டு அரசாங்கங்களால் உள்நாட்டு ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள், பேச்சுவார்த்தை மேஜையில் அடிபணிய வைக்க உள்நாட்டு அமைதியின்மை மறைமுகமாக பயன்படுத்தப் படுகிறது.

இது எல்லாம் ஒரு புறம் என்றால்

10. இது அனைத்துக்கும் மேலாக 1970 முதல் 135 பூர்வீக சமூக அந்தஸ்தை இழந்து 1982ல் இருந்து முற்றிலுமாக குடியுரிமை நிராகரிக்க பட்ட நிலையில் ரொஹிங்கிய மக்கள் வன்கொடுமைக்கு ஆளாகி இங்கும் அங்குமாக அகதி முகாம்களில் அலைக்கழிக்கப்படுவததையும். அவர்களை அக்கம்பக்கத்து நாடுகள் ஏதும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்களின் வாழ்க்கை வாழ்வா சாவா என்ற நிலையில் தற்போது செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.

11. அரகான் மாநிலத்தில் பெருமளவு முஸ்லீம்களாக வாழ்ந்த  இந்த ரொஹிங்கிய இனத்து முஸ்லீம் மக்கள், அவர்கள் மத்தியில் இருந்து உருவான ஹர்கத் அல் யகீன் என்ற பின்னர் ARSA என்று பெயர் மாற்றப்பட்ட போராளி குழுக்களால் கடந்த ஆண்டு 9 அக்டோபர், 2017ல் படுகொலைகள் சில நிகழ்ந்து மீண்டும் அப்பாவி மக்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட நிலையில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த பின்னரும் சிலர் எஞ்சி இருந்த நிலையிலும் அவர்களின் வீடுகளும் உடமைகளும் சூரையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதை மியான்மார் இரானுவமே நேரில் நிண்டு வேடிக்கை பார்த்தது தர்போது அந்நாட்டின் செய்தி ஊடக நிருபர்கள் மூலியாமாக ஆதாரபூர்வ காட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டு மியன்மார் அரசாங்கம்  சர்வதேச அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

12. இதற்கு இடையே ஆகஸ்ட் 24ம் தேதி ஐ நா வின் கோஃபி அன்னான் தலமையிலான மியான்மார் அட்வைசரி கமிஷன் 5 செப்டம்பர் 2016 தேதியை தொடர்ந்து கடின உழைப்பிற்கு பின் பாரதூரமான ராகைன் மாநில சமூக சூழல் குறித்து தனது பரிந்துரையை முன் வைத்தது. அதில் ரொஹிங்கிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

13. Kofi Annan இறுதி ரிப்போர்ட் ஆகஸ்ட் 24 லி வெளிவந்த அடுத்த நாளே இராணுவ முன்னிலையில் அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டும் Aung san suu kyi ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தது சர்வதேச அளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வர தற்போது மெல்ல வாய் திறக்க ஆரம்பித்து இருக்கிறார்.

உண்மை நிலை இப்படியாக இருக்க இணையத்தில் வாழ்ந்து வரும் எனது சக நெட்டிசன்கள் ஆதாரமற்ற புகைப்படத்தையும் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருவதும் வருத்தம் தரும் விஷயமாக உள்ளது... இவர்களின் வதந்திகளை உண்மை என நம்பி ஒரு சில சர்வதேச தலைவர்களும் குறிப்பாக துருக்கி நாட்டு தலைவர்கள் அசிங்கப்பட்டதும் குறிப்பிட தக்க விஷயமாகும்.

எனவே நமது ரொஹிங்கிய சகோதரர்கள் விஷயத்தில் பொறுப்புடன் நடந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.
21/09/2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...