Friday, September 22, 2017

டொனால்ட் டிரம்ப்பின் பதவி காலம் இனி நீடிக்குமா?

டொனால்ட் டிரம்ப் இன்னும் அதிக நாட்களுக்கு அவரது பதவியில் நீடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப் படுகிறது.... என்ன காரணம்? ஒன்றா இரண்டா இரண்டாயிரம் இருக்க அதில் எதை எதை சொல்ல.... நாளொரு புத்தி பொழுதொரு கோளாராக உளறுவது மட்டுமல்லாமல் செய்துக்கொண்டு வந்தால் யாருக்கு தான் சரிபட்டு வரும்....

சில மாதங்கள் முன்புவரை அமேரிக்க அதிபர் என்றாலே சர்வதேச அளவில் ஒரு மாபெரும் மதிப்பு இருந்து வந்தது அது இப்போ அதல பாதாளத்தில் மதிப்பு இழந்து, ஓஹ்...! அவனா என்று கேளிக்கைக்கு உரியதாக ஆகிவிட்டது.

இப்போதைய காலத்துக்கு சர்வதேச தலைவராக மக்கள் போற்றுவது யாரை என்றால் அது ஜெர்மானிய ச்சான்ஸ்லர் அங்கலா மெர்கல்... அவர்களை தான்... ( வரும் 24 செப்டெம்பர் , 2017 அன்று ஜெர்மனியில் தேர்தல் நடக்க இருக்கிறது.)

இந்நிலையில் இந்த வருட இறுதிவரை டொனால்ட் டிரம்ப் தாக்கு பிடித்தல் என்பது பெரிய விஷயம் என வாஷிங்டன் வட்டாரத்தில், ஆளும் பெரும்பான்மையான ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்த மூத்த செனட்டர்களே அதிலும் செனட் மெஜாரிட்டி தலைவரே முனங்க ஆரம்பித்து விட்டார் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது...

அதிலும் குறிப்பாக கடந்த ஏழு மாதத்தில் டொனால்ட் டிரம்ப்பிற்கு மிக நெருக்கமான கூட்டாளிகள் ஆன ஆலோசகர் மற்றும் முக்கிய செக்ரெட்ரிகள் என
1. மைக்கல் ஃப்லின் (பிப்ரவரியில்)
2. ரயன்ஸ் ப்ரீபஸ்
3. ஷான் ஸ்பைசர்
4. அந்தொனி ஸ்காராமுச்சு ( வெறும் பத்து நாட்களே நிலைத்த "தி மூச்")
5. ஸ்டீவ் பேனன் (ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகரில் ஒருவர்)
6. செப் கோர்கா (கவுண்டர் டெரொரிஸம் அட்வைஸர் பதவியில் 25/08/2017 வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டார்)

அந்தொனி முச்சி, ஸ்டீவ் பேனன் மற்றும் செப் கோர்கா ஆகியோர்  புதிதாக பதவிக்கு வந்த வெள்ளை மாளிகையின் ச்சீஃப் அஃப் ஸ்டாஃப் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜான் கெல்லி அவர்களால் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் டொனால்ட் டிரம்புடன் இப்போது நெருங்கி இருப்பது அவரது மகளும், மகளின் கணவன் மருமகனான ஜனாதிபதி ஆலோசகர் ஜரெட் குஷ்னர் மட்டும் தான்...

நான் முந்தைய பாராவில் குறிப்பிட்ட முன்னாள் ஹோம் லாண்ட் செக்யூரிட்டி தலைவரும், தற்போதைய வெள்ளை மாளிகையின் ச்சீஃப் அஃப் ஸ்டாஃப் ஆன,  முன்னாள் இராணுவ ஜெனரல் ஜான் கெல்லி அவர்கள் கூட தற்போது டொனால்ட் டிரம்ப் என்றவரை ஒரு புத்தி ஸுவாதீனம் இல்லாத சிறு குழந்தையை பராமரிப்பது போன்று தான் ஒழுங்கு படுத்த முயற்சித்து அலுத்து போகிறார் என்றும் வாஷிங்டன் வட்டாரத்தில் செய்திகள் அடிப்படுகிறது.

ஏற்கனவே இவராக புதிதாக பிரச்சனைகளை உருவாக்குவது போதாதென்று.. சென்ற வாரம் நிகழ்ந்த நியோ நாக்ஸி, கேகேகே, வெள்ளை இன மேலாதிக்கவாத இனவெறியர்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்த்த நிற வெறி, இன வெறி மற்றும் நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு காட்டிய மக்களுக்கு எதிராகவும், அமெரிக்க உள்நாட்டு சிவில் போர் சமயத்தில் இனவெறி தாண்டவம் ஆடிய வெள்ளை இன வெறிபிடித்த ஜெனரல்களின் சிலை அகற்ற கூடாதென என  இவர் வெளிப்படையாக பேசிய பேச்சு போன்றவைகள் கட்சி பாகுபாடு இல்லாத வகையில் அமேரிக்க பெரும் சமுதாய மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இவர் அமெரிக்க பொதுமக்களின் ஜனாதிபதியாக இல்லாமல் இனவெறியர்களின் பிரதிநிதியாக இருக்கிறாரே என்று இவரது நெருங்கிய கூட்டாளிகளே இவரை விட்டும் தள்ளி போய் நின்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இவ்வாறான சூழலில் தான், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அவமதித்த இனவெறி தனமாக ஹிஸ்பானிக் மக்களுக்கு எதிராகவும் காவல்துறை கஸ்டடியில் இருந்த ஹிஸ்பானிக் கைதிகளிடம் கொடுமையான விதத்தில் நடந்தது போன்ற அடுக்கடுக்கான எண்ணற்ற குற்றத்துக்கு சொந்தக்காரரான அரிசோனா மாநிலத்தில் உள்ள மரிகோபா கவுண்ட்டி காவல்துறை ஷெரீப் ஜோசஃப் அர்பெயோ வை ஜனாதிபதி மன்னிப்பில் டொனால்ட் டிரம்ப் விடுவித்தது போன்றவை அமெரிக்க மக்கள் விரோத போக்காக, வெள்ளை இனவெறி போக்காக  பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் டிரான்ஸ் ஜெண்டர் இராணுவ வீரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக பேசி வருவதும் அமேரிக்க மக்கள் மத்தியில் அமெரிக்க அதிபரை நோக்கிய கசப்புணர்வை அதிகரிக்க செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இதனிடையே ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் வலுப்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் புரட்சி எதிராக, அந்நாட்டில் ஒரு காலத்தில் நாகரிகம் மேலோங்கி பெண்கள் குட்டை அரைப்பாவாடை அணிந்தவர்களாக இருந்துள்ளார்கள் என்ற  பழைய 75 ~ 80 களின் புகைப்படத்தை டொனால்ட் டிரம்ப்பிடம் காட்ட அவரும் அப்ப சரி இன்னும் கூடுதலாக துருப்புகளை அனுப்பி மீண்டும் சண்டையிட்டு நவநாகரீகத்தை நிலைநாட்டுவோம் என்று ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ கன்ஸர்வேடீவ் செய்தி ஊடகங்கலும் வெட்கம் இல்லாமல் குறிப்பிட்டதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஃபேஸ் புக்கில் பலரும் படிக்கும் வகையில்.

இப்படிக்கு,
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.
(எழுதிய தேதி 26 ஆகஸ்ட், 2017)

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...