Wednesday, September 20, 2017

மியன்மார் ராகைன் பிராந்திய ரொஹிங்கிய இன சுத்திகரிப்பு படுகொலை குறித்த எனது பார்வை இது...

ஒருவர் வாட்ஸ்ஸப்பில் அடிப்படை அறிவு இல்லாமல் எழுதி இருந்ததை கண்டு இதை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.

எந்த சமுதாயம் தன்னளவில் மாறவில்லையோ அச்சமுதாயத்தினர் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்ற இறைவனின்  வாசகத்தை முஸ்லீமாக இருக்கும் இவர் சற்று திரித்து தனது வாதத்துக்கு ஏற்றார் போல எழுதி இருந்தார்.

மேலும் ரொஹிங்கியா மக்கள் வெறுமனே முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் மட்டுமே கொல்லப்படுவதாக  கூறுவது சரியானதாக இருக்காது என நான் கருதுகிறேன்.

மியன்மாரின் ஏனைய உட்புற பகுதிகளிலும் முஸ்லீம்கள் இன்னமும் வாழ தான் செய்கிறார்கள்.

ஆனால் வருடந்தோறும் குறிப்பிட்ட இந்த ராகைன் பகுதி ரொஹிங்கிய இன  முஸ்லீம்களை மட்டும் கருவறுத்து வருகிறார்கள் என்பதும் பங்களாதேஷ் உட்பட ஏனைய அக்கம்பக்கத்து நாடுகள் ஏதும் கடந்த பல வருடகாலமாக இவ்விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாது இருந்து வந்ததும், பங்களாதேஷ் எல்லையில் உள்ள ரோடுகள் மூடப்பட்ட நிலையில் இவர்கள் குறுக்கு வழியாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள மார்க்கமாக நடந்து சென்று கை கால்களை இழப்பதும், பங்களாதேஷ் நாட்டின் உட்பகுதி ஊருக்குள் அழைத்து செல்லாமல் எல்லையோர பகுதியிலேயே முகாம் இட்டு தங்கவைத்து பங்களாதேஷ் அரசாங்கத்தால் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுவதும் கடந்த பல வருடங்களாக உலகம் அறிய நிகழ்ந்து வரும் கொடூரங்களே...

அங்குள்ள அகதி முகாம்களில் போதிய கழிவறை வசதி இன்மையால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது குறித்தும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வந்துள்ளது குறித்தும், இயற்கை சீற்றங்களால் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டு வந்தது குறித்தும் கடந்த காலத்தில் மாதாமாதம் அறிக்கை வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இதற்கு ஐ நா பாதுகாப்பு கவுன்சில்  தலையீடு அடிப்படையிலான ரொஹிங்கிய மக்களின் அரசியல் அரசாங்க பிரதிநிதித்துவ நிரந்தர சீரமைப்பு தான் சரியான தீர்வாக இருக்கும்.

இதை அங்கிருந்து கண்காணித்து ஐ.நா சபைக்கு தொடர்ந்து கவலையுடன் அறிக்கை சமர்ப்பித்து வரும் விஜய் நம்பியாரும் இதையே தனது கடந்தகால அறிக்கைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில், நீ மட்டும் ஏன் மூன்று வேளை உணவு உட்கொள்கிறாய் தொண்டை குழியில் குத்தவில்லையா உனக்கு என்றெல்லாம் உண்மை பிரச்சனை மற்றும் பிரச்சினையின் சிக்கல் புரியாது, போதிய  விவரம் அறியாது ஏனோ தானோன்னு புதிது புதிதாக தோன்றி எமோஷனலாக கட்டுரை எழுதுவதினால் இவ்விஷயத்தில் எவ்வித தீர்வையும்  கண்டு விட முடியாது....

ஐ நாவை வலியுறுத்தும் விதமாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்... மேலும்  மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் மியன்மார் மற்றும் பங்களாதேஷ் அரசின் மீது பொருளாதார தடை விதிக்க ஐ நா வை நிர்பந்தித்து போராட்டத்தை முன்னெடுத்து ஊடக வட்டாரத்தில் பதிவு செய்யவேண்டும்.

இதுவே இப்போதைக்கு உள்ள சிவிலைஸ்டு உலகத்தில் ஜனநாயக முறையில் நம்மால் ஆக்கப்பூர்வமாக செய்ய முடிய கூடிய காரியமாகும்.

இதை புரிந்து முஸ்லீம்கள் தமது கருத்தை சர்வதேச ஊடக கருத்து பின்னூட்ட தளத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்வதன் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்க முடியும்..

இதை நான் செய்து வருவதால் தான் உங்களையும் செய்ய சொல்கிறேன்...

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
20/09/2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...