அது சமையல் சிலிண்டரின் DUE PERIOD FOR TESTING அதாவது பரிசோதனைக்கு உரிய காலக்கெடுவை குறிக்கிறது.
அதையும் தாண்டி சமையல் சிலிண்டர் வெடிக்குமா?
வெடிக்காது, துகள்களாக வெடித்து சிதற அந்த சமையல் சிலிண்டரின் உலோகம் அவ்வளவு எளிதானதில்லை.
மேலும் சமையல் சிலிண்டர் தாங்கும் சக்திக்கு மிகுந்த அழுத்தமும் பிரஷ்ஷரும் அந்த சிலிண்டருக்குள் இல்லை.
சுற்றுப்புற அதிகளவு வெட்பத்தினால் சிலிண்டரின் துவாரம் வழியாக கேஸ் லீக்காகி பின்னர் மண்டலமாக கோர்த்து நிற்கும் கேஸ் பகீரென பற்றி வெடிக்க வாய்ப்பு இருக்கே ஒழிய சும்மா இருக்கும் சிளின்டரே திடீரென வெடிக்க வாய்ப்பு இல்லை.... இன்னும் சொல்லப்போனால் திரைப்படத்தில் காட்டுவது போல துப்பாக்கியால் சுட்டாலும் கூட, லீக் தான் ஆகுமே தவிர பற்றி வெடிக்காது... மேலும் LPG சமையல் கேஸ் ஆனது ஏனைய வாயு போன்று அல்லாது காற்றில் வெகுவாக மிக வேகமாக கலந்து விடும்.... அதுபோக வெளிப்புற தட்பவெட்ப சூழலினால் ஏற்படும் உட்புற வாயு விரிவாக்கத்துக்கு இடமளிக்கும் விதமாக அதன் கொள்ளவில்லை 80–85% வரை தான் நிரப்புவார்கள்.
ஆகவே LPG எனும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் காலவிதியாகி தன்னாலேயே பாதியாக அல்லது துகள்களாக வெடித்து சிதற சாத்தியமே இல்லை அப்படியான சம்பவம் நடந்த ரெக்கார்டும் இதுவரை உலகில் எங்குமே பதிவாகவும் இல்லை.
குறிப்பு: https://www.iocl.com/download/statement-from-iocl.pdf
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
24/09/2017
