Seriously.. Really... Are those guys totally out of their mind...
அடங்கி இருக்கும் அந்த மகானை விட்டும் இன்னும் சக்தி வாய்ந்த வேறு ஒரு மகானை அவர்கள் அணுகினால் என்ன செய்வீர்கள்?
சரி அப்படியே ஒருகால் தினகரனால் ஏற்படும் சிக்கலுக்கு இந்த மகானால் இப்போது முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றால்...
இந்த பிரச்ச்னையே ஏற்படாத வண்ணம் இவர்களால் ஏன் முன்னமேயே பார்த்துக்கொள்ள முடியவில்லை?
அன்றைய அறியாமை காலத்து மக்காவில் லாத், உzச்zசா, மனாத் மற்றும் ஹுபால் இடம் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க.கேட்ட மாதிரி அல்லவா இருக்கு..
இல்ல உண்மையில் மகான்களை பற்றிய உங்கள் புரிதல் தான் என்ன...?
இவனுங்க பஞ்சாயத்த தீர்த்து வைக்கவும் இவனுங்க செய்யும் குளருபடி கோளாறுகளை தீர்த்து வைக்கவும் தான் அவர் பர்சக் என்கிற திரைக்கு பின்னால் நித்திரையில் ஆழ்ந்து இருக்கிறாரா?
இந்த அடிச்சான் புடிச்சான் சட்டசபை கட்ட பஞ்சாயத்துக்கெல்லாம் அவங்கள ஏன் போய் டிஸ்டர்ப் செய்றீங்க....?
அப்படியே டிஸ்டர்ப் செஞ்சாலும் தினகரன் போய் இவங்கள விட சக்திவாய்ந்த இன்னொருவரை தொடர்பு கொண்டு இருக்கிறாராம்... இப்ப என்ன செய்ய போறீங்க...?
நிர்ணயிக்கப்பட்ட விதியின் அடிப்படையில் படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வல்ல ரஹ்மான் அருட்கொடையாளன் நான் தான் சர்வ அதிகார வல்லமையும் கொண்டவன் என கூறி இருக்கும்போது....
நீங்க எல்லாருமா சேர்ந்து அல்லாஹுவுடைய சொல்லுக்கு எதிராக நடந்து அவன கடுப்பேத்திகிட்டு இருக்கீங்க....
இப்ப நல்லடியார்கள்ன்னு பார்த்தீங்கன்னா உலகத்துல ஏகப்பட்ட நல்லடியார்கள் இருக்காங்க...
எனக்கே இவங்களவிடவும் பெரும் பெரும் ஏகப்பட்ட நல்லடியார்கள் அடங்கி இருக்கும் இடம் தெரியும்.
நல்லடியார் என்பது அவங்க உயிரோடு இருக்கும்போது செய்த நல்லறத்துக்காக கிடைத்த அங்கிகாரம்.
அப்படி இருக்கும்போது இப்ப போய் டிஸ்டர்ப் செஞ்சு அவங்க கிட்ட எனக்காக இத செய்ங்க அத செய்ங்கன்னு சொல்ல போய், அவங்களும் நல்லது கெட்டது விசாரிக்காம கொள்ளாம ஆளாலுக்கு செஞ்சு வைக்க....
கடசியில இதுவே அவங்க மத்தியில சண்டைய மூட்டி விடுர மாதிரியா ஆகிடுமுன்னு தான்...
நல்லவங்கன்னு நல்ல பெயர் வாங்கின நல்லடியாரையும் கூட ஏண்டா உங்க வலையில விழவச்சு கெட்டவங்களா ஆக்குறீங்கன்னு கேட்கிறேன்.
எப்ப தான் திருந்த போறீங்கன்னே தெரியல...
இப்படிக்கு
நாகூர் தீன்
22/09/2017
நாகூர் தீன்
22/09/2017
