இன்று எனது மகளுக்கு நான் ஒரு புதிய கணித நுணுக்கத்தை கற்றுக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியது போல...
நீங்களும் உங்க பிள்ளைகள் இடத்தில் கணித மேதையாக காட்டிக்கொள்ளலாம்...
உதாரணத்திற்கு.... எந்த எண்ணையும் பதினொன்றால மிக எளிதாக பெருக்கி காட்டி...
அதாவது துவக்கத்தில் அவர்கள் இடத்தில்
11 * 2 = ? என்ன என்று கேளுங்கள் 22 என்பார்கள்...
அது போன்று அடுக்கடுக்காக
11 * 3 = என்ன?
11 * 4 = என்ன ?
11 * 8 = என்ன ?
11 * 9 = என்ன ?
என்று கேட்டுவாருங்கள், அன்னைத்துக்கும் சரியான மிக எளிதில் பதில் தருவார்கள்...
சரி.... இப்ப
11 * 1234 = ? என்று கேட்டுப்பாருங்கள்...
திடிக்கிட்டு போய் நிற்பார்கள்...
சரி..அவ்வளவு கடினமானது வேண்டாம்.... சுலபமான ஒன்றை கேட்கிறேன் என்று கூறிவிட்டு
11 * 23 = ?
எவ்வளவு என்று கேளுங்கள்...
அதற்கும் சிலர் யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
இவ்விடத்தில் தான் நாம் கணித மேதையாக மாறி... ஒரு நுணுக்கத்தை அவர்களுக்கு கத்து கொடுத்து வியப்பில் ஆழ்த்த போகிறோம்....
11 * 23 = ? ரொம்ப சிம்பிள்.. 23ல் உள்ள 2+3 இரண்டையும் கூட்டினால் வரும் 5 என்ற விடையை 2க்கும் 3க்கும் நடுவே போட்டு விட வேண்டும், பதில் 253.. எப்படி ஈசியா இருக்கா...?
அதே போன்று தான்
11 * 1234 = ?
1234ல் உள்ள கடசியில் உள்ள 4 அப்படியே எழுதிக் கொள்ளுங்கள்..
4
பின்பு 4 முந்தைய எண் 3 கூட்டி 7 என்று எழுதிக்கொள்ளுங்கள்.
74
பின்பு அந்த 3 முந்தைய எண் 2 உடன் கூட்டி 5 என்று எழுதிக்கொள்ளுங்கள்...
574
பின்பு அந்த 2 முந்தைய எண் 1 உடன் கூட்டி 3 என்று எழுதிக்கொள்ளுங்கள்...
3574
பின்னர் மீதம் இருக்கும் முதல் எண் ஆன 1 அப்படியே எழுதிக்கொள்ளுங்கள்..
ஆக 11*1234 = 13574
ரொம்ப சுலபம் மனதளவில் கூட கூட்டி, சட்டென்று பெருக்கல் செய்தது போல பாவ்லா செய்து பிள்ளைகள் இடத்தில் ஜீனியஸாக காட்டிக்கொள்ளலாம்... எப்படி..
அதுபோக பெரிய எண் வந்தால் என்ன செய்வது என்று அஞ்ச தேவையில்லை... 8+4 என்று வர நேரிட்டால் 2 மட்டும் எழுதி விட்டு மீத 1 ஒன்றை அடுத்து உள்ள எண்ணுடன் கூட்டி வரும் எண்ணோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்