Friday, September 22, 2017

ஈகை பெருநாள் அன்று மறைந்த தம் உறவினருக்காக குர்பானி கொடுக்கலாமா?

ஈகை பெருநாளின் குர்பானியை பொருத்தமட்டில்...

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் மறைந்த தமது பெற்றோருக்காகவோ அல்லது தமக்கு அரவணைப்பாக இருந்த சிறிய தந்தைக்காகவோ,  இன்னும் சொல்லபோனால் தனது
பிரியமான பாசமிகுந்த இஸ்லாத்தை முதன்முதலில் ஏற்ற மனைவி கதீஜா (ரலி) அவர்களுக்காகவோ அல்லது அவர்களது நினைவாகவோ அல்லது அவர்கள் சார்பாகவோ ஹஜ்ஜு பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்தது கிடையாது.

அது போக சஹாபா பெருமக்கள் கூட நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னாளில், நபி (ஸல்) அவர்களின் சார்பாக அல்லது அவர்களின் நினைவாக ஹஜ்ஜு பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்ததும் இல்லை...

இன்னும் சொல்லப்போனால் பெரும் பெரும் ஈமாம்கள், தலைசிறந்த இஸ்லாமிய ஆய்வியல் அறிஞர் பெருமக்கள் கூட   மறைந்தவர் சார்பாக குர்பானி கொடுத்ததில்லை.

அப்படி இருக்க, வழிமுறைகள் அல்லாது.. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கூட மறைந்த உறவினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என, அல்லது அவர்கள் பொருட்டு ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு குர்பானி கொடுக்க எந்த ம அடிப்படை சட்ட விதிமுறையும் இல்லை.

எனினும் விதிவிலக்காக, குர்பானி கொடுக்க மிகமிஞ்சிய  போதிய செல்வம் இருந்த நிலையில் ஒருவர் தனது சார்பாக அல்லாஹுக்காக குர்பானி கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட நிலையில் மரணத்தி இருந்தாலே ஒழிய அவருக்காக இன்னொருவர் அவரது செல்வத்தில் இருந்து குர்பானியை நிறைவேற்றலாம் என்று ஹம்பலி வழிமுறையில் உள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள்..

இது கூட  அல்லாஹுக்காக என்று அவர் உயிருடன் இருந்த காலத்தில் நேர்ந்துக்கொண்ட நேர்ச்சை என்ற அடிப்படையில் அவர் விட்டு சென்ற போதிய செல்வத்தில் இருந்து அவருக்காக நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் மட்டுமே, மார்க்க வரையறுக்கப்பட்ட அடிப்படைக்கு உட்பட்ட நிலையில் ஆகுமானதாக ஆகும்.

ஆனால் இன்றைய காலத்தில் குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் குர்பானி கொடுத்தால் போதும் என்ற இஸ்லாமிய அடிப்படையை உணராது...

அதிலும் கூட ஹஜ்ஜு பெருநாள் அன்று அல்லாஹுக்காக குர்பானி கொடுப்பது என்பது உயிருடன் இருப்பவர்களின் சார்பாக  மட்டுமே கொடுப்பது என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாமல்...

சிலர் சமீபத்தில் மறைந்த குடும்ப உறுப்பினர் சார்பாக குர்பானி கொடுப்பதும்..

நபி (ஸல்) அவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது என்ற நூதன சடங்கை அனுஷ்டித்து வருவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் வரையறுக்கப்பட்ட அடிப்படைக்கு கட்டுப்படாமல் வரம்பு மீறுவதாகும் என மார்க்க அறிஞர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

அதுபோக ஹஜ்ஜு பெருநாள் தினத்தை முன்னிட்டு குர்பானி என்பதும் கூட ஒருவருக்கு "கட்டாய கடமையா" அல்லது வசதி வாய்ப்பு இருப்பின் மட்டும் அல்லாஹுக்காக என்று "கூடுதல் நன்மை" சேர்க்கும் விஷயமாக செய்யப்படும் ஒரு அனுஷ்டானமா என்ற மார்க்க அடிப்படை உணர்ந்து செயற்படுவது நலம்.

மார்க்க அடிப்படையில் எதை செய்தாலும் அதன் முழு அடிப்படை உணர்ந்து எதற்காக?, ஏன்?, எவ்வாறு? என மார்க்க வரையறை உணர்ந்து அல்லாஹுக்காக மட்டுமே என செய்வது தான் ஆத்மார்த்தமான புரிதலுடன் செய்வது போன்று ஆகும், அப்போது தான் அதன் பலனும் நமக்கு முழுமையாக கிட்டும்.

அது அல்லாமல் ஏனோ தானோ என்று அடிப்படை உணராது செய்வது என்பது, என்னவென்றே அர்த்தம் உணராது எவறோ ஒருவர் புரியாது கேட்கும் வேண்டுதலுக்கு வெறுமனே கடமைக்கு மேம்போக்காக ஆமீன் சொல்லிவிட்டு கடமையை தீர்த்துக் கொள்வது போன்றாகும்...

செய்வதை எதற்கு எப்படி என்று தெரிந்து முழுமையாக புரிந்து ஆத்மார்த்தமாக நமது மறுமைக்கு பயனளிக்கும் வகையில் செய்வோம்.

அல்லாஹ் நம் அனைவரின் நல்ல அமல்களையும் ஏற்று அதன் நன்மைக்கு உரிய நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நாம் செய்யும் நல்ல அமல்களை நமக்கு பயனளிக்கும் வகையில் செய்வோமாக.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...