Saturday, September 16, 2017

Rudolf Christian Karl Diesel the inventor of Diesel Engine

1892ல் உள்ளுக்குள் வெடித்து மோட்டார் சக்தியை உற்பத்தி செய்ய முயன்று வெற்றி கண்ட ருடால்ஃப் டீசல் என்பவரது உண்மையான சரித்திர சம்பவ பின்னணியுடன் கூடிய எனக்கு தெரிந்த ஒரு ஆலோசனை.

1700 களின் மத்தியில் நிராவி சக்தி கண்டுப்பிடிக்கப்பட்டு.

1800 துவக்கத்தில் ரெயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தொழிற்சாலைக்கு இயந்திர சக்தி என்று உபயோகப்பட்டு வந்தது...

1851 இல் ஸ்காட்லாந்தில் முதன் முறையாக ஜேம்ஸ் யெங் (James Young) என்கிற ஒரு விஞ்ஞானி நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து எரிபொருள் தயாரிப்பில் ஈடுபடுகிறார், அப்படி தான் கெரோசின், பெட்ரோல் எல்லாம் கிடைக்கப்பெற்றது.

இதிலிருந்து ஆவியாக வெளியேறிய தேவையற்ற ஆவியானது distillate என்கிற பெயரில் தேவையற்ற திரவமாக தெருவில் கொட்டப்பட்டது.

1892 ருடால்ஃப் டீசல் என்கிற நம்மை போன்ற சாதாரண ஏழ்மையான எளிமையான நடுத்தர குடும்பத்தில் பிறந்த நபர் சமூகம் இந்த கடினமான நிலக்கரி ~ நீராவி சக்தியில் இருந்து விடுப்பட்டு மேன்மை அடைய வேண்டும் என்று ஒரு புதிய வடிவ இயந்திர சக்தி உண்டுப்பன்ன கூடிய உள்ளுக்குள் தானாகவே கடலை எண்ணெய் கொண்டு எரிந்து செயற்படும் எஞ்சின் ஒன்றை வடிவமைக்க முயன்று வெற்றியும் பெறுகிறார்.

1894ல் உபயோகமற்று தூக்கி எறியப்பட்ட  டிஸ்டிலேட் எண்ணெய்யை எடுத்து உபயோகித்து வெற்றி அடைகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவரது கண்டுப்பிடிப்பு தான் இந்த உலகத்தின் தொழில் மற்றும் தனிநபர் வாழ்வாதார முன்னேற்றத்தை தலைகீழாக புரட்டி போட்டது மட்டுமல்லாமல் பன்மடங்காக மாற்றி பெருக செய்தது எனலாம்.

இன்றுவரை அவரது இந்த பாதுகாப்பான கண்டுபிடிப்பை முறியடிக்கும் விதமாக யாருமே வேறு ஒரு எஞ்சினை கண்டுபிடிக்கவே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

அதன் அடிப்படையில் தான் அவர் கண்டுபிடித்த எஞ்சினுக்கு அவரது பெயரும் அவரது எஞ்சினில் உபயோகப்படும் எரிபொருளான டிஸ்டிலேட் என்ற எண்ணெய்க்கு டீசல் என்ற பெயரும் வைக்கப்பட்டு அழைக்கப் படுகிறது.

இன்னும்சொல்லப்  போனால் அவரை 1890 களில் ருடால்ஃப் டீசலை ஏளனம் செய்தவர்களால் அவரது பெயரான டீசல் என்பது தேவையற்றது, பிரயோஜனம் அற்றது வேலைக்கு ஆகாதது என்று தன்மையை விவரிக்க கூடிய adjective ஆக உரிச்சொல்லாக அடைமொழியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

அப்படியாக ஆரம்பத்தில் ஏளனம் செய்யப்பட்டு உதாசீனம் செய்யப்பட்ட கண்டுப்பிடிப்பு, நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்ட கண்டுப்பிடிப்பானது..... இன்றுவரை கடல்வழி சரக்கு போக்குவரத்துக்கு பெறும் இன்றியமையாத பங்காற்றி வருகிறது.

நீங்களும் இப்படியாக அன்றாட மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கான புதிய சிந்தனைகள் மூலம் கண்டுப்பிடிப்புகளை வெளிப்படுத்துங்கள்..

பிறர் கிண்டல் கேலி செய்வார்கள் என்று வெட்கித்து தயங்காதீர்கள்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்,
அறியாமை ஆற்றாமை இல்லை என்கிற அடிப்படையில். சிந்திப்போம் செயற்படுவோம்.
நாகூர் தீன்
08 செப்டம்பர், 2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...