Saturday, September 16, 2017

அனிதாவின் மரணம் தூண்டுதல் அடிப்படையில் நிகழ்ந்த கொலையா அல்லது தற்கொலையா?

இந்த நீட் தொடர்பான விஷ்யம் என்பது உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இருபுறமும் வெட்ட கூடிய double edged sword ஆக மாறி இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், நீட் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பாக வழக்கில் ஆஜாராகி இருந்த நிலையில்..

மற்றொரு புரம் நீட்டில் தோல்வியுற்ற அனிதாவும் அவ்வழக்கில் இணைக்கப்பட்டு தான் 1176 எடுத்த நிலையில் நீட்டில் 720க்கு வெறும் 86 மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் நீட்டை ஒரு வருட காலத்துக்கு ஒத்திவைத்தால் தனக்கு மருத்துவ சீட்டு கிடைக்கும் எனவே  ஒத்திவைக்க வேண்டும் கோரி இருந்தார்.

அப்படி ஒரு வருடம் ஒத்தி வைத்தால் ஏற்கனவே தேர்வு எழுதிய S Anitha உட்பட ஏனைய தமிழ் நாட்டு ஸ்டேட் போர்ட் மற்றும் இன்ன பிற மாணவர்களின் நிலை என்னவாகுவது அவர்களின் மருத்துவ படிப்புக்கான இலச்சியத்தை என்ன செய்வது என்று நளினி சிதம்பரம் வாதாடி இருந்தார்.

ஆக ஒருவருடம் ஒத்திவைத்து இருந்து அதனால் மருத்துவ கனவு பாதிக்கப்பட்ட வேறொரு ஏழை மாணவன் யாராவது தற்கொலை செய்து இருந்தால் இதே அளவு சென்சிடைஸ் செய்யப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டு இருக்குமா... சந்தேகம் தான்... என்ன...

ஒரு புறம் அனிதா தற்கொலை செய்துக் கொள்ளவில்லை மாறாக நீட் தேர்வு அனிதாவி கொலை செய்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்கிறார்கள்...

மற்றொரு புறம்.... இவ்வளவு துணிச்சல் தகிரியத்துடன் மோடிவேடடாக இருந்த அனீதா எப்படி இறுதியில் தற்கொலைக்கு மனமாறினார் என்ற கேள்விக்கு....

அவருக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பேசிய திரைப்பட துறையை சேர்ந்த ஒருவர் கூறுகிறார்...

ஒருகால் தற்கொலை மூலம் தமக்கு நேர்ந்ததை இவ்வுலக்த்துக்கு எடுத்து சொல்ல நினைத்திருக்க கூடும்....

இது கிட்ட தட்ட முத்துக்குமார் செய்த தியாகம் போல என்று குறிப்பிட்டு விட்டு வேறு ஒரு இடத்தில்....

அவர் தோழிகள் இடத்தில் அரசல் பரசலாக பேச்சு வாக்கில் தான் இவ்வாறு செய்ய இருப்பதை சூட்சமமாக தெரியப்படுத்தி இருக்கிறார் என்றும் விவரிக்கிறார்.

அது போக கூடுதலாக அனிதாவின் வட்டாரத்தில் முத்து குமார் தெரிவு செய்த முடிவை நினைவலையாக பேச்சு வாக்கில் நினைவுப் படுத்தி இருக்க கூடும் எனவும் அதுவே துணிச்சலாக விடா முயற்சியாக் பேசிய அனீதாவின் இறுதி கட்டத்தில் அவரது மனநிலையில் தற்கொலையை ஒரு அதிர்வலை ஏற்படுத்த உதவும் ஆயுதமாக தனக்கு நிகழ்ந்த அநீதி இனி யாருக்கும் நிகழ கூடாது என கருதி தற்கொலையை நோக்கி நகர்த்தி இருக்க கூடும் என்றும் பேசப் படுகிறது...

தமிழக காவல்துறை தான் முத்துக்குமார். பற்றிய நினைவை அனித்தாவுக்கு ஏற்படுத்தி தற்கொலை ஒரு அதிர்வலையை உண்டுபண்ணும் என வித்திட்டது யார் எனறு புலனாய்வு செய்ய வேண்டும்.

வேற என்னங்க செய்வா ஒருத்தி... இன்னொரு வருடம் எப்படி காத்திருக்க முடியும் என தற்கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியும் இருந்தார்.

தற்கொலையை மறைமுகமாக தூண்டுவதும் கொலை செய்யும் அளவுக்கு கொடூர குற்றம் தானே.

இது ஒரு புறம் இருக்க, இதே நீட்டின் மூலம் தேர்ச்சி பெற்ற இன்னும் சில ஏழை  SC ST மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கவும் தான் செய்துள்ளது...

அப்படி ஒருகால் அனிதாவுக்காக ஒரு வருடம் ஒத்தி வைத்து இருந்தால் அந்த SC ST மாணவர்களின் நிலை என்னவாக ஆகி இருக்குமோ, அதுவும் தற்கொலை செய்து இருந்தால், அப்போது யார் கொலை செய்ததாக கூறுவார்கள்?

சிந்திக்க வேண்டுகிறேன்.
சமூக அக்கறையுடன் 
நாகூர் தீன்
02/09/2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...