இவர் சொல்லும் அதே அடிப்படையில் தான் எந்த ஒரு தேர்விலும் நுழைவு தேர்விலும், IAS , IPS தேர்விலும் கூட இன்னும் சொல்ல போனால் அகில இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கூட முதல் 15 இடத்தையோ அல்லது முதல் 15% இடத்தையோ பிடிக்க வேண்டுமானால் சிறந்த முறையில் கோச்சிங் பெற்றால் தான் முடியும்...
ஏன் என்றால் முக்கியத்துவம் கூட கூட 50,000 சீட்டுக்கு 15 லெட்சம் பேர் போட்டி போடும் சூழல் உருவாகும் போது...
செலக்ஷன் பிராஸசும் சர்வைவல் ஒஃப் தி பிட்டஸ்ட் என்ற அடிப்படையில் தான் கடினமாக்கப்படும்.
அப்படி கடினமானால் பிரத்யேக பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக ஆகிபோகிறது.
ஆக முதல் பத்து இடம் அல்லது பத்து சதவிகிதம் இடம் பிடிக்க வேண்டும் என்றால் தான்... அது கூட if you don't want to take any chances or risk என்றால் தான்..
அப்படி இல்லாமல் பூவா தலையா எது வந்தாலும் பரவாயில்லை சுயமாக முயன்று பார்ப்போம்...
அது கூட 15% ஆல் இந்திய சீட் கோட்டா போக தமிழ்நாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 85% சீட்டில் எனது சாதி ஒதுக்கீட்டு கட் ஆஃப் மார்க்கு அடிப்படையில் சீட்டு கிடைத்தால் போதும் என்று முடிவில் ரிஸ்க் எடுக்க விரும்பினாலே ஒழிய கோச்சிங் அவசியப்படாது....
இங்க ரிஸ்க் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு கட் ஆஃப் கோட்டாவிலும் கூட கூடுதல் மதிப்பெண் எடுத்து அதிகமான ஆட்கள் தேர்ச்சி பெற்றால் இவர் பின் தள்ள படுவார் என்பதால்.
அதே போன்ற நியதி தான் +2 தேர்விலும் survival of the fittest அடிப்படை தான், 1200 க்கு 1150 க்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் கோச்சிங் கண்டிப்பாக அவசியப்படுகிறது...
அதுவும் எப்பேற்பட்ட கோச்சிங்... +1 ஆண்டின் பாடத்தை சுருக்கமாக நடத்தி முடித்துவிட்டு +2 பாடத்தை +1 வகுப்பறையிலேயே சில பள்ளிகூடங்கள் காலாண்டு முதலே துவக்கி +2 அரசு போர்ட் பரீட்சைக்கு உண்டான கோச்சிங்க கொடுக்க ஆறம்பித்து விடுகிறார்கள்...
நீட் நுழைவுத்தேர்வுக்கு என்று பிரத்யேகமாக கோச்சிங் கொடுத்தால் தான் முடியும், அது எங்க டவுனில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் (கிராமத்தில் மேல் நிலை பள்ளி கிடயாது) என்று சப்பை காரணம் சொல்லும் இவர்கள் யாரும் தனியாக பிரத்யேகமாக பள்ளி கூடத்திலேயே காசுக்காக டியூஷன் கோச்சிங் வைத்து நடத்தாமல் இல்லை...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கூடங்கள் பல இதற்கு என்று பிரத்யேகமாக துவக்கப்பட்டு கடந்த காலத்தில் +2 தேர்ச்சியில் கோச்சிங் மூலம் முதல் இடம் பிட்த்து செய்தி தாள்களில் பெருமை பட்டுக்கொண்டது...
ஆக இனி அவ்வகையான +2 1200 க்கு 1198 எல்லாம் நீட் தேர்வில் பயனளிக்காது என்பதாலும் அவர்களின் பிழைப்பில் மன்விழும் என்பதால் இப்படியாக பிதற்றிக் கொண்டு வருகிறார்கள்.
கண்டிப்பாக +2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் +1 பாடத்தைல் போதிய கவனம் செலுத்தாததே அவர்கள் #NEET தேர்வில் தோற்று போக காரணமாக இருந்தது என்றே கூற வேண்டும்.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
06 செப்டம்பர், 2017
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
06 செப்டம்பர், 2017