Sunday, September 17, 2017

அபு பக்கர் சித்தீக் (ரலி) என்றழைக்கப்பட்ட அப்துல்லாஹ் அவர்களின் மனைவிகளும் பிள்ளைகளும்.

அபு பக்கர் சித்தீக் (ரலி) என்றழைக்கப்பட்ட அப்துல்லாஹ் அவர்களின் மனைவிகளும் பிள்ளைகளும்.

அபு பக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஆறு குழந்தைகள் அதில் மூன்று மகன்கள் மூன்று மகள்கள்.

முதல் திருமணம்:


அவர்களின் முதல் திருமணம் குதைலா என்ற பெண்ணுடன் நடைபெற்றது.. குதைலா மூலியமாக இரண்டு பிள்ளைகளை பெற்றார்கள்.

  1. அஸ்மா 
  2. அப்துல்லாஹ்

குதைலா இஸ்லாத்தை ஏற்கவில்லை, அபு பக்கரும் குதைலாவை விவாகரத்து செய்து விடுகிறார்கள். ஹிஜ்ராத்துக்கு பிந்திய ஒரு காலகட்டத்தில் குதைலா மதீனாவுக்கு தனது மகள் அஸ்மாவை (ரலி) பார்க்க வருகிறார்... அஸ்மாவும் நபி(ஸல்) அவர்களிடம் தனது தாயை சந்திக்கலாமா தன்னுடன் தங்கவைக்கலாமா என்று கேட்டார்கள் அதற்க்கு நபி (ஸல்) அவர்களும் அனுமதி தந்தார்கள்.

இரண்டாம் திருமணம்:


உம்மு ருமன் (ரலி) என்பவர் அபு பக்கரின் இரண்டாவது திருமண மனைவி. அவர் ஆமிர் பின் உமைர் என்பவர்களுடைய மகள். அவர் அப்துல்லாஹ் பின் ஹாரித் என்ற அபு பாக்கரின் நண்பரை திருமணம் முடித்து அவருக்கு துஃபைல் என்கிற பிள்ளையை பெற்றுகொடுத்து, பின்னர் அவர் மரணிக்கவே அபு பக்கர் உம்மு ரூமனை திருமணம் செய்கிறார்கள். இவர் அபு பக்கருக்காக (ரலி)

  1. அப்துர்ரஹ்மான் மற்றும் 
  2. ஆய்ஷாவை ஈன்று எடுக்கிறார்.

அபு பக்கர் (ரலி) இஸ்லாத்தை தழுவியதை தொடர்ந்து இவரும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்கிறார். மதீனாவில் மரணித்து போகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திக் கொடுத்து அவர்களை சிறப்பிக்கிறார்கள். அதுவல்லாமல் "உங்களில் யாராவது சொர்கத்து அழகியை பார்க்க வேண்டுமெனில் உம்மு ரூமனை பாருங்கள் என்று கூறியும் சிறப்பித்தார்கள்.

மூன்றாம் திருமணம்:


ஹபீபா (ரலி) என்பவர் அபு பக்கரின் மூன்றாவது திருமண மனைவி. மதீனாவில் தன்னுடன் சகோதர பிணைப்பு செய்யப்பட்ட Zசயித் பின் காரிஜா அன்சாரி அவர்களின் மகள். உம்மு ரூமான் (ரலி) மதினாவில் குடிஇருக்கையில் ஹபீபா (ரலி) மதினாவின் சுற்றுவட்டார பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.

அபு பக்கர் அவர்களுக்கு,

  1. உம்ம குல்சும் 

என்ற மகளை உண்டாகி அவரது மரணத்திற்கு பின் ஈன்று எடுக்கிறார்.

நான்காம் திருமணம்:


அஸ்மா பின்து உமைஸ், அபு பக்கர் (ரலி) அவர்களின் நான்காம் மனைவி. இவர்கள் ஹாஃப்பர் என்கிற அலி (ரலி) அவர்களின் சகோதரரை திருமணம் செய்து அபிசினியா புலம் பெயர்ந்து சென்றுவர். ஜாஃபருக்காக முஹம்மத், அப்துல்லாஹ் மற்றும் அ'ஃன் என்ற மூன்று பிள்ளைகளை பெற்றவர். முஃதா போரில் ஜாஃபர் ஷஹீதாகி போகவே அபு பக்கர் (ரலி) அவர்களை திருமணம் செய்கிறார்கள்.

அதை தொடர்ந்து அபூபக்கருக்காக ஒரு ஆண் பிள்ளையை பெற்று எடுக்கிறார்கள்...

  1. முஹம்மத் பின் அபு பக்கர்

  அஸ்மாவின் இரண்டு மகன்களுக்குமே "முஹம்மத்" என்ற பெயர் இடுகிறார்கள், ஒருவர் ஹாஃப்பர் (ரலி) அவர்களின் மகனார் மற்றொருவர் அபு பக்கர் (ரலி) அவர்களின் மகனார்.

  அபு பக்கரின் மறைவுக்கு பின் அவரது விருப்பத்துக்கு இணங்க அஸ்மா (ரலி) தான் அபு பக்கரின் (உடலை) ஜனாஸாவை நல்லடக்கத்துக்கு எடுத்து செல்ல தயார் செய்கிறார்கள்.

அதன் பின்னர் சிறுது மாதம் கழித்து அலி பின் அபு தாலிப் (ரலி) அவர்களை திருமணம் செய்து "எஹ்யா" என்ற மகனை அவருக்காக ஈன்று எடுக்கிறார்கள்.

மகன்கள்:

  • அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்  (ரலி):

வரலாற்று குறிப்புகள் பிரகாரம் அபு பக்கர் அவர்களின் மூத்த மகன், ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர்ரஹ்மான் இஸ்லாத்தை தழுவி மதீனாவுக்கு வரவில்லை. பத்ரு போரில் மக்கத்து குறைஷிகளுடன் சேர்ந்து போரிட்டு பின்னர் சில காலம் கழித்து ஹுதைபியா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் பல போர்களில் பங்குபெற்றார்... எமாமா போரில் பங்குபெற்று நான் தான் அடுத்த இறைதூதர் என்று பிரகடனம் செய்த முசைலமாவை முறியடிக்க போரிட்டு முசைலமாவின் போர் தளபதி மஹக்கம என்பவரை போரில் வீழ்த்தி கொலைசெய்தார்.

  • அப்துல்லாஹ் பின் அபூபக்கர் (ரலி):

அபு பக்கர் (ரலி) அவர்களின் இரண்டாவது மகனான அப்துல்லாஹ் குதைலாவுக்கு பிறந்தவர் ஆதிகா என்ற அழகிய பெண்ணை திருமணம் முடித்து இருந்தார்... ஆதிகா என்பவர் zசெய்த பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பரின் மகள்  உமர் (ரலி) அவர்களின் கசின். மிக பெரிய பேர் அழகியாக இருந்தார். அப்துல்லாவும் ஆதிகாவின் அழகில் மயங்கி மார்க்க கடமைகள் நிறைவேற்றாதவாரக இருந்து வந்தார். தகப்பனாராகிய அபு பக்கரும் அவரை தொடர்ந்து கடுமையாக எச்சரித்தும் வந்தார் ஆனாலும் அப்துல்லாஹ் ஆதீகாவின் மீது கொண்டிருந்த காதல் மயக்கத்தில் இருந்து மீண்டு வரா முடியாமல் மூழ்கி இருக்கவே இறுதியாக தனது மகனிடம் மூன்றே நாட்களில் நீ ஆதிகாவை விவாகரத்து செய்து விடவேண்டும் என்பதாக கண்டிப்புடன் கூறிவிடுகிறார்.

அதையடுத்து மகனார் அப்துல்லாஹ்வும் விவாகரத்து செய்து விடுகிறார்க ஆனால் புத்தி பேதளித்தவராக சதா ஆதிகாவின் நினைப்பிலேயே உண்ணாமல் பருகாமல் உறங்காமல் அதிகாவின் இழப்பை நினைத்து அழுது புலம்பியவராக இருக்கிறார். இது பின்னர் நபி (ஸல்) அவர்களின் கவனத்துக்கு வரவே, திருமண விவாகரத்தை ரத்து செய்து இருவரையும் இணைத்து வைக்கிறார்கள். அது முதல் அப்துல்லாஹ் கொண்டிருந்த அதிகா மீதான காதல் தனது மார்க்க கடமைகளில் குறிக்கிடாமல் மிக கவனத்துடன் பார்த்துக்கொண்டார் என்ற சரித்திர குறிப்புகள் இருக்கிறது... பின்னர் அப்துல்ல்லாஹ் பின் அபு பக்கர் பல போர்களில் கலந்துக்கொள்கிறார் தாயிஃப் போரில் காயப்பட்டு 633 வருடம் இறந்து போகிறார். அதன் பிறகு அபு பக்கர் கலிபாவாக இருந்த முதல் வருடம் ஆதிகாவை உமர் (ரலி) அவர்கள் மறுமணம் செய்துக் கொள்கிறார்கள்.

  • முஹம்மத் இப்ன் அபூபக்கர்:

முஹம்மத் பின் அபு பக்கருக்கு இரண்டு அல்லது மூன்று வயதாக இருக்கும்போதே அபு பக்கர் (ரலி) அவர்கள் இறந்து விடுகிறார்கள்.

அலி (ரலி) அவர்கள் முஹம்மத் பின் அபுபக்கரை இரண்டு அல்லது மூன்று வயது சிறு கைக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே தத்தெடுத்து பிரியமுடன் வளர்க்கிறார்கள்...
இந்த முஹம்மத் இப்னு அபு பக்கர் தான் பின்னர் காலத்தில் எகிப்து ஆளுனர் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களுடன் புகார் சொல்ல்கிறார், உஸ்மான் (ரலி) அவர்கள்  

நடவடிக்கை தனக்கு தோதாக திருப்திகரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் எகிப்தில் இருந்து 700 பேர் கொண்ட கிளர்ச்சியாளர்களை வரவழைத்து நீங்களே கேளுங்க என்றவாறு வரவழைத்து 40 நாட்கள் முற்றுகைக்கு பின்னர் கலீபா உஸ்மான் கொலை செய்யப்பட்டார்கள்.

அலி (ரலி) அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு பின்னர்   பின்னர் கலிபாவாக ஆன     அலி(ரலி) அவர்கள் முஹம்மத் பின் அபு பக்கர எகிப்து பிராந்தியத்தின் ஆளுனராக நியமிக்கிறார்கள் பின்னர் அமர் பின் ஆஸ் (ரலி) அவர்களால் முஆவியா (ரலி) அவர்களின் கட்டளை அடிப்படையில் போரிட்டு வீழ்த்தி கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்படுகிறார்.

மகள்கள்:

  • அஸ்மா (ரலி):

அபு பக்கரின் மகள்களில் மூத்தவர் அஸ்மா (ரலி) பின்னர் இஸ்லாத்தை அபு பக்கருடன் ஏற்க மறுத்த குதைலா என்ற அபு பக்கரின் மனைவிக்கு பிறந்தவர். நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தின் போது அபூபக்கர் (ரலி) அவர்களுடன் குகைக்குள் தங்கி இருந்து போது அஸ்மா தான் இரவு நேரத்தில்  இருவருக்கும் உணவு கொண்டு வந்து கொடுப்பவராக இருந்தார்.

நபி (ஸல்) அவர்களும் அபு பக்கர் (ரலி) அவர்களும் குகையை விட்டு புறப்பட தயாராகும்போது அஸ்மா தனது ஆடையில் பெல்ட் போல நீளமான துணியை கிழித்து இரண்டு பெல்ட் போன்று கட்டி தந்தார். இந்த சிறந்த யோசனை மற்றும் யுக்தியை நபி(ஸல்) அவர்கள் பாராட்டி "இரட்டை பெல்ட்டுக்கு சொந்தக்காரர்" என்று சிறப்பிச்சு வர்ணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மச்சான் ஜுபைரை மணமுடித்து இருந்தார் அஸ்மா. இருவருமாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் முஸ்லீம்கள் மத்தியில் முதலாவதாக ஒரு குழந்தையை ஈன்று அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்.

கர்பலாவின் பெரும் துயரத்துக்கு பின்னர் அப்துல்லாஹ் மக்காவில் இருந்தவண்ணம் தன்னை தானே கலீபாவாக அறிவித்ததை அடுத்து உமையாக்கள் மக்காவை நோக்கி படையெடுத்தார்கள்.

அதை தொடர்ந்து அப்துல்லாஹ் தனது என்பது வயதான தாயாரிடம் ஆலோசனை செய்கிறார்கள்...

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் உனது நோக்கம் உண்மையானது உன்னதமானது என்று நீ நம்பிக்கை கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை எதிர்த்து போரிட்டு மரணிக்கவும் தயாராக இருக்கவேண்டும், அப்படியல்லாமல் உனது நோக்கம் வெறும்ந்தா உலக ஆதாயமாக இருக்குமேயானால் உனது எதிரிகளுடன் நீ சமரசம் செய்துக்கொள் என்பதாக கூறி இருக்கிறார்கள்.

அஸ்மா விற்கும் ஜுபைருக்கும் ஹிஜ்ரி முதல் ஆண்டில் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கொலைசெய்யப்பட்டு அவரது உடலை பொதுமக்கள் பார்வைக்கு தூக்கில் இட்டிருந்தார்கள்.

  • ஆயிஷா (ரலி):


ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி தான் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் நபி (ஸல்) அவர்களின் இளம் மனைவி, மிக சிறிய வயதிலேயே விதவையாகியவர். நிறையபல ஹதீஸ்களை நமக்கு பாடமாக கற்றுகொடுத்தவர்.... முஸ்லீம்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்.

  • உம்மு குல்சும்:

உம்மு குல்சும் என்பவர் அபு பக்கர் (ரலி) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில மாதங்களில் பிறந்தவர்... பின்னர் காலத்தில் தல்ஹா பின் உபைதுல்லாவை திருமணம் செய்கிறார்கள். அவரது மறைவுக்கு பின்னர் அவரது சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் உபைதுல்லாவை மறுமணம் முடிக்கிறார்கள்.


Saturday, September 16, 2017

அனிதாவின் மரணம் தூண்டுதல் அடிப்படையில் நிகழ்ந்த கொலையா அல்லது தற்கொலையா?

இந்த நீட் தொடர்பான விஷ்யம் என்பது உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இருபுறமும் வெட்ட கூடிய double edged sword ஆக மாறி இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், நீட் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பாக வழக்கில் ஆஜாராகி இருந்த நிலையில்..

மற்றொரு புரம் நீட்டில் தோல்வியுற்ற அனிதாவும் அவ்வழக்கில் இணைக்கப்பட்டு தான் 1176 எடுத்த நிலையில் நீட்டில் 720க்கு வெறும் 86 மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் நீட்டை ஒரு வருட காலத்துக்கு ஒத்திவைத்தால் தனக்கு மருத்துவ சீட்டு கிடைக்கும் எனவே  ஒத்திவைக்க வேண்டும் கோரி இருந்தார்.

அப்படி ஒரு வருடம் ஒத்தி வைத்தால் ஏற்கனவே தேர்வு எழுதிய S Anitha உட்பட ஏனைய தமிழ் நாட்டு ஸ்டேட் போர்ட் மற்றும் இன்ன பிற மாணவர்களின் நிலை என்னவாகுவது அவர்களின் மருத்துவ படிப்புக்கான இலச்சியத்தை என்ன செய்வது என்று நளினி சிதம்பரம் வாதாடி இருந்தார்.

ஆக ஒருவருடம் ஒத்திவைத்து இருந்து அதனால் மருத்துவ கனவு பாதிக்கப்பட்ட வேறொரு ஏழை மாணவன் யாராவது தற்கொலை செய்து இருந்தால் இதே அளவு சென்சிடைஸ் செய்யப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டு இருக்குமா... சந்தேகம் தான்... என்ன...

ஒரு புறம் அனிதா தற்கொலை செய்துக் கொள்ளவில்லை மாறாக நீட் தேர்வு அனிதாவி கொலை செய்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்கிறார்கள்...

மற்றொரு புறம்.... இவ்வளவு துணிச்சல் தகிரியத்துடன் மோடிவேடடாக இருந்த அனீதா எப்படி இறுதியில் தற்கொலைக்கு மனமாறினார் என்ற கேள்விக்கு....

அவருக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பேசிய திரைப்பட துறையை சேர்ந்த ஒருவர் கூறுகிறார்...

ஒருகால் தற்கொலை மூலம் தமக்கு நேர்ந்ததை இவ்வுலக்த்துக்கு எடுத்து சொல்ல நினைத்திருக்க கூடும்....

இது கிட்ட தட்ட முத்துக்குமார் செய்த தியாகம் போல என்று குறிப்பிட்டு விட்டு வேறு ஒரு இடத்தில்....

அவர் தோழிகள் இடத்தில் அரசல் பரசலாக பேச்சு வாக்கில் தான் இவ்வாறு செய்ய இருப்பதை சூட்சமமாக தெரியப்படுத்தி இருக்கிறார் என்றும் விவரிக்கிறார்.

அது போக கூடுதலாக அனிதாவின் வட்டாரத்தில் முத்து குமார் தெரிவு செய்த முடிவை நினைவலையாக பேச்சு வாக்கில் நினைவுப் படுத்தி இருக்க கூடும் எனவும் அதுவே துணிச்சலாக விடா முயற்சியாக் பேசிய அனீதாவின் இறுதி கட்டத்தில் அவரது மனநிலையில் தற்கொலையை ஒரு அதிர்வலை ஏற்படுத்த உதவும் ஆயுதமாக தனக்கு நிகழ்ந்த அநீதி இனி யாருக்கும் நிகழ கூடாது என கருதி தற்கொலையை நோக்கி நகர்த்தி இருக்க கூடும் என்றும் பேசப் படுகிறது...

தமிழக காவல்துறை தான் முத்துக்குமார். பற்றிய நினைவை அனித்தாவுக்கு ஏற்படுத்தி தற்கொலை ஒரு அதிர்வலையை உண்டுபண்ணும் என வித்திட்டது யார் எனறு புலனாய்வு செய்ய வேண்டும்.

வேற என்னங்க செய்வா ஒருத்தி... இன்னொரு வருடம் எப்படி காத்திருக்க முடியும் என தற்கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியும் இருந்தார்.

தற்கொலையை மறைமுகமாக தூண்டுவதும் கொலை செய்யும் அளவுக்கு கொடூர குற்றம் தானே.

இது ஒரு புறம் இருக்க, இதே நீட்டின் மூலம் தேர்ச்சி பெற்ற இன்னும் சில ஏழை  SC ST மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கவும் தான் செய்துள்ளது...

அப்படி ஒருகால் அனிதாவுக்காக ஒரு வருடம் ஒத்தி வைத்து இருந்தால் அந்த SC ST மாணவர்களின் நிலை என்னவாக ஆகி இருக்குமோ, அதுவும் தற்கொலை செய்து இருந்தால், அப்போது யார் கொலை செய்ததாக கூறுவார்கள்?

சிந்திக்க வேண்டுகிறேன்.
சமூக அக்கறையுடன் 
நாகூர் தீன்
02/09/2017

நீட் தேர்வு சிலபஸும் ~ தமிழ்நாடு அரசு கல்வி இயக்க பாடநூல்களும்.

கீழே நான் குறிப்பிட்டுள்ளது நீட் தேர்வு சிலபஸ் மற்றும் அதில் குறிப்பிட பட்டுள்ள தலைப்புகளுக்கு ஏற்றார் போல உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் அதாவது ஸ்டேட் போர்ட் புத்தகத்தின் லிங்க்.. 

நீட் சிலபசுக்கு நெருங்கி இருக்கான்னு அந்த லிங்க பார்த்துவிட்டு பேசுங்க பிளீஸ்...

PHYSICS

நீட் சிலபஸ்
CLASS XI
1. Physical world and measurement
2. Kinematics
3. Laws of Motion
4. Work, Energy and Power
5. Motion of System of Particles and Rigid Body
6. Gravitation
7. Properties of Bulk Matter
8. Thermodynamics
9. Behaviour of Perfect Gas and Kinetic Theory
10. Oscillations and Waves


நீட் சிலபஸ்
CLASS XII
1. Electrostatics
2. Current Electricity
3. Magnetic Effects of Current and Magnetism
4. Electromagnetic Induction and Alternating Currents
5. Electromagnetic Waves
6. Optics
7. Dual Nature of Matter and Radiation
8. Atoms and Nuclei
9. Electronic Devices


CHEMISTRY:

நீட் சிலபஸ்
CLASS XI
1. Some Basic Concepts of Chemistry
2. Structure of Atom
3. Classification of Elements and Periodicity in Properties
4. Chemical Bonding and Molecular Structure
5. States of Matter: Gases and Liquids
6. Thermodynamics
7. Equilibrium
8. Redox Reactions
9. Hydrogen
10. s-Block Element (Alkali and Alkaline earth metals)
11. Some p-Block Elements
12. Organic Chemistry- Some Basic Principles and Techniques
13. Hydrocarbons
14. Environmental Chemistry

நீட் சிலபஸ்
CLASS XII
1. Solid State
2. Solutions
3. Electrochemistry
4. Chemical Kinetics
5. Surface Chemistry
6. General Principles and Processes of Isolation of Elements
7. p- Block Elements
8. d and f Block Elements
9. Coordination Compounds
10. Haloalkanes and Haloarenes
11. Alcohols, Phenols and Ethers
12. Aldehydes, Ketones and Carboxylic Acids
13. Organic Compounds Containing Nitrogen
14. Biomolecules
15. Polymers

ஸ்டேட் போர்ட் பாட புத்தகம்
Chemistry in Everyday Life
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-EM-1.pdf
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-EM-2.pdf

BIOLOGY

நீட் சிலபஸ்
CLASS XI
1. Diversity in Living World
2. Structural Organisation in Animals and Plants
3. Cell Structure and Function
4. Plant Physiology
5. Human physiology


நீட் சிலபஸ்
CLASS XII
1. Reproduction
2. Genetics and Evolution
3. Biology and Human Welfare
4. Biotechnology and Its Applications
5. Ecology and environment

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன் 
3 செப்டம்பர், 2017

நக்கீரன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த Prince Gajendra Babu விற்கு என் மறுப்பு


இவர் சொல்லும் அதே அடிப்படையில் தான் எந்த ஒரு தேர்விலும் நுழைவு தேர்விலும், IAS , IPS தேர்விலும் கூட இன்னும் சொல்ல போனால் அகில இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கூட முதல் 15 இடத்தையோ அல்லது முதல் 15% இடத்தையோ பிடிக்க வேண்டுமானால் சிறந்த முறையில் கோச்சிங் பெற்றால் தான் முடியும்...

ஏன் என்றால் முக்கியத்துவம் கூட கூட 50,000 சீட்டுக்கு 15 லெட்சம் பேர் போட்டி போடும் சூழல் உருவாகும் போது...

செலக்‌ஷன் பிராஸசும் சர்வைவல் ஒஃப் தி பிட்டஸ்ட் என்ற அடிப்படையில் தான் கடினமாக்கப்படும்.

அப்படி கடினமானால் பிரத்யேக பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக ஆகிபோகிறது.

ஆக முதல் பத்து இடம் அல்லது பத்து சதவிகிதம் இடம் பிடிக்க வேண்டும் என்றால் தான்... அது கூட if you don't want to take any chances or risk என்றால் தான்..

அப்படி இல்லாமல் பூவா தலையா எது வந்தாலும் பரவாயில்லை சுயமாக முயன்று பார்ப்போம்...

அது கூட 15% ஆல் இந்திய சீட் கோட்டா போக  தமிழ்நாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 85% சீட்டில் எனது சாதி ஒதுக்கீட்டு கட் ஆஃப் மார்க்கு அடிப்படையில் சீட்டு கிடைத்தால் போதும் என்று முடிவில் ரிஸ்க் எடுக்க விரும்பினாலே ஒழிய கோச்சிங் அவசியப்படாது....

இங்க ரிஸ்க் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு கட் ஆஃப் கோட்டாவிலும் கூட கூடுதல் மதிப்பெண் எடுத்து அதிகமான ஆட்கள் தேர்ச்சி பெற்றால் இவர் பின் தள்ள படுவார் என்பதால்.

அதே போன்ற நியதி தான் +2 தேர்விலும் survival of the fittest அடிப்படை தான், 1200 க்கு 1150 க்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் கோச்சிங் கண்டிப்பாக அவசியப்படுகிறது...

அதுவும் எப்பேற்பட்ட கோச்சிங்... +1 ஆண்டின் பாடத்தை சுருக்கமாக நடத்தி முடித்துவிட்டு +2 பாடத்தை +1 வகுப்பறையிலேயே சில பள்ளிகூடங்கள் காலாண்டு முதலே துவக்கி +2 அரசு போர்ட் பரீட்சைக்கு உண்டான கோச்சிங்க கொடுக்க ஆறம்பித்து விடுகிறார்கள்...

நீட் நுழைவுத்தேர்வுக்கு என்று பிரத்யேகமாக கோச்சிங் கொடுத்தால் தான் முடியும், அது எங்க  டவுனில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் (கிராமத்தில் மேல் நிலை பள்ளி கிடயாது) என்று சப்பை காரணம் சொல்லும் இவர்கள் யாரும் தனியாக பிரத்யேகமாக பள்ளி கூடத்திலேயே  காசுக்காக டியூஷன் கோச்சிங் வைத்து நடத்தாமல் இல்லை...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கூடங்கள் பல இதற்கு என்று பிரத்யேகமாக துவக்கப்பட்டு கடந்த காலத்தில் +2 தேர்ச்சியில் கோச்சிங் மூலம் முதல் இடம்  பிட்த்து செய்தி தாள்களில் பெருமை பட்டுக்கொண்டது...

ஆக இனி அவ்வகையான +2 1200 க்கு 1198 எல்லாம் நீட் தேர்வில் பயனளிக்காது என்பதாலும் அவர்களின் பிழைப்பில் மன்விழும் என்பதால் இப்படியாக பிதற்றிக் கொண்டு வருகிறார்கள்.

கண்டிப்பாக +2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் +1 பாடத்தைல் போதிய கவனம் செலுத்தாததே அவர்கள் #NEET தேர்வில் தோற்று போக காரணமாக இருந்தது என்றே கூற வேண்டும்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
06 செப்டம்பர், 2017

Rudolf Christian Karl Diesel the inventor of Diesel Engine

1892ல் உள்ளுக்குள் வெடித்து மோட்டார் சக்தியை உற்பத்தி செய்ய முயன்று வெற்றி கண்ட ருடால்ஃப் டீசல் என்பவரது உண்மையான சரித்திர சம்பவ பின்னணியுடன் கூடிய எனக்கு தெரிந்த ஒரு ஆலோசனை.

1700 களின் மத்தியில் நிராவி சக்தி கண்டுப்பிடிக்கப்பட்டு.

1800 துவக்கத்தில் ரெயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தொழிற்சாலைக்கு இயந்திர சக்தி என்று உபயோகப்பட்டு வந்தது...

1851 இல் ஸ்காட்லாந்தில் முதன் முறையாக ஜேம்ஸ் யெங் (James Young) என்கிற ஒரு விஞ்ஞானி நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து எரிபொருள் தயாரிப்பில் ஈடுபடுகிறார், அப்படி தான் கெரோசின், பெட்ரோல் எல்லாம் கிடைக்கப்பெற்றது.

இதிலிருந்து ஆவியாக வெளியேறிய தேவையற்ற ஆவியானது distillate என்கிற பெயரில் தேவையற்ற திரவமாக தெருவில் கொட்டப்பட்டது.

1892 ருடால்ஃப் டீசல் என்கிற நம்மை போன்ற சாதாரண ஏழ்மையான எளிமையான நடுத்தர குடும்பத்தில் பிறந்த நபர் சமூகம் இந்த கடினமான நிலக்கரி ~ நீராவி சக்தியில் இருந்து விடுப்பட்டு மேன்மை அடைய வேண்டும் என்று ஒரு புதிய வடிவ இயந்திர சக்தி உண்டுப்பன்ன கூடிய உள்ளுக்குள் தானாகவே கடலை எண்ணெய் கொண்டு எரிந்து செயற்படும் எஞ்சின் ஒன்றை வடிவமைக்க முயன்று வெற்றியும் பெறுகிறார்.

1894ல் உபயோகமற்று தூக்கி எறியப்பட்ட  டிஸ்டிலேட் எண்ணெய்யை எடுத்து உபயோகித்து வெற்றி அடைகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவரது கண்டுப்பிடிப்பு தான் இந்த உலகத்தின் தொழில் மற்றும் தனிநபர் வாழ்வாதார முன்னேற்றத்தை தலைகீழாக புரட்டி போட்டது மட்டுமல்லாமல் பன்மடங்காக மாற்றி பெருக செய்தது எனலாம்.

இன்றுவரை அவரது இந்த பாதுகாப்பான கண்டுபிடிப்பை முறியடிக்கும் விதமாக யாருமே வேறு ஒரு எஞ்சினை கண்டுபிடிக்கவே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

அதன் அடிப்படையில் தான் அவர் கண்டுபிடித்த எஞ்சினுக்கு அவரது பெயரும் அவரது எஞ்சினில் உபயோகப்படும் எரிபொருளான டிஸ்டிலேட் என்ற எண்ணெய்க்கு டீசல் என்ற பெயரும் வைக்கப்பட்டு அழைக்கப் படுகிறது.

இன்னும்சொல்லப்  போனால் அவரை 1890 களில் ருடால்ஃப் டீசலை ஏளனம் செய்தவர்களால் அவரது பெயரான டீசல் என்பது தேவையற்றது, பிரயோஜனம் அற்றது வேலைக்கு ஆகாதது என்று தன்மையை விவரிக்க கூடிய adjective ஆக உரிச்சொல்லாக அடைமொழியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

அப்படியாக ஆரம்பத்தில் ஏளனம் செய்யப்பட்டு உதாசீனம் செய்யப்பட்ட கண்டுப்பிடிப்பு, நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்ட கண்டுப்பிடிப்பானது..... இன்றுவரை கடல்வழி சரக்கு போக்குவரத்துக்கு பெறும் இன்றியமையாத பங்காற்றி வருகிறது.

நீங்களும் இப்படியாக அன்றாட மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கான புதிய சிந்தனைகள் மூலம் கண்டுப்பிடிப்புகளை வெளிப்படுத்துங்கள்..

பிறர் கிண்டல் கேலி செய்வார்கள் என்று வெட்கித்து தயங்காதீர்கள்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்,
அறியாமை ஆற்றாமை இல்லை என்கிற அடிப்படையில். சிந்திப்போம் செயற்படுவோம்.
நாகூர் தீன்
08 செப்டம்பர், 2017

Nagore Kannaadi Thottam Entrance Ramp Construction Project.



நாகூரை சேர்ந்த எனது உடன்பிறவா சகோதரர் எஞ்சினியர் ஹசன் ஃபாருக் செர்வீஸ் சார்ஜ் ஏதும் வாங்காமல் அவரது மேற்பார்வையில் அல்லாஹுவுக்காக பிராஜக்ட் மேனேஜ்மென்ட் செய்து கட்டி தந்தது.

தினந்தோறும் உறுதுணையாக உடன் இருந்து வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க உதவியவர் கண்ணாடி தோட்டம் ராஜா அவர்கள்.

7th CPC என்றழைக்கப்படும் ஏழாம் மத்திய சம்பள கமிஷன்அடிப்படையிலான புதிய ஓய்வூதிய திட்டம் என்ன?

7th CPC என்றழைக்கப்படும் ஏழாம் மத்திய அரசு ஊழியர் சம்பள கமிஷன்அடிப்படையிலான புதிய ஓய்வூதிய திட்டம் ஆனது என்னவென்றால்...

7th CPC மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியம்:

மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என்ற அடிப்படையில் 01.01.2016 தேதி முதல் குறைந்தபடச ஓய்வு ஊதியமாக மாதம் ரூபாய் 9000/- என அறிவிக்கப்பட்டது.

அதாவது மாத சம்பளத்தில் 50% ரூபாய் 9000 என்றாகும் வரை அனைத்து வகையான கடைநிலை மத்திய அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை ஓய்வூதியம் ரூ 9000/- கிடைக்கும் என்றும்.

அதற்கு அதிகமான சம்பளம் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் இருப்பது போன்றும் அடுத்தடுத்து உள்ள 35 அட்டவணைகளில் உள்ளது போன்றும் பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் (மனைவி வாரிசு) வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.



(இங்கே 1 மற்றும் 14 அட்டவணையை மட்டும் தான் மாதிரி அட்டவணையாக எடுத்து போட்டு இருக்கிறேன், தங்களின் மேற்கொண்ட ஆய்வுக்கு 7th CPC ன் இன்னும் 35 அட்டவணைகள் இருக்கிறது அதன் விவரத்தை எடுத்து பார்க்கவும்)

குறிப்பு: இதில் டேபிள் - 14 அட்டவணை பிரகாரம் எனது தகப்பனாரின் 5வது CPC பேஸ் சம்பளம்  அடிப்படையில் தற்போது அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 25000 அல்லது அதிகபட்சம் அதற்குமேல் கிட்டும் என உத்தேசிக்கிறேன்.

இந்த மத்திய அரசின் ஊழியர் ஊதிய திட்ட அறிக்கையானது பத்து ஆண்டுக்கு ஒருமுறை வெளிவருவதாக இருந்து வருகிறது...

கடந்த காலங்களில் 4th CPC 1986லும், 5th CPC 1996லும், 6th CPC 2006லும், 7th CPC 2016லும் வெளியிடப்பட்டது குறிப்பிட தக்கது.

இதில் HRA மற்றும் DA அகவிலைப்படி போன்றவைகள் அந்தந்த ஊர் நகர புறம் மற்றும் காலகட்டத்துக்கு தகுந்தவாறு அடிப்படை சம்பள விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு நிர்ணயித்து வழங்கப்பட்டு வந்தது..

இதில் இந்த ஏழாம் ஊதிய கமிஷன் பரிந்துரையில் HRA (Housing Rent Allowance) 30% இலிருந்து 24% ஆக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் மாற்றம் இல்லாது 30%  என்றே அறிவிக்கப்பட்டது.

அது போக ஏனைய 53 அலொவன்ஸ் சலுகைகள் நீக்கப்பட்டு மற்றைய 36 அலொவன்ஸ் சலுகைகள் பெரிய வகைகளாக தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது எனலாம்.

இதனால் 48 லெட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 57 லெட்சம் ஓய்வூதிய முன்னாள் மத்திய அரசு ஓய்வூதிய பென்ஷன் தாரர்களும் பயன் பெற்றார்கள் என ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டு மாநில அரசு ஊழியர் ஓய்வூதியம்:

தற்போது கடந்த ஒருவாரகாலமாக தமிழ் நாட்டில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளிகூட ஆசிரியர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் ஆனது என்வென்றால்...

2003ல் அறிமுகபடுத்திய CPS (Contributing pension scheme) அதாவது ஊழியரின் ஒரு ரூபாய் சேமித்தால் மாநில அரசு தரப்பிலிருந்து ஒரு ரூபாய் தரும் என்கிற இத்திட்டத்தை நீக்கிவிட்டு மத்திய அரசு நடைமுறையில் கொண்டிருக்கும் குறிப்பாக மத்திய அரசின் இந்த 7th CPC ஓய்வூதிய திட்ட அடிப்படையை தமிநாட்டில்  அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக கொண்டது.

ஆக இவர்கள் முறையாக வேலை பார்க்கிறார்களோ இல்லையோ இவர்கள் உயிருடன் இருக்கும் வரையிலும் இவர்கள் மனைவி மக்கள் உயிரோடு இருக்கும் வரையில் வரிகட்டும் நம்ம மக்களின் கடின உழைப்பால் கட்டப்பட்ட TAX MONEYயில் வயிறு வளர்க்க ஆசைப்படுகிறார்கள்...

ஆனால் நாம கொடுக்கும் இந்த TAX MONEY க்கு எந்த அக்கவுண்டபிளிட்டியும் இல்லை பர்பார்மன்ஸ் தர எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என எதிர்ப்பார்க்கிறார்கள். 

அப்படியாக முறையாக செயற்படாத அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பதவி நீக்கம் மற்றும் ஓய்வு ஊதிய சலுகை பறிமுதல் அல்லது பறிப்பு செய்ய இந்த அரசாங்கம் நம்மிடம் எந்த அதிகாரத்தையும் விட்டுவைக்காது பறித்துக் கொண்டும்விட்டது...

என்ன நியாயம்யா இது? யார் இதை தட்டிக்கேட்பது...?

99% சதவிகித பொதுமக்கள் மத்தியில் 1% சதவிகிததத்துக்கும் குறைவான அரசு ஊழியர்கள் தான் என்றாலும் நமது வரிப்பண பல லெட்சம் கோடி செலவுக்கு தகுந்த தரமான சேவை நமக்கு கிடைக்கவில்லை எனும்போது கேள்விகளும் விமர்சனங்களும் பிறக்க தானே செய்கிறது.

இப்படிக்கு 
சமூக அக்கறையுடன் மக்களுக்காக 
கருத்து சுதந்திர அடிப்படையில் 
நாகூர் தீன் 
16/09/2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...