Saturday, September 16, 2017

நீட் தேர்வு சிலபஸும் ~ தமிழ்நாடு அரசு கல்வி இயக்க பாடநூல்களும்.

கீழே நான் குறிப்பிட்டுள்ளது நீட் தேர்வு சிலபஸ் மற்றும் அதில் குறிப்பிட பட்டுள்ள தலைப்புகளுக்கு ஏற்றார் போல உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் அதாவது ஸ்டேட் போர்ட் புத்தகத்தின் லிங்க்.. 

நீட் சிலபசுக்கு நெருங்கி இருக்கான்னு அந்த லிங்க பார்த்துவிட்டு பேசுங்க பிளீஸ்...

PHYSICS

நீட் சிலபஸ்
CLASS XI
1. Physical world and measurement
2. Kinematics
3. Laws of Motion
4. Work, Energy and Power
5. Motion of System of Particles and Rigid Body
6. Gravitation
7. Properties of Bulk Matter
8. Thermodynamics
9. Behaviour of Perfect Gas and Kinetic Theory
10. Oscillations and Waves


நீட் சிலபஸ்
CLASS XII
1. Electrostatics
2. Current Electricity
3. Magnetic Effects of Current and Magnetism
4. Electromagnetic Induction and Alternating Currents
5. Electromagnetic Waves
6. Optics
7. Dual Nature of Matter and Radiation
8. Atoms and Nuclei
9. Electronic Devices


CHEMISTRY:

நீட் சிலபஸ்
CLASS XI
1. Some Basic Concepts of Chemistry
2. Structure of Atom
3. Classification of Elements and Periodicity in Properties
4. Chemical Bonding and Molecular Structure
5. States of Matter: Gases and Liquids
6. Thermodynamics
7. Equilibrium
8. Redox Reactions
9. Hydrogen
10. s-Block Element (Alkali and Alkaline earth metals)
11. Some p-Block Elements
12. Organic Chemistry- Some Basic Principles and Techniques
13. Hydrocarbons
14. Environmental Chemistry

நீட் சிலபஸ்
CLASS XII
1. Solid State
2. Solutions
3. Electrochemistry
4. Chemical Kinetics
5. Surface Chemistry
6. General Principles and Processes of Isolation of Elements
7. p- Block Elements
8. d and f Block Elements
9. Coordination Compounds
10. Haloalkanes and Haloarenes
11. Alcohols, Phenols and Ethers
12. Aldehydes, Ketones and Carboxylic Acids
13. Organic Compounds Containing Nitrogen
14. Biomolecules
15. Polymers

ஸ்டேட் போர்ட் பாட புத்தகம்
Chemistry in Everyday Life
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-EM-1.pdf
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-EM-2.pdf

BIOLOGY

நீட் சிலபஸ்
CLASS XI
1. Diversity in Living World
2. Structural Organisation in Animals and Plants
3. Cell Structure and Function
4. Plant Physiology
5. Human physiology


நீட் சிலபஸ்
CLASS XII
1. Reproduction
2. Genetics and Evolution
3. Biology and Human Welfare
4. Biotechnology and Its Applications
5. Ecology and environment

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன் 
3 செப்டம்பர், 2017

நக்கீரன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த Prince Gajendra Babu விற்கு என் மறுப்பு


இவர் சொல்லும் அதே அடிப்படையில் தான் எந்த ஒரு தேர்விலும் நுழைவு தேர்விலும், IAS , IPS தேர்விலும் கூட இன்னும் சொல்ல போனால் அகில இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கூட முதல் 15 இடத்தையோ அல்லது முதல் 15% இடத்தையோ பிடிக்க வேண்டுமானால் சிறந்த முறையில் கோச்சிங் பெற்றால் தான் முடியும்...

ஏன் என்றால் முக்கியத்துவம் கூட கூட 50,000 சீட்டுக்கு 15 லெட்சம் பேர் போட்டி போடும் சூழல் உருவாகும் போது...

செலக்‌ஷன் பிராஸசும் சர்வைவல் ஒஃப் தி பிட்டஸ்ட் என்ற அடிப்படையில் தான் கடினமாக்கப்படும்.

அப்படி கடினமானால் பிரத்யேக பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக ஆகிபோகிறது.

ஆக முதல் பத்து இடம் அல்லது பத்து சதவிகிதம் இடம் பிடிக்க வேண்டும் என்றால் தான்... அது கூட if you don't want to take any chances or risk என்றால் தான்..

அப்படி இல்லாமல் பூவா தலையா எது வந்தாலும் பரவாயில்லை சுயமாக முயன்று பார்ப்போம்...

அது கூட 15% ஆல் இந்திய சீட் கோட்டா போக  தமிழ்நாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 85% சீட்டில் எனது சாதி ஒதுக்கீட்டு கட் ஆஃப் மார்க்கு அடிப்படையில் சீட்டு கிடைத்தால் போதும் என்று முடிவில் ரிஸ்க் எடுக்க விரும்பினாலே ஒழிய கோச்சிங் அவசியப்படாது....

இங்க ரிஸ்க் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு கட் ஆஃப் கோட்டாவிலும் கூட கூடுதல் மதிப்பெண் எடுத்து அதிகமான ஆட்கள் தேர்ச்சி பெற்றால் இவர் பின் தள்ள படுவார் என்பதால்.

அதே போன்ற நியதி தான் +2 தேர்விலும் survival of the fittest அடிப்படை தான், 1200 க்கு 1150 க்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் கோச்சிங் கண்டிப்பாக அவசியப்படுகிறது...

அதுவும் எப்பேற்பட்ட கோச்சிங்... +1 ஆண்டின் பாடத்தை சுருக்கமாக நடத்தி முடித்துவிட்டு +2 பாடத்தை +1 வகுப்பறையிலேயே சில பள்ளிகூடங்கள் காலாண்டு முதலே துவக்கி +2 அரசு போர்ட் பரீட்சைக்கு உண்டான கோச்சிங்க கொடுக்க ஆறம்பித்து விடுகிறார்கள்...

நீட் நுழைவுத்தேர்வுக்கு என்று பிரத்யேகமாக கோச்சிங் கொடுத்தால் தான் முடியும், அது எங்க  டவுனில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் (கிராமத்தில் மேல் நிலை பள்ளி கிடயாது) என்று சப்பை காரணம் சொல்லும் இவர்கள் யாரும் தனியாக பிரத்யேகமாக பள்ளி கூடத்திலேயே  காசுக்காக டியூஷன் கோச்சிங் வைத்து நடத்தாமல் இல்லை...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கூடங்கள் பல இதற்கு என்று பிரத்யேகமாக துவக்கப்பட்டு கடந்த காலத்தில் +2 தேர்ச்சியில் கோச்சிங் மூலம் முதல் இடம்  பிட்த்து செய்தி தாள்களில் பெருமை பட்டுக்கொண்டது...

ஆக இனி அவ்வகையான +2 1200 க்கு 1198 எல்லாம் நீட் தேர்வில் பயனளிக்காது என்பதாலும் அவர்களின் பிழைப்பில் மன்விழும் என்பதால் இப்படியாக பிதற்றிக் கொண்டு வருகிறார்கள்.

கண்டிப்பாக +2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் +1 பாடத்தைல் போதிய கவனம் செலுத்தாததே அவர்கள் #NEET தேர்வில் தோற்று போக காரணமாக இருந்தது என்றே கூற வேண்டும்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
06 செப்டம்பர், 2017

Rudolf Christian Karl Diesel the inventor of Diesel Engine

1892ல் உள்ளுக்குள் வெடித்து மோட்டார் சக்தியை உற்பத்தி செய்ய முயன்று வெற்றி கண்ட ருடால்ஃப் டீசல் என்பவரது உண்மையான சரித்திர சம்பவ பின்னணியுடன் கூடிய எனக்கு தெரிந்த ஒரு ஆலோசனை.

1700 களின் மத்தியில் நிராவி சக்தி கண்டுப்பிடிக்கப்பட்டு.

1800 துவக்கத்தில் ரெயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தொழிற்சாலைக்கு இயந்திர சக்தி என்று உபயோகப்பட்டு வந்தது...

1851 இல் ஸ்காட்லாந்தில் முதன் முறையாக ஜேம்ஸ் யெங் (James Young) என்கிற ஒரு விஞ்ஞானி நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து எரிபொருள் தயாரிப்பில் ஈடுபடுகிறார், அப்படி தான் கெரோசின், பெட்ரோல் எல்லாம் கிடைக்கப்பெற்றது.

இதிலிருந்து ஆவியாக வெளியேறிய தேவையற்ற ஆவியானது distillate என்கிற பெயரில் தேவையற்ற திரவமாக தெருவில் கொட்டப்பட்டது.

1892 ருடால்ஃப் டீசல் என்கிற நம்மை போன்ற சாதாரண ஏழ்மையான எளிமையான நடுத்தர குடும்பத்தில் பிறந்த நபர் சமூகம் இந்த கடினமான நிலக்கரி ~ நீராவி சக்தியில் இருந்து விடுப்பட்டு மேன்மை அடைய வேண்டும் என்று ஒரு புதிய வடிவ இயந்திர சக்தி உண்டுப்பன்ன கூடிய உள்ளுக்குள் தானாகவே கடலை எண்ணெய் கொண்டு எரிந்து செயற்படும் எஞ்சின் ஒன்றை வடிவமைக்க முயன்று வெற்றியும் பெறுகிறார்.

1894ல் உபயோகமற்று தூக்கி எறியப்பட்ட  டிஸ்டிலேட் எண்ணெய்யை எடுத்து உபயோகித்து வெற்றி அடைகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவரது கண்டுப்பிடிப்பு தான் இந்த உலகத்தின் தொழில் மற்றும் தனிநபர் வாழ்வாதார முன்னேற்றத்தை தலைகீழாக புரட்டி போட்டது மட்டுமல்லாமல் பன்மடங்காக மாற்றி பெருக செய்தது எனலாம்.

இன்றுவரை அவரது இந்த பாதுகாப்பான கண்டுபிடிப்பை முறியடிக்கும் விதமாக யாருமே வேறு ஒரு எஞ்சினை கண்டுபிடிக்கவே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

அதன் அடிப்படையில் தான் அவர் கண்டுபிடித்த எஞ்சினுக்கு அவரது பெயரும் அவரது எஞ்சினில் உபயோகப்படும் எரிபொருளான டிஸ்டிலேட் என்ற எண்ணெய்க்கு டீசல் என்ற பெயரும் வைக்கப்பட்டு அழைக்கப் படுகிறது.

இன்னும்சொல்லப்  போனால் அவரை 1890 களில் ருடால்ஃப் டீசலை ஏளனம் செய்தவர்களால் அவரது பெயரான டீசல் என்பது தேவையற்றது, பிரயோஜனம் அற்றது வேலைக்கு ஆகாதது என்று தன்மையை விவரிக்க கூடிய adjective ஆக உரிச்சொல்லாக அடைமொழியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

அப்படியாக ஆரம்பத்தில் ஏளனம் செய்யப்பட்டு உதாசீனம் செய்யப்பட்ட கண்டுப்பிடிப்பு, நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்ட கண்டுப்பிடிப்பானது..... இன்றுவரை கடல்வழி சரக்கு போக்குவரத்துக்கு பெறும் இன்றியமையாத பங்காற்றி வருகிறது.

நீங்களும் இப்படியாக அன்றாட மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கான புதிய சிந்தனைகள் மூலம் கண்டுப்பிடிப்புகளை வெளிப்படுத்துங்கள்..

பிறர் கிண்டல் கேலி செய்வார்கள் என்று வெட்கித்து தயங்காதீர்கள்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்,
அறியாமை ஆற்றாமை இல்லை என்கிற அடிப்படையில். சிந்திப்போம் செயற்படுவோம்.
நாகூர் தீன்
08 செப்டம்பர், 2017

Nagore Kannaadi Thottam Entrance Ramp Construction Project.



நாகூரை சேர்ந்த எனது உடன்பிறவா சகோதரர் எஞ்சினியர் ஹசன் ஃபாருக் செர்வீஸ் சார்ஜ் ஏதும் வாங்காமல் அவரது மேற்பார்வையில் அல்லாஹுவுக்காக பிராஜக்ட் மேனேஜ்மென்ட் செய்து கட்டி தந்தது.

தினந்தோறும் உறுதுணையாக உடன் இருந்து வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க உதவியவர் கண்ணாடி தோட்டம் ராஜா அவர்கள்.

7th CPC என்றழைக்கப்படும் ஏழாம் மத்திய சம்பள கமிஷன்அடிப்படையிலான புதிய ஓய்வூதிய திட்டம் என்ன?

7th CPC என்றழைக்கப்படும் ஏழாம் மத்திய அரசு ஊழியர் சம்பள கமிஷன்அடிப்படையிலான புதிய ஓய்வூதிய திட்டம் ஆனது என்னவென்றால்...

7th CPC மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியம்:

மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என்ற அடிப்படையில் 01.01.2016 தேதி முதல் குறைந்தபடச ஓய்வு ஊதியமாக மாதம் ரூபாய் 9000/- என அறிவிக்கப்பட்டது.

அதாவது மாத சம்பளத்தில் 50% ரூபாய் 9000 என்றாகும் வரை அனைத்து வகையான கடைநிலை மத்திய அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை ஓய்வூதியம் ரூ 9000/- கிடைக்கும் என்றும்.

அதற்கு அதிகமான சம்பளம் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் இருப்பது போன்றும் அடுத்தடுத்து உள்ள 35 அட்டவணைகளில் உள்ளது போன்றும் பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் (மனைவி வாரிசு) வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.



(இங்கே 1 மற்றும் 14 அட்டவணையை மட்டும் தான் மாதிரி அட்டவணையாக எடுத்து போட்டு இருக்கிறேன், தங்களின் மேற்கொண்ட ஆய்வுக்கு 7th CPC ன் இன்னும் 35 அட்டவணைகள் இருக்கிறது அதன் விவரத்தை எடுத்து பார்க்கவும்)

குறிப்பு: இதில் டேபிள் - 14 அட்டவணை பிரகாரம் எனது தகப்பனாரின் 5வது CPC பேஸ் சம்பளம்  அடிப்படையில் தற்போது அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 25000 அல்லது அதிகபட்சம் அதற்குமேல் கிட்டும் என உத்தேசிக்கிறேன்.

இந்த மத்திய அரசின் ஊழியர் ஊதிய திட்ட அறிக்கையானது பத்து ஆண்டுக்கு ஒருமுறை வெளிவருவதாக இருந்து வருகிறது...

கடந்த காலங்களில் 4th CPC 1986லும், 5th CPC 1996லும், 6th CPC 2006லும், 7th CPC 2016லும் வெளியிடப்பட்டது குறிப்பிட தக்கது.

இதில் HRA மற்றும் DA அகவிலைப்படி போன்றவைகள் அந்தந்த ஊர் நகர புறம் மற்றும் காலகட்டத்துக்கு தகுந்தவாறு அடிப்படை சம்பள விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு நிர்ணயித்து வழங்கப்பட்டு வந்தது..

இதில் இந்த ஏழாம் ஊதிய கமிஷன் பரிந்துரையில் HRA (Housing Rent Allowance) 30% இலிருந்து 24% ஆக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் மாற்றம் இல்லாது 30%  என்றே அறிவிக்கப்பட்டது.

அது போக ஏனைய 53 அலொவன்ஸ் சலுகைகள் நீக்கப்பட்டு மற்றைய 36 அலொவன்ஸ் சலுகைகள் பெரிய வகைகளாக தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது எனலாம்.

இதனால் 48 லெட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 57 லெட்சம் ஓய்வூதிய முன்னாள் மத்திய அரசு ஓய்வூதிய பென்ஷன் தாரர்களும் பயன் பெற்றார்கள் என ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டு மாநில அரசு ஊழியர் ஓய்வூதியம்:

தற்போது கடந்த ஒருவாரகாலமாக தமிழ் நாட்டில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளிகூட ஆசிரியர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் ஆனது என்வென்றால்...

2003ல் அறிமுகபடுத்திய CPS (Contributing pension scheme) அதாவது ஊழியரின் ஒரு ரூபாய் சேமித்தால் மாநில அரசு தரப்பிலிருந்து ஒரு ரூபாய் தரும் என்கிற இத்திட்டத்தை நீக்கிவிட்டு மத்திய அரசு நடைமுறையில் கொண்டிருக்கும் குறிப்பாக மத்திய அரசின் இந்த 7th CPC ஓய்வூதிய திட்ட அடிப்படையை தமிநாட்டில்  அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக கொண்டது.

ஆக இவர்கள் முறையாக வேலை பார்க்கிறார்களோ இல்லையோ இவர்கள் உயிருடன் இருக்கும் வரையிலும் இவர்கள் மனைவி மக்கள் உயிரோடு இருக்கும் வரையில் வரிகட்டும் நம்ம மக்களின் கடின உழைப்பால் கட்டப்பட்ட TAX MONEYயில் வயிறு வளர்க்க ஆசைப்படுகிறார்கள்...

ஆனால் நாம கொடுக்கும் இந்த TAX MONEY க்கு எந்த அக்கவுண்டபிளிட்டியும் இல்லை பர்பார்மன்ஸ் தர எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என எதிர்ப்பார்க்கிறார்கள். 

அப்படியாக முறையாக செயற்படாத அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பதவி நீக்கம் மற்றும் ஓய்வு ஊதிய சலுகை பறிமுதல் அல்லது பறிப்பு செய்ய இந்த அரசாங்கம் நம்மிடம் எந்த அதிகாரத்தையும் விட்டுவைக்காது பறித்துக் கொண்டும்விட்டது...

என்ன நியாயம்யா இது? யார் இதை தட்டிக்கேட்பது...?

99% சதவிகித பொதுமக்கள் மத்தியில் 1% சதவிகிததத்துக்கும் குறைவான அரசு ஊழியர்கள் தான் என்றாலும் நமது வரிப்பண பல லெட்சம் கோடி செலவுக்கு தகுந்த தரமான சேவை நமக்கு கிடைக்கவில்லை எனும்போது கேள்விகளும் விமர்சனங்களும் பிறக்க தானே செய்கிறது.

இப்படிக்கு 
சமூக அக்கறையுடன் மக்களுக்காக 
கருத்து சுதந்திர அடிப்படையில் 
நாகூர் தீன் 
16/09/2017

அரசாங்க ஆசிரியர்களை நோக்கி "நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?" ~ நீதியரசர் N கிருபாகரன் தகுந்த கேள்வி




வெறுமனே ஐந்து பேரை மட்டும் தான் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி செய்ய முடிந்தது என்பதை நினைத்து  போராட்டத்தில் ஈடுபடும் 43,000 அரசாங்க ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டாமா? என்று நீதியரசர் N கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த NEET எனும்  மருத்துவத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்,
தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடதிட்ட அடிப்படையில் பயின்ற
  • அரசு நிதிவுதவி பெறும் தனியார் நிர்வாக அடிப்படையில் இயங்கும் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும், 
  • அதே ஸ்டேட் போர்ட் பாடதிட்ட அடிப்படையில் இயங்கும் தனியார் சுயநிதி பள்ளிக்கூட மாணவர்கள்.
என நுழைவுத்தேர்வு எழுதிய 63% Tamil Nadu State Board education மாணவர்கள் தேர்ச்சி பெற்றதில் வெறும் 5 பேர் மட்டுமே முழு இலவச அரசு பள்ளிக்கூட மாணவர்களாகும்...

அவ்வகையில் வெறும் சம்பளம் மற்றும் பென்ஷன் திட்டத்தில் குறியாக இருக்கும் இந்த ஆசிரியர்களின் உத்தியோக performance responsibility மற்றும் accountability பொறுப்புணர்வு எங்கே என்று கேட்டதில் என்ன தவறு?

வரி செலுத்தும் பொதுமக்களாகிய நாங்களும் உங்களை தட்டிக்  கேட்க முடியாது, நீதிபதிகள் கேட்டலும் அவரை கொச்சை படுத்தி அசிங்கப்படுத்தி அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வசை பாடினால் அப்ப உங்களை பணிநீக்கம் செய்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
16/09/2017

ராக்கெட் நுட்பத்தில் புதிய சாதனை

தானியங்கி வாகன தயாரிப்பில் டெஸ்லா எனும் காரை தயாரித்து வெற்றி நடைபோடும் இலான் மஸ்க் Elon Muskன் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தற்போது தனது falcon 9 எனும் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தி மீண்டும் மற்றொருமுறை செங்குத்தாக தரை இறக்கி வெற்றி கண்டு இருக்கிறது.

முன்பொருமுறை 2016ல்  இதே போன்று விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தி கடலில் மிந்தந்துக்கொண்டு இருந்த தானியங்கி கப்பலில் செங்குத்தாக தரை இறக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வகை SPACEX Falcon 9 சிறப்புகள் பற்றி கூடிய விரைவில் ஒரு விரிவான கட்டுரையை கீழே பதிந்து இருக்கிறேன் படித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

ராக்கெட் நுட்பத்தில் புதிய சாதனை

அமெரிக்க பில்லியனர், தொழில் அதிபர் Elon Musk இலான் மஸ்க் என்பவருடைய ஸ்பேஸ் எக்ஸ் என்கிற நிறுவனம் சமீபத்தில் தனது தானியங்கி ஃபால்கன் 9 என்கிற புதிய முன்னேறிய ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி 136 கிலோமீட்டர் சென்றுவிட்டு சென்றது போன்றே ஏற்கனவே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெற்றிகரமாக நேர் செங்குத்தாக தரை இறக்கி மீண்டும் ஒருமுறை தனது புதிய பரிசோதனையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.

இதற்கு முன் NASA ராக்கெட்டை எப்படியாக செலுத்தி வந்தது?
1981 அமெரிக்க NASA வின் முந்தைய ஷட்டல் ராக்கெட் நான்கு பாகங்களை கொண்டதாக அதாவது

  1. இரண்டு SRB - Solid Rocket Booster,
  2. ஓர் ET எனும் External Tank (குளிர்ந்த திரவவடிவிலான ஹைட்ரோஜன் மற்றும் ஆக்சிஜன் கொண்ட எரிபொருள் டேன்க்) மற்றும்
  3. ஓர் ஷட்டில் ஆர்பிட்டர் எனும் விண்கலம். 

என்ற நான்கு பாகத்தை கொண்டதாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டு வந்தது.
விண்வெளியில் 24 மையில் தூர உயரம் சென்ற பின் இரண்டு SRB களும் கழன்று கடலில் விழுந்துவிடும், NASA பின்பு அதை கப்பல் மூலமாக சென்று தரைக்கு இழுத்து வரும்.


SRB கழன்று விழுந்த பின்னர் ET External Tank உதவியுடன் ஷட்டுளின் எஞ்சின் Low Erath Orbit (படம் - 1) எனும் செயற்கைக்கோள்க்கு என நிர்ணயிக்கப்பட்ட LEO ஆர்பிட் தொலைவு வரை பறந்து செல்லும்.

அப்படியாக குறித்த இடத்தை நெருங்கும் முன்னரே ET எனும் ஆரஞ்சு நிறத்திலான External Tank கழற்றி பூமியில் கடலில் விழ செய்யும்.

இதில் ஒவ்வொரு பாகத்தையும் NASA வெவ்வேறு தனியார் நிறுவன காண்டிராக்டர் மூலம் வாங்கி வந்தது. அதிலும் குறிப்பாக ராக்வெல் நிறுவனத்திடம் இருந்து ஆர்பிட்டர வாங்கியது, லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திடம் இருந்து ET External Tank வாங்கியது, ATK நிறுவனத்திடம் இருந்து SRB யை வாங்கி வந்தது...

இதனால் பொருட்செலவு அதிகமாகுகிறது என்ற காரணத்தால் ஷட்டல் ஏவுகணையை நிறுத்திவிட்டதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்நுட்பத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த போயிங், அமேசான், மற்றும் ஸ்பேஸ் X நிறுவனங்கள் தனது தனியார் விண்வெளி ராகெட் ஏவுகணையை பரிசோதிக்க பல ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டு குவித்து வந்தது...

அவ்வடிப்படியில் 2016 போயிங் மற்றும் ஸ்பேஸ் X புதிய சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைத்து விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சரக்கு போக்கு வரத்துக்காக போட்டா போட்டி போட்டு செலுத்தி சாதனை புரிந்து வருகிறது...

SPACEX நிறுவனத்தின் FALCON 9 உடைய சிறப்பு என்ன?

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அதன் இரண்டு கட்ட என்ஜினை சொல்லலாம், அதன் முதல் கட்டமானது ஒன்பது மெர்லின் எஞ்சினை கொண்டது திரவவடிவிலான ஆக்சிஜன் கொண்டும் ராகெட் தரத்திலான பிரத்யேக கெரோசின் எரிசக்தியில் 155:1 என்கிற கண எடைக்கு உந்து சக்தி என்ற விகிதத்தில் உந்தி செல்லக்கூடியதாக செலவிலும் மிக குறைந்ததாக  ஆனால் சக்தி வாய்ந்த எஞ்சினாகவும் திகழ்கிறது.


இதில் முதல் கட்டமானது தானாகவே அதன் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட  பூமியில் உள்ள இலக்கை நேர் செங்குத்தாக வந்து அடைந்து நிற்க வல்லது. இந்த யூடியூப் வீடியோவில் கூட நீங்கள் அதை கண்டு இருக்கலாம்.( https://www.youtube.com/watch?v=brE21SBO2j8)


அதாவது விண்வெளிக்கு கிட்டதட்ட 126 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு அதன் இன்டெர் ஸ்டேஜ் ஆனது தானாக துண்டித்துக்கொண்டு பூமியை திரும்ப வந்து அடைந்துவிடும்..


இன்டர் ஸ்டேஜ் துண்டிக்கப்பட்ட நிலையில் காம்போசிட் ஃபேரிங் ஆனது தனது பயணத்தை LEO என்கிற பூமியின் பரப்பில் இருந்து 2000 கிலோமீட்டர் தொலைவு வரையான Low லோ Earth எர்த் Orbit ஆர்பிட்டில் உள்ள இலக்கை நோக்கி ஆள் இல்லாமல் தானாகவே பயணிக்கும்.


இது தான் அந்த காம்போசிட் ஃபாரிங்.


இலக்கை அடைந்ததும் காம்போசிட் ஃபாரிங் ஆனது, தான் கொண்டுவந்த  செயற்க்கைகோளை விண்ணில் திறந்து விடும். கிட்டதட்ட ஒரு பெரிய பேருந்தையே எடுத்து செல்லும் அளவுக்கு அதன் கொள்ளவு இருக்கும் என்பதை இப்படத்தின் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.


கீழே உள்ள படம் ஃபால்கன் விண்ணுக்கு சென்று அதன் பின்னர் அதன் முதற்கட்டம் எவ்வாறு பூமிக்கு திரும்புகிறது என்பதை விளக்குகிறது.


இதன் அடிப்படையில் ஸ்பேஸ் X நிறுவனத்துக்கு பெருமளவு உற்பத்தி செலவு மிச்சப்படுகிறது என்றும் அதனால் குறைந்த விலையில் விண்வெளிக்கு சரக்கு போக்குவரத்து என்றில்ல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கும் ஒரு கிலோகிராம்முக்கு ஆறாயிரத்து அறநூறு டாலர் விகிதம் Walter Hohmann என்பவரின் transfer orbit முறையில் இட்டு சென்று இறக்கி விட முடியும் என்றும் கூறுகிறார்கள்.


அதே சமயம் ISS இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்கிற சர்வேதச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஒரு கிலோகிராமுக்கு $2700 விகிதம் வேண்டிய பெருமளவு சரக்கை எங்களால் எடுத்து செல்ல முடியும் என்றும் கூறுவதோடு இல்லாமல் தற்போது எடுத்தும் சென்றுக்கொண்டும் இருக்கிறார்கள்.



ஸ்பேஸ் X நிறுவனத்தின் ஃபால்கன் 9 சரக்கு ராக்கெட் சேவைகள் குறித்த அட்டவணை படம் கீழே உள்ளது.


இப்படிக்கு
சமூக விழிப்புணர்வுக்காக
நாகூர் தீன்
10 செப்டம்பர், 2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...