Monday, October 9, 2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்...
அதர்கு முன்பாக....
மண்ணச்சநல்லூரில் அதிசியம் டெங்கு காய்ச்சலுக்கு தமிழ் பதி மருந்து, மருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் காய்ச்சல் குறைகிறது மதுரை தமிழ் பதி சித்த மருத்துவர் கவிஞர் கலையரசன் மருந்து தருகிறாராம்!!?
என்ன ஆச்சரியம்?
சித்த மருத்துவ முறையில் எந்த நோயையும் உடனுக்குடன் சரியாக்க கூடாது, அப்படி உடனுக்குடன் குறுகிய கால அவகாசத்தில் குணமாக்குவது பெரிய ஆபத்து, சன்னம் சன்னமாக மெல்ல மெல்ல தான் குணமாக்க வேண்டும் என்பார்களே...

(இப்ப என்ன ஆச்சு? எப்படி இந்த திடீர் விதி மீறல்?)

இவர் மட்டும் எப்படி DHF dengue hemorrhage fever மற்றும் DSS dengue shock syndrome போன்றவற்றை ஒரு மணி நேரத்தில் குணமாக்கி காட்டுகிறார்? அதிசயம் தான்.

அப்படி அச்செய்தி உன்மையாக இருந்தால் அவர் கண்டுபிடித்துள்ள மருந்தின் தகவல்களை உலகறியச் செய்வாரா.... ? செய்ய மாட்டார்....

கடந்து சென்ற சமீப நூற்றாண்டுகளில் வாழ்ந்த அனேக சித்த மருத்துவர்கள் தமது அனுபவ அறிவை எல்லோருக்கும் சென்ற அடைய செய்யாமல் முக்கிய குறிப்புகளை குடும்ப இரகசியமாகவே பாதுகாத்து மூடி வைத்து மறைத்து அழித்தொழித்து விட்டார்கள் என்பது தான் எதார்த்த உண்மை...
இன்று எஞ்சி இருக்கும் பெரும்பாலானவை போதிய ஆய்வு அனுபவ அறிவற்ற சொர்ப்பமே...
அது கூட அலோபதி மருத்துவ கூடாரம் செய்தது போன்று சித்த, ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் இருந்து மேலும் ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்ட ஒரு காம்பவுண்டை மட்டுமே பிரித்தெடுத்து சிந்தசைஸ் செய்து மருந்தாக வெளியிட்டது போன்று சித்த ஆயுர்வேத மருத்துவ ஆய்வில் போதிய முன்னேற்றம் இல்லையே!!! காரணம் மனப்பான்மை மற்றும் அணுகுமுறை பிரச்சினை.
சரி நாம இப்ப டெங்கே எனும் வைரஸ் காய்ச்சல பற்றி பார்ப்போம்.
டெங்கே எனும் வைரஸ் காய்ச்சல் எப்படி நம்மை தாக்குகிறது?
Dengue போன்ற வைரஸ் காய்ச்சலில், acute கடுமையான மற்றும் chronic நாள்பட்ட என்கிற இரண்டு வகையான பாதிப்பு நிலையை ஏற்படுத்துகிறது..
அதில் Acute நிலைக்கும் முந்தைய ஆரம்ப நிலையில்..

அதாவது febrile நிலை என்ற காய்ச்சலின் துவக்க நிலைக்கு முந்தைய ஒரு நாள்...

அதாவது இன்கியுபேஷன் பீரியட் என்று சொல்லப்படும்,
அதாவது ஏடிஸ் எஜிப்டை (aedes aegypti) அல்லது ஏடிஸ் அல்பொபிக்டஸ் (aedes albopictus) எனும் கொசு இனத்தின் பெண் கொசுக்கள் கடிப்பத்தின் மூலமாக நம்ம உடல் உள்ளுக்கு சென்ற வைரஸ் பன்மடங்காக பெருகிவரும் அந்த காலகட்டத்தின்...
துவக்க நாளில் கடுமையான காய்ச்சல் வரும் அது 24 மணிநேரம் கழித்து, சில சமயம் தன்னால் விட்டு வியர்வை வியர்க்கும், பார்ப்பதற்கு காய்ச்சல் விட்டது போன்றுதொரு ஒரு உணர்வும் தரும்...
ஆனால் 6 முதல் 12 மணிநேரம் கழித்து நம்ம உடம்பின் எதிர்ப்பு சக்தியானது தாக்கிய தாக்குதலை உணர்ந்து தனது முழு எதிர்ப்பு சக்தியை கொண்டு போரை மீண்டும் கிளப்பி தாக்குதலில் இரங்கும்.
அப்படியான நோய் எதிர்ப்பு தாக்குதல் காய்ச்சல் வந்து 5 முதல் 7 நாட்கள் வரை மிக வீரியமாக இருக்கும்.
இந்நிலையில் தான் மருத்துவர்கள் realtime RT-PCR (Reverse Transcription - Polymase Chain Reaction) இரத்த பரிசோதனையில் டெங்கே வைரஸ்ஸுக்கு பிரத்யேகமான fluorescent dye கொண்ட detector திரவத்தை செலுத்தி ஒலிரூட்ட செய்து ஊர்ஜிதம் செய்வார்கள். அதுவே 7 முதல் 12 நாட்கள் கழித்து மருத்துவரிடம் சென்றால் DENV IGm & DENV IGg மற்றும் RBC & WBC இரத்த அணுக்களின் எண்ணிக்கை டெஸ்ட் எடுத்து பார்ப்பார்கள்.

(குறிப்பு: டெங்கே பொதுவாக, குழந்தைகள், உடல் பலகீனமுறற கற்பினி தாய்மார்கள், மாதவிடாய் காரணத்தால் அதிக இரத்தம் இழந்த இரத்த சோகை உள்ள பெண்கள், உடல் பலம் தளர்ந்த முதியவர்கள் என இவர்களை தான் மிக எளிதாக தாக்கும்.)
ஜுரம் அல்லது காய்ச்சல் எனும் உடலில் சூடு எப்படி வருகிறது?
இந்நிலையில் தாக்குதலுக்கு உண்டான சூழ்நிலையை உணர்ந்து மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் என்ற பகுதியானது... Pyrogen என்கிற ஒன்றை வெளிப்படுத்தி உடம்பு சூட்டை அதிகரிக்க செய்யும் அப்படியான நிலையில் நாம் உடலில் உணரும் வெப்ப சூழல் தான் காய்ச்சல் என்பது... இது நோய் எதிர்ப்பு வீரியத்தை அதிகரிக்க இயற்கையின் பிரதிபலிப்பு.
மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் எனும் பகுதி தான் நமது உடம்பின் தட்பவெப்பத்தை கண்காணித்து சீரமைத்து கட்டுப்படுத்துகின்றது.
அதுவல்லாமல் இந்த ஹீலர் healers என்கிற பாஸ்கர் மற்றும் மதிவாணன் போன்ற மதி அற்றவர்கள் கூறுவது போன்று அசுத்தத்தை ஒர் இடத்தில் மற்றொரு இடத்துக்கு அகற்றுவதால் ஏற்படும் உராய்வு அடிப்படையில் ஏற்படும் சூடு அல்ல காய்ச்சல் என்பது.
ஆக அப்படியான நிலையில் உடம்பு சூட்டை அதிகரிக்க இரத்தத்தில் விடுக்கப்படும் பைரோஜன், இரண்டு வகைப்படும்
1. Endogenous (internal) pyrogen
2. Exogenous (external) pyrogen

இதில் நான் முதலாவதாக குறிப்பிடுள்ள எண்டோஜனஸ் பைரோஜன், நோய் எதிர்ப்பு செல்களால் உந்தப்பட்டு உருவாக்கப் படுகிறது.

பொதுவாக வைரஸ், பாக்டீரியா போன்றவை நோய் எதிர்ப்பு செல்களை தாக்கும் போது அந்த செல்கள், தனக்கு ஏற்பட்டுள்ள தாக்குதலை உடனே மூளைக்கு உணர்த்தி பைரொஜெனை இரத்தத்தில் செலுத்தி ஏனைய உறுப்புகளின் செயற்பாட்டை சற்று குறைத்துக் கொள்ளும் வகையில் சமிக்கை அனுப்பும்.
ஆனால் எக்சொஜனஸ் பைரோஜன் என்பது பெயரில் உள்ளது போன்று வெளியே இருந்து வரும் காரணிகளால் உந்தப்பட்டு காய்ச்சல் உந்தப்படும்.
ஆக மொத்தத்தில்... உங்களுக்கு புரியும்படியாக சொல்வதென்றால்...
எக்சொஜென் பைரோஜென் எனும் வெளிப்புற காரணிகளால் உருவான பைரோஜென்... நோய் எதிர்ப்பு செல்கள் மூலமாக எண்டோஜென் பைரோஜன்களை கொண்டு உடம்பு சூட்டை அதிகரிக்க செய்யும்.
இது வல்லாமல் நோய் கிருமிகளின் தாக்குதல் இல்லாத ஏனைய சுற்றுச்சூழல் தட்பவெப்ப சூழ்நிலைகளை கொண்டும் சருமத்தின் வாயிலாக, ஹைப்போ தாலமஸ் என்ற மூளையின் பகுதியானது தெர்மோஸ்டெட் போன்று வெட்ப மிகுதியான நேரத்தில் வியர்வையை கொண்டும், குளிர் மிகுதியான நேரத்தில் நடுக்கத்தை கொண்டும் உடலின் வெட்ப நிலையை சரிசெய்து தக்கவைத்துக் கொள்ள கட்டளை இடுகிறது, (இதற்கு பைரொஜெனை வெளிப்படுத்தாது.)
அது சரி... அப்போ உடலில் ஏற்கனவே நோய் கிருமி தாக்கப்பட்டு இருக்கும் சமயத்தில் ஹைப்போதலமஸ் ஏன் உடம்பை சூடேற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்...
அதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகமாக செயற்படுத்த வைக்கவும், வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தான்...
காய்ச்சல் அல்லது ஜுரம் என்பது நமது உடம்பின் இயறக்கையான நோய் எதிர்ப்பின் பிரதிபலிப்பு தான்.
நல்லது தானே அப்போ எதுக்கு மாத்திரை போட்டு கட்டுப்படுத்த பார்க்கிறோம் என்று உங்களுக்கு தோனலாம்..
அதற்கு முக்கிய காரணம் acute febrile period எனும் காய்ச்சல் நேரத்தில் நாம் எதிர்கொள்ளும் சோர்வு உடல் வலி போன்றவற்றை அனுபவித்து சகித்துக் கொள்ள முடியாத காரணத்தால் தான் நாம் காய்ச்சலுக்கு paracetamol மற்றும் acetaminophen எடுத்துக் கொள்கிறோம்.

(குறிப்பு: டெங்கே காய்ச்சல் உள்ளவர்கள் NSAID (Non Steroidal Anti Inflammatory Drug) வகை மாத்திரைகள் எனும் ibuprofen, Aspirin, Naproxen, Diclofenac எடுக்கவே கூடாது)
அது மட்டுமல்லாமல் காய்ச்சலில் அகப்பட்டுள்ள சமயத்தில் அது என்ன மாதிரியான வைரஸ் அல்லது பாக்டீரியா என்று கண்டறிந்து தகுந்த ஆண்டிபயாடிக் கொடுத்து நோய் எதிர்ப்பு சிகிச்சை செய்ய வேண்டும்.
அப்படி செய்யாவிடில் காய்ச்சலின் போது உடல் நலிவுற்ற நிலையில் அக்கிருமியின் வீரியமிக்க பக்க விளைவுகளால் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் தான் சிகிச்சையின் போது காய்ச்சலை கட்டுக்கு கொண்டு வந்து உடலை தேற்றி அந்த கிருமியை தனித்து தாக்க முற்படுவார்கள்.
(குறிப்பு: டெங்கே வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை)

டெங்கே வைரஸ் காய்ச்சலை பொருத்தமட்டில், எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு, இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவதும், இரத்தத்தில் சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் சாகடிக்கப்பட்டு குறைவதும், அதனால் சன்னம் சன்னமாக இரத்த அணுக்கள் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து இரத்தம் உரையும் தன்மை இழந்து உடலில் இரத்த கசிவு hemorrhage ஏற்பட்டு இறக்கும் நிலை ஏற்படும் என்பதால் டெங்கே காய்ச்சலையும் அதற்கு காரணமான DENV 1,2,3,4 என்கிற நான்கு வகையான வைரஸ் ஏற்படுத்தும் இரத்த அணு குறைவு பாதிப்பையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
டெங்கே காய்ச்சலுக்கு breakbone fever என்கிற மற்றொரு பெயரும் உண்டு.. காய்ச்சல் தாக்கப்பட்ட acute உச்சக்கட்ட நிலையில் எலும்பை நெரித்து முறிப்பது போன்ற வலியுடன் மூட்டு வலி, அடி வயிற்று வலி, தலை பாரம், கண் விழியை அங்கும் இங்கும் திருப்ப முடியாத அளவிற்கு கண்ணுக்கு பின்புறம் முழுவதுமாக வலிக்கும்.
இந்த டெங்கே வைரஸ்ஸில் நான்கு வகைகள் உண்டு...

அது DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 என்பதாகும்.

சமீபத்தில் DENV-1 வந்து தாக்கப்பட்ட ஒருவரின் உடலில் முதல் 7 முதல் 12 நாட்கள் DENV1 IGm எனும் அதே வைரஸின் நோய் எதிர்ப்பு antibody மிகுந்து காணப்படும். அதுவே சிறிது நாட்கள் கழித்து DENV IGg எனும் immunoglobulin g ஆக் மாறி மாதக் கணக்கில் தங்கி இருந்து மீண்டும் DENV-1 எனும் அதே வைரஸை அண்ட விடாது தற்காக்கும்....
என்றாலும் அதே நபருக்கு DENV-2, 3, 4 தாக்க தக்க ஏதுவான susceptible நபராக மாறிவிடுகிறார்.
இந்நிலையில் அடுத்தடுத்து மீதமுள்ள 3 வகை வைரஸ்சில் ஏதாவது ஒன்றின் தாக்குதலுக்கு அவர் உள்ளாக நேரிட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி T cells ஆனது வைரஸின் வெளிப்புற தோற்றத்தை கன்டு ஏமாறி ஏற்கனவே வந்து தாக்கிய DENV-1 தான் எனக்கருதி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த அதன் antibodyயை கொண்டு எதிர்த்து ஏமாற்ந்து தோற்று போக... புதிதாக வந்துள்ள DENV-2 ன் தாக்குதல் பாதிப்பு மிக வேகமாக இருக்கும்.
இத்தகைய இந்த டெங்கே வைரசின் மாறுபடும் antigen antibody குனாதசியத்தால் தான் இதற்கு அலோபதியில் இன்னமும் மருந்துகள் கண்டுப்பிடிக்க முடியாமல் உள்ளது.
நிலவேம்பு எனும் சிறியாநங்கை ஆங்கிலத்தில் king of bitter எனும் andrographis paniculata கசாயம் கூட DENV-1 எனும் வைரஸை மட்டும் தான் 80% சதவிகிதம் கட்டுப்படுத்துமாம்...
அதுவே DENV-1 தாக்குதலுக்கு ஏற்கனவே உள்ளாகி உடல் தேர்ந்த நிலையில் DENV-2, DENV-3 மற்றும் DENV-4 போன்ற ஏனைய 3 வகை வைரஸ்களில் ஏதாவது ஒன்றில் மீண்டும் பாதிக்கப்பட்டால் நிலவேம்பு அவ்வளவாக உதவாது எனவே அம்மன் பச்சரிசி (euphorbia hirta Linn) போன்ற மூலிகை இழையை காய்ச்சி வடிகட்டி கூடுதல் மருந்தாக உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
அதுபோக பாகற்காய் (momordica charabtia), வேப்பிலை போன்றவையும் வைரஸ் காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக உள்ளது என்கிறார்கள், ஆனால் உலகளாவிய அளவில் இருக்கும் medical journal களில் இன்னமும் போதிய கிளினிக்கல் ஸ்டெடி வேண்டும் என்று மருத்துவ உலகத்தை கோருகிறார்கள்.

அதுபோக இரத்த அணுக்களை அதிகரிக்க பப்பாய பழ மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாரு (எடுக்கப்படும் விதம் மிக முக்கியமாகும்) நல்ல ஊட்ட சத்தாக உள்ளது.
இதற்கு அலோபதி மெடிக்கல் ஜோர்னலில் நிருபிக்கபட்ட ஆய்வு கட்டுரை இருக்கு.
ஆக எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து வகையான காய்ச்சலின் போதும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
உடல் சக்திக்கு புரத சத்து மிக்க (கோழி) நன்கு வேக வைத்த சூப்பை உணவாக உட்கொள்ளுதல் அவசியம். காய்ச்சலின் போது வாய் கசந்து இருக்கும் நிலையில் பொருட்படுத்தாது புரத சத்து எடுத்துக்கொள்வது அவசியம்.
இப்படிக்கு,
நியூயார்க் நகரத்திலிருந்து,
நாகூர் தீன்
Twitter: @nagoredeen
Facebook: http://www.Facebook.com/nagoredeen
website: http://www.nagoredeen.com

Sunday, September 24, 2017

LPG சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறுமா?

பரவலாக கடந்த 5 வருடங்களில் புதிதாக ஸ்மார்ட் ஃபோன் வாங்கி இணைய உலகத்தில் நுழைந்த பலர் தனக்கு வரும் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் அல்லது சிந்திக்காமல் ஆய்விற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பொறுப்பும் இல்லை என்று... எந்த செய்தியாக வதந்தியாக இருந்தாலும் கூட எனது மனதுக்கு ஏற்புடையதாக சரியென சுவாரஸ்யமாக பட்டால் நான் அப்படியே மற்றவர்களுக்கும் பார்வேர்ட் செய்வேன் என்று ரீதியில் பார்வேர்ட் கலாச்சாரத்தில் முழ்கி பரப்பி வருவதை சகஜமாக காண முடிகிறது. அவ்வடிபப்டையில் தான் இன்று எனக்கும் Whatsappல் ஃபார்வேர்ட் மெசேஜ் ஒன்று வந்தது... வந்த மெசேஜ் மிக நீண்ட கதை என்பதால் சுர்க்கமாக எழுதி இருக்கிறேன்: சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கல்யாண விடுமுறை ~ டியுட்டியில் சேர்ந்ததிலிருந்து ஆரம்பிச்சு ~ அருகில் வீடு ~ இனி வீட்டு உணவு உண்ணலாம் சந்தோஷம் ~ ஃபோன் அலறியது ~ வீடு ஒன்று தீ விபத்து ~ தீ அணைப்பு ~ தடயவியல் நிபுணர் ~ நிசப்தமான புகை மண்டல வீடு ~ கவனமாக மெல்ல பார்த்தார் ~ சமயலறை பகுதியில் குரல் ~ கை கால் நடுக்கம் ~ இறந்த கணவன் அருகில் தீ காயத்துடன் மனைவி ~ ஆம்புலன்ஸ் பயணம் ~ மனப்போராட்டம் ~ வாக்குமுலம் ~ நேற்றையதினம் சூடான பால் கையில் காயம் ~ எனவே இன்று கணவர் சமையல் ~ கடைக்கு சென்று வருகையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ~ கணவரை காப்பாற்ற தனக்கும் பாதிப்பு ~ தன்னை காப்பாற்றிவிட வேண்டாம், மனைவி கதறல் ~ சிறிது நேரத்தில் இருவரும் சொர்கத்தில் சந்திப்பு ~ தடவியல் நிபுணர் ஃபோன் ரிப்போர்ட் ~ விபத்துக்கான காரணம் ~ இவர் வீட்டுக்கு சென்று பார்க்கிறார் ~ அதிர்ச்சி !!! இது தான் இந்த செய்தியில் dramatization செய்யப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ள கட்டுக்கதை.... ஒரு விஷயத்தை சொல்ல இவ்வளவு பெரிய கதை ஏன்? அதில் இவ்வளவு சென்சிடைஸ்செஷன் ஏன்? அதற்கும் மேலாக மக்களை நம்ப வைக்க "உண்மை சம்பவம்" என்ற தலைப்பு வேறு. உண்மையில் கேஸ் சிலிண்டருக்கு காலவதியாகும் எக்ஸ்பைரி தேதி இருக்கா? என்றால் இல்லை என்பது தான் எதார்த்த உண்மை... அப்போ சமையல் சிலிண்டரில் உள்ள A,B,C, D என்ற காலாண்டை குறிக்கும் எழுத்தும் அதனை தொடர்ந்த எண்ணும் எதை குறிக்கிறது?


அது சமையல் சிலிண்டரின் DUE PERIOD FOR TESTING அதாவது பரிசோதனைக்கு உரிய காலக்கெடுவை குறிக்கிறது.
அதையும் தாண்டி சமையல் சிலிண்டர் வெடிக்குமா?
வெடிக்காது, துகள்களாக வெடித்து சிதற அந்த சமையல் சிலிண்டரின் உலோகம் அவ்வளவு எளிதானதில்லை.
மேலும் சமையல் சிலிண்டர் தாங்கும் சக்திக்கு மிகுந்த அழுத்தமும் பிரஷ்ஷரும் அந்த சிலிண்டருக்குள் இல்லை.
சுற்றுப்புற அதிகளவு வெட்பத்தினால் சிலிண்டரின் துவாரம் வழியாக கேஸ் லீக்காகி பின்னர் மண்டலமாக கோர்த்து நிற்கும் கேஸ் பகீரென பற்றி வெடிக்க வாய்ப்பு இருக்கே ஒழிய சும்மா இருக்கும் சிளின்டரே திடீரென வெடிக்க வாய்ப்பு இல்லை.... இன்னும் சொல்லப்போனால் திரைப்படத்தில் காட்டுவது போல துப்பாக்கியால் சுட்டாலும் கூட, லீக் தான் ஆகுமே தவிர பற்றி வெடிக்காது... மேலும் LPG சமையல் கேஸ் ஆனது ஏனைய வாயு போன்று அல்லாது காற்றில் வெகுவாக மிக வேகமாக கலந்து விடும்.... அதுபோக வெளிப்புற தட்பவெட்ப சூழலினால் ஏற்படும் உட்புற வாயு விரிவாக்கத்துக்கு இடமளிக்கும் விதமாக அதன் கொள்ளவில்லை 80–85% வரை தான் நிரப்புவார்கள்.

ஆகவே LPG எனும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் காலவிதியாகி தன்னாலேயே  பாதியாக அல்லது துகள்களாக வெடித்து சிதற சாத்தியமே இல்லை அப்படியான சம்பவம் நடந்த ரெக்கார்டும் இதுவரை உலகில் எங்குமே பதிவாகவும் இல்லை.

குறிப்பு: https://www.iocl.com/download/statement-from-iocl.pdf 

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்  
24/09/2017










Saturday, September 23, 2017

நாகூர்.ம.ந.ச. போராளிகள், நாகூர் பிரச்னையை.... தமிழகம் அறிய முயற்ச்சி செய்துவிட்டார்களா?

சின்னதா ஒரு கூட்டம், அதற்கு "தமிழக" என்ற ஒரு அகண்ட டைட்டல் அதற்குள்  தமிழகத்துக்கே அறிய செய்துவிட்டோம் என்கிற திருப்தி வேறு.... வேடிக்கையான மக்களும் அவர்களது வினோத பிரச்சனைகளும். 

ஆக்சுவலா இப்ப வர வர தமிழக மக்களின் 
உண்மையான போராட்டமே என்னானா பிரச்சனையின் அடிப்படையில் போராட்ட குழுக்களை நம்புவதா அல்லது போராட்ட குழுக்களின் அடிப்படையில் உண்மையான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்புவதா என்பது தான்...

எவர் MLA வாக இருக்கும்போ இந்த துறைமுகம் கட்டப்பட்டதோ அவரே இப்ப போராளியாக மாறி தன்னை தானே people savior ஆக காட்டிக்கொள்வதும்....

முன்பை காட்டிலும் இப்ப அதிக அளவில் மேற்படியான் வெளிப்படையாவே செயற்படுவதும்....  


நல்லா பிடிக்கிறாருபா தும்ப விட்டுட்டு வாலை... பாவம் அவரும் தான் என்ன செய்வாரு தனக்கும் எதாச்சும் வேணும்ல முன்னிலை படுத்திக்க..
ஆக இதில் உள்ள போராட்ட குழுக்களை வைத்து பார்க்கையில்....

தமிழக மக்களின் மொத்த பிரச்சனையே இம்புட்டு தானா இல்ல ஒட்டு மொத்த போராடட குழுக்களின் எண்ணிக்கையே அம்புட்டா என வியப்பாக இருக்கிறது... 


இதன் மத்தியில் நீங்க உங்க பிரச்சனையை "தமிழகம் அறிய முயற்ச்சி செய்து விட்டீர்களா" பேஷ் பேஷ்...

உங்க முயற்ச்சியை குறை சொல்லவில்லை ஆனா உங்கள நீங்களே "தமிழகம் அறிய முயற்ச்சி செய்துள்ளோம்" என்று கூறி தட்டிக்கொடுத்துக் கொள்கிறீர்களே அதை கண்டு தான் வியக்கிறேன்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன் 

நாகூர் தீன் 
23/09/2017




Friday, September 22, 2017

டொனால்ட் டிரம்ப்பின் பதவி காலம் இனி நீடிக்குமா?

டொனால்ட் டிரம்ப் இன்னும் அதிக நாட்களுக்கு அவரது பதவியில் நீடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப் படுகிறது.... என்ன காரணம்? ஒன்றா இரண்டா இரண்டாயிரம் இருக்க அதில் எதை எதை சொல்ல.... நாளொரு புத்தி பொழுதொரு கோளாராக உளறுவது மட்டுமல்லாமல் செய்துக்கொண்டு வந்தால் யாருக்கு தான் சரிபட்டு வரும்....

சில மாதங்கள் முன்புவரை அமேரிக்க அதிபர் என்றாலே சர்வதேச அளவில் ஒரு மாபெரும் மதிப்பு இருந்து வந்தது அது இப்போ அதல பாதாளத்தில் மதிப்பு இழந்து, ஓஹ்...! அவனா என்று கேளிக்கைக்கு உரியதாக ஆகிவிட்டது.

இப்போதைய காலத்துக்கு சர்வதேச தலைவராக மக்கள் போற்றுவது யாரை என்றால் அது ஜெர்மானிய ச்சான்ஸ்லர் அங்கலா மெர்கல்... அவர்களை தான்... ( வரும் 24 செப்டெம்பர் , 2017 அன்று ஜெர்மனியில் தேர்தல் நடக்க இருக்கிறது.)

இந்நிலையில் இந்த வருட இறுதிவரை டொனால்ட் டிரம்ப் தாக்கு பிடித்தல் என்பது பெரிய விஷயம் என வாஷிங்டன் வட்டாரத்தில், ஆளும் பெரும்பான்மையான ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்த மூத்த செனட்டர்களே அதிலும் செனட் மெஜாரிட்டி தலைவரே முனங்க ஆரம்பித்து விட்டார் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது...

அதிலும் குறிப்பாக கடந்த ஏழு மாதத்தில் டொனால்ட் டிரம்ப்பிற்கு மிக நெருக்கமான கூட்டாளிகள் ஆன ஆலோசகர் மற்றும் முக்கிய செக்ரெட்ரிகள் என
1. மைக்கல் ஃப்லின் (பிப்ரவரியில்)
2. ரயன்ஸ் ப்ரீபஸ்
3. ஷான் ஸ்பைசர்
4. அந்தொனி ஸ்காராமுச்சு ( வெறும் பத்து நாட்களே நிலைத்த "தி மூச்")
5. ஸ்டீவ் பேனன் (ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகரில் ஒருவர்)
6. செப் கோர்கா (கவுண்டர் டெரொரிஸம் அட்வைஸர் பதவியில் 25/08/2017 வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டார்)

அந்தொனி முச்சி, ஸ்டீவ் பேனன் மற்றும் செப் கோர்கா ஆகியோர்  புதிதாக பதவிக்கு வந்த வெள்ளை மாளிகையின் ச்சீஃப் அஃப் ஸ்டாஃப் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜான் கெல்லி அவர்களால் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் டொனால்ட் டிரம்புடன் இப்போது நெருங்கி இருப்பது அவரது மகளும், மகளின் கணவன் மருமகனான ஜனாதிபதி ஆலோசகர் ஜரெட் குஷ்னர் மட்டும் தான்...

நான் முந்தைய பாராவில் குறிப்பிட்ட முன்னாள் ஹோம் லாண்ட் செக்யூரிட்டி தலைவரும், தற்போதைய வெள்ளை மாளிகையின் ச்சீஃப் அஃப் ஸ்டாஃப் ஆன,  முன்னாள் இராணுவ ஜெனரல் ஜான் கெல்லி அவர்கள் கூட தற்போது டொனால்ட் டிரம்ப் என்றவரை ஒரு புத்தி ஸுவாதீனம் இல்லாத சிறு குழந்தையை பராமரிப்பது போன்று தான் ஒழுங்கு படுத்த முயற்சித்து அலுத்து போகிறார் என்றும் வாஷிங்டன் வட்டாரத்தில் செய்திகள் அடிப்படுகிறது.

ஏற்கனவே இவராக புதிதாக பிரச்சனைகளை உருவாக்குவது போதாதென்று.. சென்ற வாரம் நிகழ்ந்த நியோ நாக்ஸி, கேகேகே, வெள்ளை இன மேலாதிக்கவாத இனவெறியர்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்த்த நிற வெறி, இன வெறி மற்றும் நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு காட்டிய மக்களுக்கு எதிராகவும், அமெரிக்க உள்நாட்டு சிவில் போர் சமயத்தில் இனவெறி தாண்டவம் ஆடிய வெள்ளை இன வெறிபிடித்த ஜெனரல்களின் சிலை அகற்ற கூடாதென என  இவர் வெளிப்படையாக பேசிய பேச்சு போன்றவைகள் கட்சி பாகுபாடு இல்லாத வகையில் அமேரிக்க பெரும் சமுதாய மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இவர் அமெரிக்க பொதுமக்களின் ஜனாதிபதியாக இல்லாமல் இனவெறியர்களின் பிரதிநிதியாக இருக்கிறாரே என்று இவரது நெருங்கிய கூட்டாளிகளே இவரை விட்டும் தள்ளி போய் நின்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இவ்வாறான சூழலில் தான், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அவமதித்த இனவெறி தனமாக ஹிஸ்பானிக் மக்களுக்கு எதிராகவும் காவல்துறை கஸ்டடியில் இருந்த ஹிஸ்பானிக் கைதிகளிடம் கொடுமையான விதத்தில் நடந்தது போன்ற அடுக்கடுக்கான எண்ணற்ற குற்றத்துக்கு சொந்தக்காரரான அரிசோனா மாநிலத்தில் உள்ள மரிகோபா கவுண்ட்டி காவல்துறை ஷெரீப் ஜோசஃப் அர்பெயோ வை ஜனாதிபதி மன்னிப்பில் டொனால்ட் டிரம்ப் விடுவித்தது போன்றவை அமெரிக்க மக்கள் விரோத போக்காக, வெள்ளை இனவெறி போக்காக  பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் டிரான்ஸ் ஜெண்டர் இராணுவ வீரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக பேசி வருவதும் அமேரிக்க மக்கள் மத்தியில் அமெரிக்க அதிபரை நோக்கிய கசப்புணர்வை அதிகரிக்க செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இதனிடையே ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் வலுப்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் புரட்சி எதிராக, அந்நாட்டில் ஒரு காலத்தில் நாகரிகம் மேலோங்கி பெண்கள் குட்டை அரைப்பாவாடை அணிந்தவர்களாக இருந்துள்ளார்கள் என்ற  பழைய 75 ~ 80 களின் புகைப்படத்தை டொனால்ட் டிரம்ப்பிடம் காட்ட அவரும் அப்ப சரி இன்னும் கூடுதலாக துருப்புகளை அனுப்பி மீண்டும் சண்டையிட்டு நவநாகரீகத்தை நிலைநாட்டுவோம் என்று ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ கன்ஸர்வேடீவ் செய்தி ஊடகங்கலும் வெட்கம் இல்லாமல் குறிப்பிட்டதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஃபேஸ் புக்கில் பலரும் படிக்கும் வகையில்.

இப்படிக்கு,
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.
(எழுதிய தேதி 26 ஆகஸ்ட், 2017)

ஈகை பெருநாள் அன்று மறைந்த தம் உறவினருக்காக குர்பானி கொடுக்கலாமா?

ஈகை பெருநாளின் குர்பானியை பொருத்தமட்டில்...

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் மறைந்த தமது பெற்றோருக்காகவோ அல்லது தமக்கு அரவணைப்பாக இருந்த சிறிய தந்தைக்காகவோ,  இன்னும் சொல்லபோனால் தனது
பிரியமான பாசமிகுந்த இஸ்லாத்தை முதன்முதலில் ஏற்ற மனைவி கதீஜா (ரலி) அவர்களுக்காகவோ அல்லது அவர்களது நினைவாகவோ அல்லது அவர்கள் சார்பாகவோ ஹஜ்ஜு பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்தது கிடையாது.

அது போக சஹாபா பெருமக்கள் கூட நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னாளில், நபி (ஸல்) அவர்களின் சார்பாக அல்லது அவர்களின் நினைவாக ஹஜ்ஜு பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்ததும் இல்லை...

இன்னும் சொல்லப்போனால் பெரும் பெரும் ஈமாம்கள், தலைசிறந்த இஸ்லாமிய ஆய்வியல் அறிஞர் பெருமக்கள் கூட   மறைந்தவர் சார்பாக குர்பானி கொடுத்ததில்லை.

அப்படி இருக்க, வழிமுறைகள் அல்லாது.. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கூட மறைந்த உறவினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என, அல்லது அவர்கள் பொருட்டு ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு குர்பானி கொடுக்க எந்த ம அடிப்படை சட்ட விதிமுறையும் இல்லை.

எனினும் விதிவிலக்காக, குர்பானி கொடுக்க மிகமிஞ்சிய  போதிய செல்வம் இருந்த நிலையில் ஒருவர் தனது சார்பாக அல்லாஹுக்காக குர்பானி கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட நிலையில் மரணத்தி இருந்தாலே ஒழிய அவருக்காக இன்னொருவர் அவரது செல்வத்தில் இருந்து குர்பானியை நிறைவேற்றலாம் என்று ஹம்பலி வழிமுறையில் உள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள்..

இது கூட  அல்லாஹுக்காக என்று அவர் உயிருடன் இருந்த காலத்தில் நேர்ந்துக்கொண்ட நேர்ச்சை என்ற அடிப்படையில் அவர் விட்டு சென்ற போதிய செல்வத்தில் இருந்து அவருக்காக நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் மட்டுமே, மார்க்க வரையறுக்கப்பட்ட அடிப்படைக்கு உட்பட்ட நிலையில் ஆகுமானதாக ஆகும்.

ஆனால் இன்றைய காலத்தில் குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் குர்பானி கொடுத்தால் போதும் என்ற இஸ்லாமிய அடிப்படையை உணராது...

அதிலும் கூட ஹஜ்ஜு பெருநாள் அன்று அல்லாஹுக்காக குர்பானி கொடுப்பது என்பது உயிருடன் இருப்பவர்களின் சார்பாக  மட்டுமே கொடுப்பது என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாமல்...

சிலர் சமீபத்தில் மறைந்த குடும்ப உறுப்பினர் சார்பாக குர்பானி கொடுப்பதும்..

நபி (ஸல்) அவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது என்ற நூதன சடங்கை அனுஷ்டித்து வருவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் வரையறுக்கப்பட்ட அடிப்படைக்கு கட்டுப்படாமல் வரம்பு மீறுவதாகும் என மார்க்க அறிஞர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

அதுபோக ஹஜ்ஜு பெருநாள் தினத்தை முன்னிட்டு குர்பானி என்பதும் கூட ஒருவருக்கு "கட்டாய கடமையா" அல்லது வசதி வாய்ப்பு இருப்பின் மட்டும் அல்லாஹுக்காக என்று "கூடுதல் நன்மை" சேர்க்கும் விஷயமாக செய்யப்படும் ஒரு அனுஷ்டானமா என்ற மார்க்க அடிப்படை உணர்ந்து செயற்படுவது நலம்.

மார்க்க அடிப்படையில் எதை செய்தாலும் அதன் முழு அடிப்படை உணர்ந்து எதற்காக?, ஏன்?, எவ்வாறு? என மார்க்க வரையறை உணர்ந்து அல்லாஹுக்காக மட்டுமே என செய்வது தான் ஆத்மார்த்தமான புரிதலுடன் செய்வது போன்று ஆகும், அப்போது தான் அதன் பலனும் நமக்கு முழுமையாக கிட்டும்.

அது அல்லாமல் ஏனோ தானோ என்று அடிப்படை உணராது செய்வது என்பது, என்னவென்றே அர்த்தம் உணராது எவறோ ஒருவர் புரியாது கேட்கும் வேண்டுதலுக்கு வெறுமனே கடமைக்கு மேம்போக்காக ஆமீன் சொல்லிவிட்டு கடமையை தீர்த்துக் கொள்வது போன்றாகும்...

செய்வதை எதற்கு எப்படி என்று தெரிந்து முழுமையாக புரிந்து ஆத்மார்த்தமாக நமது மறுமைக்கு பயனளிக்கும் வகையில் செய்வோம்.

அல்லாஹ் நம் அனைவரின் நல்ல அமல்களையும் ஏற்று அதன் நன்மைக்கு உரிய நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நாம் செய்யும் நல்ல அமல்களை நமக்கு பயனளிக்கும் வகையில் செய்வோமாக.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...