Friday, September 15, 2017

Nagore Mega Group Admin உடன் உரையாட எனக்கென்ன பயமா (#நேரக்கொடுமை)

அன்பார்ந்த "நாகூர் மெகா குரூப்பின்" வெளி விரக்தி துறை பொருப்பாளர் spokes person திரு. ஆஸ்திரேலிய அசைலம் அன்சாரி அவர்களுக்கு,

உங்களால் உங்க மேசேஜில் சுட்டிக்காட்டப்பட்ட அமேரிக்காவில் ஆரம்பம் முதல் லீகலாக புரொஃபெஷனல் கேட்டகிரி அடிப்படையில் குடியுரிமையில் வாழும்....,

அதுபோக உங்களை மெகா குரூப்பில் இருக்க சொல்லி வற்புறுத்தி சேர்த்துவிட்ட தீன் ஆகிய நான் தங்களுக்கு எழுதிக் கொள்வது...

நாகூர் மெகா குரூப் உங்களுக்கு கட்டுகோப்பான குரூப் என்றால் அது உங்கள மட்டும் தானே  கட்டுப்படுத்தும்....!!! 樂

இல்ல..!! ஊர் காரவங்க அம்புட்டு  பேரையும் அது  கட்டுப்படுத்துமா?

கட்டுப்பாடு மிகுந்தது என்பதால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா நீங்கள்? 樂

உள்ளே வந்து பேச நான் பயப்பட.... நீங்க என்ன சிங்கமா புலியா...

வெளியே இருந்து பேசுவதா இருந்தாலும் உள்ளே இருந்து பேசுவதாக இருந்தாலும் சமூக பொது பிரச்சனைகளை ஊர் அரிய பேசுவோம் வாங்க. 

உள்ளே உங்க குரூப்பிற்குள் வந்தும் பேசுவேன் தம்பி, ஆனா உள்ள தொடர்ச்சியாக இருந்துகிட்டே பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. 

அதே சமயம் நான் உள்ளே வந்து பேசும் வேளையில், உங்க நாகூர் மெகா குரூப் நாட்டாமை செணட் கமிட்டி சட்டதிட்டமெல்லாம்  எனக்கு பொருந்தாது... அதுக்கு ஓகேன்னா சொல்லுங்க அன்சாரி, நான் ரெடி.. 

நான் அங்க இருந்து பேசுனா சொல்கிற பாயிண்ட தவிர்த்து தேவை இல்லாத சண்டை சச்சரவு காரசாரமான விவாதம் எல்லாம் ஏற்படும் அது கண்டிப்பாக ஏற்படகூடாது... 

நான் பேச விரும்பும் விஷயத்தை பேச விடாது வாய் அடைப்பீர்கள், வாய் அடைக்க கருத்து சுதந்திர பேச்சு உரிமைக்கு தடையாக வெளியேற்றுவீர்கள்... அது கூடாது.

அதுக்காக தாண்டி செல்லம் நான் சுதந்திரமா வெளியே இருந்து எனது பேச்சை விரும்பும் எனது ஊர் கார உறவினர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டு இருக்கிறேன்... இத நான் எத்தனையோ தடவ  சொல்லியாச்சு.

சரி என்ன கூப்பிடுர நீங்க குரூப்ப விட்டு வெளியே வந்து பேசுங்களேன் என்னோடு பார்ப்போம்...

ஏன் தகிரியமான நீங்க துனிச்சல் மிக்க நீங்க தானே, ஏன் பிளாக் பன்னிட்டு பன்னிட்டு ஓடுறீங்க...珞?

நான் எங்கே இருந்து பேசினால் என்னா அன்சாரி, கருத்துக்கு கருத்து தானே எதிர்க்கொள்ள வேண்டும்.... நான் அறியும் வகையில் என் காதுபட எதுர்கொள்ளுங்களேன்.☺

ஏன் நான் வெளியே இருந்து பேசுவதால் உங்களுக்கு காது கேட்க மாட்டேங்குதா இல்ல பதில் சொல்ல முடிய மாட்டேங்குதா?

நான் நாகூர் மெகா குரூப்பில் உள்ளவர்களை பற்றியும், அந்த குரூப்பின்  மேலான்மை குழுவையும் திட்டியதாக கூறி இருந்தீர்கள்...
என்னவாக "திட்டி" இருந்தேன் சொல்லுங்க பார்ப்போம்...

எவரோ ரியாஸ் முஹம்மது என்பவர் எனது ஆடியோவை எடுத்து போட்டதால் உங்களுக்கு பத்து கேள்விகள் பிறக்கும் என்பதாக பேசி இருந்தீர்கள்...

அந்த பத்தையும் பெத்து போடுங்க.... அதுக்கு நான் பொறுப்பாளியாக இருந்தால் கண்டிப்பாக நான் பதில் தருவேன்.

அந்த ரியாஸ் முஹம்மது யார் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் அவர் இடத்திலேயே நான் பேசிய சப்ஜெக்ட்டுக்கு உட்பட்டு உங்க பத்து, ஆயிரம், லெட்சம் கேள்விகள கேளுங்களேன் அவர் எனக்கு அனுப்பி வைக்கட்டும் நான் பதில் சொல்கிறேன்.

தூதரை மிரட்டி பிரயோஜனம் இல்ல அன்சாரி, மேசேஜ் யாருடையது யார் பேசி அனுப்பி வைதாரோ அவர தான் நீங்க கேட்கனும்...

மார்க்க அடிப்படையில் தூதுவரை குற்றம் பிடிப்பது முறையல்ல...
He is just a messenger, who by chance co incidentally happens to like me.

By the way... நீங்க இந்த ஆடியோவ பேசி பதிவு செய்யும்போது நாகூர் மெகா குரூப்பில் எந்த பதவி வகித்து வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.... (ஆஸ்திரேலிய அஸைலம்) அன்சாரி?

இப்படிக்கு
தீன் மரைக்கார்
நியூ யார்க்கில் இருந்து.
11/09/2017

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க நிர்பந்திக்கிம் வாட்ஸ்ஸப் குரூப் (#நேரக்கொடுமை)

அன்பார்ந்த எனது இனிய நாகூர் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும்,  நாகூரை சேர்ந்த தீன் என்றழைக்கப்படும் நான் எழுதிக் கொள்வது...

நாகூர் மெகா குரூப் என்கிற வாட்ஸப் குரூப் ஒரு சில விஷயங்களை முன்முனைப்பாக எடுத்து மிக சிறப்பான முறையில் சமுதாய பிரச்சனைகளை காரசாரமாக விவாதித்து வருவது உங்களில் ஒரு சிலருக்கு தெரிந்து இருக்க கூடும் என நினைக்கிறேன்.

அப்படியான  இக்குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர்....
இந்திய சாஸனம் நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தலில் பங்கேற்பது கூடாது, புறக்கணிக்க வேண்டும் எனவும், வாக்களிக்க கூடாது புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வாதிடுவதாகவும்...

மேலும் அது குறித்து நம் நாகூர் மக்கள் இடத்தில் கருத்து திணிப்பு செய்ய வேண்டும் என சட்ட விரோதமாக வலியுறுத்தி வருவதாக கூறி ஒரு சிலர் வாட்ஸ்ஸப் வாயிலாக என்னிடம் கருத்து கேட்டார்கள்.

அதற்கு நானும் எனது தரப்பு பதிலை பதிவு செய்தும் இருந்தேன்...

அதற்கு அக்குரூப்பில் அங்கம் வகிக்கும் நாகூரை செர்ந்த தற்போது ஆஸ்திரேலியாவில் பொலிடிகல் அஸைலம் கோரி தஞ்சம் புகுந்துள்ள அன்சாரி என்ற இந்த, சட்ட விரோத தேர்தல் புறக்கணிப்புக்கு வித்திட்ட சூத்திரதாரி ஒருவர்.....

எனக்கு மறுப்பு ஒன்றை நாகூர் மெகா குரூப் என்ற குழுமத்தின் சார்பாக அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார் என தெரிய வந்தது.

அதற்கு நான் பதில் தருவதற்கு முன்பாக... நாகூர் மெகா குரூப்பின் நிலைபாடு குறித்த எனது கருத்தை இங்கே உங்கள் பார்வைக்கு விவரப்படுத்திட ஆசைப் படுகிறேன்.

நாகூர் தொடர்பான நாகூர் பிரச்சனைகள் குறித்த, நம்ம சமுதாயம் சம்பந்தப்பட்ட மேட்டர மட்டும் போடுங்க என்கறார்களாம்... நாகூர் மெகா குரூப்பில் உள்ள ஆதிக்கவாதிகள்...

ஆனால் நாகூர்  சம்பந்தப்பட்ட மேட்டராக இருந்தாலும் கூட குரூப்புக்கு வெளியே இருக்கும் ஆட்கள் பேசியதாக இருக்க கூடாது, குரூப்பில் உள்ள விவாத பொருள் பற்றியதாக இருந்தாலும், குரூப்புக்கு சம்பந்தம் இல்லாத வெளி ஆட்கள் பேசியதாகவும் இருக்க கூடாது என்றும் அவர்களுக்கு தோதான சட்டம் பேசி இருக்கிறார்கள், அப்படி மீறி பகிர்ந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாட்ஸ்ஸப் குரூப்பை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும்   கூறுகிறார்களாம்....

அதற்கு இவர்கள் தரும் காரணம் என்னவென்றால்...

நாகூர் மெகா குரூப் என்கிற வாட்ஸ்ஸப் குரூப்பை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் ஆடியோக்களை பொருத்தமட்டில்...
நாகூர் மெகா குரூப்பில் அங்கம் வகிப்பவர்கள் கேட்டால் மட்டுமே பதில் சொல்வோம்....

ஆனால் நாகூர் மெகா குரூப்பில் அங்கம் வகிக்காத வெளி நபர்கள் குரூப்ப பற்றிய கருத்தை முன் வைத்தால் அல்லது விமர்சனங்களை முன் வைத்தால் அல்லது ஆலோசனைகளை முன் வைத்தால் கூட இங்கே கொண்டு வந்து அதை பகிரவும் கூடாது, அப்படியே  நாங்கள் பகிர்ந்தாலும் நாங்க பதில் சொல்லவும் மாட்டோம், பகிரும் நபர் மீது நாங்க குரூப்பின் இபிகோ சட்ட விதி மீறலுக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்து வெளியேற்றுவோம் என்கிறார்களாம்...
இது வீணாக குரூப்பின் சூழலை கெடுக்கும் என்று தவிர்க்கிறோம் என்கிறார்கள்.

ஒரு சில சமயம் பிரயோஜனம் அற்ற மெசேஜ்கள் சூழலை கெடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை தான் என்றாலும்.

இம்மாதிரியான பலதரப்பட்ட கருத்தை எதிர்கொள்ளுதல், கருத்து பரிமாற்றம் செய்தல், கலந்துரையாடால்களில் ஈடுபடுதல் என்பதை உள்ளடக்கியது தானேப்பா குரூப் சொஷல் ஃபாரம் (Forum) என்பதெல்லாம்...

அதை விடுத்து...

நான் பேச நினைப்பதை  மட்டுமே நீ பேச வேண்டும், பகிர வேண்டும் என்பதெல்லாம் ஆதிக்க அடக்குமுறையாச்சே...

சரி அது உங்க தனிப்பட்ட சட்ட திட்டமே என்றாலும் கூட....

NMG எனும் Nagore Mega groupன் உள்ளே இருந்துக்கொண்டு வெளி உலகிற்கு தெரியா வகையில், வெளிப்படை தன்மை transparency இல்லாத வகையில்...

குரூப் உறுப்பினருக்கு அப்பாற்பட்ட, வெளியே பெருவாரியாக  பொதுமக்களாக வாழக்கூடிய சமூகத்தை பிரதிபலிக்கும் விஷயம் குறித்து பேச நிர்பந்திக்க இவர்கள் உரிமை எடுத்துக் கொள்ளும் அதே வேளையில்....

இவர்கள் எடுக்கும் பாரதூரமான நிலைபாடு மற்றும் பரப்புரை குறித்தும் இவர்களின் மேலாண்மை குழு என்ற அழைக்கப்படும் நிர்வாகிகள் குறித்தும், குரூப்பை விட்டு வெளியே வந்து  இவர்களின் உறுப்பினர்கள் கலந்து பேசி கருத்து கேட்கும் பட்சத்தில் நாகூரை சேர்ந்த சமூக உறுப்பினர் என்ற அடிப்படையில் விமர்சனத்தை முன்வைக்க தானே செய்வார்கள்.

அப்படியாக முன்வைக்கப்படும்    விமர்சனத்துக்கு  இவர்களின் பொருப்பாளிகளான மேலாண்மை குழு தானே பதில் சொல்ல வேண்டும்.

இது என்னாபா இவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்...

அது போக என்னை ஆலிம் (கற்று அறிந்தவன்) என்று பாராட்டிய நாகூர் மெகா குரூப் வெளி உறவு துறை spokesperson ஆகிய இந்தியாவில் வாழ வழியில்லை என கூறி ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கேட்டு  தஞ்சம் புகுந்துள்ள தர்சமயம் வழக்கு நிலுவையில் உள்ள அன்சாரிக்கு மிக்க நன்றி.

Kindly don't mess with me, it may hurt you very bad.

மற்றபடி... நீங்க நினைக்கும் விதமாக....

கூகிளில் இருந்து யாரும் படிப்பது கிடையாது படிக்கவும் முடியாது... காரணம் அது வெறும் செர்ச் எஞ்சின் தான்.

கூகிள் எனும் செர்ச் எஞ்சினில் இருந்து விவரங்களை தேடி பிடித்து தான் படிப்பேன்... அதுபோக இன்னும் சில கூகிள் அல்லாத வழிமுறைகள் மூலமாகவும் Akamai போன்ற கூகுள் போன்ற CDN நிறுவனங்கள் தணிக்கை செய்ய முடியாத யுக்திகளை கையாண்டும் கூட நுட்பமான விபரங்களை Python ஸ்கிரிப்ட் மூலமாக web scrapping செய்தும் எடுத்து படித்து அறிந்தும் பேசுவோம்...

அதுவல்லாமல் இங்கு கல்வி தொடர்பான பல்கலைக்கழக focus group இணைய குழுமங்கள் கலந்தாய்வுகளின் மூலமாகவும் இணையத்தின் மூலமாகவும் புத்தகங்களை வாடகைக்கு பெற்றும் பரிமாற்றம் செய்தும் படித்து அறிந்துக்கொண்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக விரிவுரை செய்தும் பேச தான் செய்வோம்.... இதில் என்ன பிரச்சனை இவருக்கு?

*குறிப்பு: தமிழக உளவுத்துறை, இம்மாதிரியான அரசியல் சாசனத்துக்கு எதிராக சட்ட விரோத சிந்தனைகளை பரப்புரை செய்து இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை விதைக்க நிர்பந்திக்கும் ஒரு சில வாட்ஸ்ஸப் குழும உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றென்றும் அன்புடனும் சமூக அக்கறையுடனும்.
தீன் மரைக்கார்
New York, USA
11/09/2017

NEET நுழைவுத் தேர்வு பற்றிய வாட்ஸ்ஸப் உரையாடல்

மீண்டுமொரு NEET நுழைவுத் தேர்வு பற்றிய உரையாடல்....  வாட்ஸ்ஸப்பில்

NEET எதிர்ப்பாளர்:
புதிய தலைமுறை லின்க் ஒன்றை எனது கவனத்துக்கு பதிவிடுகிறார்
http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29353-only-five-govt-school-students-get-medical-seat-through-neet-exam.html?frm=fb_instant

பதில்:
ஆக நீங்க அனுப்பி வைத்த புதிய தலைமுறை ஊடக  தகவலின் அடிப்படையில் மொத்தமிருந்த 3534  இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த 2314 மாணவர்களுக்கு அதாவது 65% state board மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்து இருக்கிறது...
ஆக புதிதாக இந்த சினிமா கூத்தாடிகளாக சேர்த்து தமிழ் மொழி பெயரால் நடத்தும் அரசியல் நாடக பொய் பிரச்சாரத்தின் அடிப்படையான, CBSE பள்ளி கூடங்களில் படித்த பிள்ளைகளால் மட்டுமே NEET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புக்கு செல்ல முடியும் என்பதெல்லாம், இத்தகவலின்படி முதல் வருடமே பொய்பித்து போய் உள்ளது என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்...
அதுபோக மற்றொரு வாதமான அனீதா போன்ற பிற்படுத்தப்பட்ட அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் இனி மருத்துவ படிப்பு படிக்கவே முடியாது  என்பதும் கூட பொய்பித்து போனது....
காரணம் அனீதா Gov. Aided பள்ளி கூடத்தில் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு +1 & +2 வகுப்புக்கு சுயநிதி தனியார் பள்ளி கூடத்தில் சேர்ந்து பாதி கட்டணத்தில் படித்து இருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்..
மேலும் அனிதா படித்த பள்ளியில் பெரும்பாலான பள்ளிகளை போல +1 ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை மிக விரைவாக காலாண்டுக்குள் நடத்தி முடித்துவிட்டு +2 பாடத்திட்டத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி இருக்கிறது.
அது போக தமிழகத்தில் நல்லா படிக்க கூடிய மாணவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை ஒரு சில தனியார் பள்ளிகள் அவர்களது பள்ளி கூட விளம்பரத்துக்காக தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டி, தத்தெடுக்கும் பழக்கம் நமது தமிழ் நாட்டில் நிகழ்ந்து வருவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

---------------------------------------------------------

NEET எதிர்ப்பவர்:
அப்போ அரசாங்கப் பள்ளியில் படித்த மாணவிகளின் நிலை?

பதில்:
இதுவரை எந்த நிலையில் இருந்து வந்தது என்பதை உணர்ந்து செயற்படுவதை பொறுத்து தான் இனி என்னவாக ஆகும் என்பதும் கூட.... அதன் நேற்றைய அல்லது இன்றைய நிலைக்கும் பாடத்திட்டத்தை முறையே பொறுப்பாக தடத்தாம்ல இருந்ததற்கும் NEET வேண்டாம் என்று அனிதாவின் வாக்குமூலம் இல்லா தற்கொலையை காரணம் காட்டி சொல்வதற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என நினைக்கிறேன்.
தமிழ்நாட்டு பாடநூல் சிலபசும் NEET syllabus தலைப்புகளும் ஒரே விதமாக இருப்பதை நான் ஏற்கனவே ஒன்றோடு ஒன்று ஒப்பீடு காட்டி நிரூபித்துக் காட்டிவிட்டேன், அது போக இந்த வருடம் கேட்கப்பட்ட NEET கேள்வித் தாளில் உள்ள multiple choice கேள்விகளுக்கு பாடபுத்தகங்களில் எங்கெங்கே எம்மாதிரியாக பதில் குறிப்பிடபட்டு உள்ளது அதை நாம் எவ்வாறு புரிந்து உணர்ந்து கிரகித்து (கடம் அடிக்காமல்) படித்து NEET தேர்வை சந்திக்க வேண்டும் என்பதை பற்றியும் விவரித்து பேசியும் எழுதியும்  இருந்தேன்.
அது போக, இதுவரையில் +2 தேர்ச்சி விகிதத்தில் பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்கள் எவ்வாறாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
அது மட்டுமல்லாமல் இங்கே அரசு பள்ளி கூடம் என்று குறிப்பிடுகையில் அது முழுமையாக அரசு நடத்தும் பள்ளிகூடமா அல்லது அரசாங்க நிதி உதவியில் இயங்கும் தனியார் மேனேஜ்மெண்ட் பள்ளிக்கூடமா என்பதையும் தெளிவுப்படுத்தி பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன், காரணம் நம் மக்களுக்கு இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னவென தெரிவதில்லை.
அப்படியே உங்க வாதப்படியே பார்த்தாலும் கூட கடந்த ஆண்டுவரை டாக்டர் படிப்புக்கு அரசு பள்ளிக் கூடத்தில் இருந்து காசு ஏதுமே கொடுக்காமல்  சென்றவர்கள்  எத்தனை பேர் என்ற புள்ளிவிவர கணக்கை பார்க்கும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... என்னமோ இந்த வருடம் மட்டும் தான் அதுவும் NEET தேர்வினால் மட்டும் தான் அந்த சேர்க்கை விகிதம் குறைந்து விட்டது போன்று அனிதா தற்கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களால் ஒரு மாயை உருவாக்கப்பட்டு  பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

--------------------------------------------------------

NEET எதிர்ப்பவர்:
அப்போ மருத்துவரின் மகன் மருத்துவர்..
விவசாயின் மகன் விவசாயி.. என்ற நிலை தானா இனி... அது தான் உண்மை

பதில்:
அப்படின்னு யார் சொன்னது? அதில் பெற்ற குடும்ப அனுபவம் கல்வியை விட பெருசாச்சே... என்ற அது ஒரு பக்கம் இருக்க.... இம்மாதிரியான வாதத்தை சந்தர்பத்துக்கு தகுந்தார் போன்று இது தான் உண்மை என்று உங்களுக்கு திரும்ப திரும்ப சில தமிழ் மொழி மற்றும் இன வெறி அரசியல் கட்சிகளால் மாயையாக  உருவாக்கப்பட்டு கிளர்ச்சியை தூண்ட போதிக்கப் படுகிறது...
அதை ஓரளவு தாண்டி வந்து பலரின் பலர் பல்வேறு வகையான துறையில் வெற்றி கண்டு முன்னேறி இருக்கிறார்கள்.
ஆனாலும் கடந்த 50 ஆண்டுகளில் அப்படியாக முன்னேற்றம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் தனக்கு கிட்டிய அங்கீகாரத்தை கொண்டு தனது அடையாளத்தை மறைக்க முற்பட்டு, தாம் முன்னேறி வர காரணமாக இருந்த சகோதர சமுதாயத்தை முன்னேற்ற பாடுபடாததால் அது இன்றளவும் பின்னோக்கியே இருக்கிறது எனலாம்.
இன்று இந்த தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல்  உலகத்தில் ஜாதிகளின் பெயரால் தகவல்கள் விவரங்கள்  மறுக்கப்படுவதில்லை தடை விதிக்கப் படுவதில்லை...
பொது போக்குவரத்து சேவை வந்த பிறகு எப்படி யாரும் பயணிக்கலாம் என்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து போனதோ அது போன்று ஸ்மார்ட் போன், கூகிள், யூடியூப், கான் அகேடமி போன்றவை எல்லாம் தற்சமயம் ஜாதி பேதம் இன்றி அநேகம் பேரால் உபயோகிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது...

----------------------------------------------------------

NEET எதிர்ப்பவர்:
இதன் அடிப்படையில் ஏழைகளின் மருத்துவக் கனவு... கனவாகவே தான் இருக்கனுமா?

பதில்:
மறுபடியும் பாருங்க திரும்ப திரும்ப புரியாமல் பேசுகிறீர்கள்...
கனவை கனவாகவே அதை நோக்கிய உழைப்பும் முயற்சியும் இல்லாமல் வைத்து இருந்தால் கனவு வெறும் கனவாக தான் போகும்....
நம் தரப்பில் இருந்து போதிய ஆக்கப்பூர்வமான வகையில் community developed measures எடுக்கப் படுவதில்லை...
அப்படியே முன்முயற்சி எடுத்தாலும் அது ஒரு அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ரசிகர் மன்றம் சார்ந்தோ தானே எடுக்கப்படுகிறது. அந்த நிலை மாறவேண்டும்.
Communitty Engagement அடிப்படையிலான Development என்பது ஜாதிமத சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட விஷயமாக இருந்தால் அல்லது பார்த்தால் மட்டுமே இதுக்கு தீர்வு காண முடியும், அதை விடுத்து இன்னமும் victim காரணம் காட்டி அரசியல் செய்தால் அது அவரகளுக்கு தான் கேடு.
நான் நசுக்கப்பட்டவன் நான் பின்னுக்கு தள்ளப்பட்டவன் என்று அந்த வட்டத்துக்குள் இருந்துக்கொண்டே வெளியேற இன்னுமும் முயலாமல்  பேசுவது என்பது சலுகை ஆதாயத்தை கருத்தில் கொண்டு தான் என நான் பார்க்கிறேன்.

----------------------------------------------------------

NEET எதிர்ப்பவர்:
நீங்க என்ன சொன்னாலும்அ சரி னிதாவின் உயிரை பலிவாங்கிய NEET சட்டம் வேண்டவே வேண்டாம்.

பதில்:
சரி NEET தேர்வின் அடிப்படையால் தோற்று போன அணித்தா, டெல்லி வரை விமானத்தில் போய் நல்ல ஒரு ஹோட்டலில் தங்கி இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போய் போராடிய அனிதா, தனக்கு கிட்டிய வேறு வாய்ப்பை எடுத்து இனி தனது படிப்பை தொடர்கிறேன் என்று சொல்லி இருந்த அனிதா, திடீரென தனது மரணத்தின் மூலமாகவாவது ஒரு நீதி பிறக்கட்டும் என கருதியவர், இன்னதினால் தான் நான் தற்கொலை செய்கிறேன் என்று கடிதம் கூட ஏதும் எழுதி வைக்காமலா தற்கொலை செய்துக் கொண்டார்...!!!
NEET என்பதே ஓர் தனிப்பட்ட அரசு சட்டமில்லை, மாறாக மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டும் என்பது தான் இங்கே நீதிமன்ற உத்தரவாக உள்ளது....
அது இன்று NEET என்கிற பெயரில் நுழைவுத்தேர்வாக உள்ளது நாளை வேறு ஒன்றாக கூட மாறலாம்....
என்றாலும் இங்கே பிரச்சனை நுழைவுத் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது மட்டும் தான்.
கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு காசு டொனேஷனே இல்லாமல் இத்துணை தமிழக மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று
மருத்துவம் என்கிற புரொஃபஷனல் படிப்புக்கு சென்று இருக்கையில்...
நுழைவுத் தேர்வே கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
+2 வில் என்ன மார்க் எடுத்து இருந்தாலும் வெகு சிலரை தவிர சென்ற ஆண்டு வரையிலும் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தானே மருத்துவ சீட்டு கிடைத்து வந்துள்ளது.
அந்த நிலை மாறி இப்போ தானே முதன் முறையாக 2314 ச்டேட் போர்ட் ஸ்டூடண்ட் களுக்கு டொனேஷனே இல்லாமல் சீட்டு கிடைத்து இருக்கிறது. இதை ஏன் உங்க மனம் கவனிக்க மறுக்கிறது!
அப்போ உங்க வாதப்படி 2314 மானவர்களும் செல்வந்தர்களா? இதில் பிற்படுத்தப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்கமே இல்லையா!!!!

---------------------------------------------------------

NEET எதிர்ப்பவர்:
பணம் உள்ளவர்கள் தனியார் பள்ளியில் அதுவும் நல்ல தரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் அதேசமயம் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன?

பதில்:
பச்ச பொய்... நல்லா ஸ்கோர் செய்ய கூடிய மாணவர்களை தனியார் பள்ளி கூடமே தேர்ச்சி விகிதம் காட்டி பெயர் பெற்றிட நாமக்கல், ராசிபுரம் மற்றும் ஏனைய ஊர்களில் உள்ள +2 க்கு பிரத்யேக கோச்சிங் கொடுத்து வந்த ஆசிரியர்களாக ஒன்று கூடி நடத்தி வந்த தனியார் பள்ளிக் கூடங்களை மறந்து விட்டீர்களா!!!

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
*NEET நுழைவுத் தேர்வு பற்றி வேறு ஒருவர் என்னுடன் உரையாடிய உரையாடல் தான் இது.

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...