மீண்டுமொரு NEET நுழைவுத் தேர்வு பற்றிய உரையாடல்.... வாட்ஸ்ஸப்பில்
NEET எதிர்ப்பாளர்:
புதிய தலைமுறை லின்க் ஒன்றை எனது கவனத்துக்கு பதிவிடுகிறார்
http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29353-only-five-govt-school-students-get-medical-seat-through-neet-exam.html?frm=fb_instant
புதிய தலைமுறை லின்க் ஒன்றை எனது கவனத்துக்கு பதிவிடுகிறார்
http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29353-only-five-govt-school-students-get-medical-seat-through-neet-exam.html?frm=fb_instant
பதில்:
ஆக நீங்க அனுப்பி வைத்த புதிய தலைமுறை ஊடக தகவலின் அடிப்படையில் மொத்தமிருந்த 3534 இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த 2314 மாணவர்களுக்கு அதாவது 65% state board மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்து இருக்கிறது...

ஆக புதிதாக இந்த சினிமா கூத்தாடிகளாக சேர்த்து தமிழ் மொழி பெயரால் நடத்தும் அரசியல் நாடக பொய் பிரச்சாரத்தின் அடிப்படையான, CBSE பள்ளி கூடங்களில் படித்த பிள்ளைகளால் மட்டுமே NEET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புக்கு செல்ல முடியும் என்பதெல்லாம், இத்தகவலின்படி முதல் வருடமே பொய்பித்து போய் உள்ளது என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்...
அதுபோக மற்றொரு வாதமான அனீதா போன்ற பிற்படுத்தப்பட்ட அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் இனி மருத்துவ படிப்பு படிக்கவே முடியாது என்பதும் கூட பொய்பித்து போனது....
காரணம் அனீதா Gov. Aided பள்ளி கூடத்தில் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு +1 & +2 வகுப்புக்கு சுயநிதி தனியார் பள்ளி கூடத்தில் சேர்ந்து பாதி கட்டணத்தில் படித்து இருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்..
மேலும் அனிதா படித்த பள்ளியில் பெரும்பாலான பள்ளிகளை போல +1 ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை மிக விரைவாக காலாண்டுக்குள் நடத்தி முடித்துவிட்டு +2 பாடத்திட்டத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி இருக்கிறது.
அது போக தமிழகத்தில் நல்லா படிக்க கூடிய மாணவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை ஒரு சில தனியார் பள்ளிகள் அவர்களது பள்ளி கூட விளம்பரத்துக்காக தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டி, தத்தெடுக்கும் பழக்கம் நமது தமிழ் நாட்டில் நிகழ்ந்து வருவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
---------------------------------------------------------
NEET எதிர்ப்பவர்:
அப்போ அரசாங்கப் பள்ளியில் படித்த மாணவிகளின் நிலை?
அப்போ அரசாங்கப் பள்ளியில் படித்த மாணவிகளின் நிலை?
பதில்:
இதுவரை எந்த நிலையில் இருந்து வந்தது என்பதை உணர்ந்து செயற்படுவதை பொறுத்து தான் இனி என்னவாக ஆகும் என்பதும் கூட.... அதன் நேற்றைய அல்லது இன்றைய நிலைக்கும் பாடத்திட்டத்தை முறையே பொறுப்பாக தடத்தாம்ல இருந்ததற்கும் NEET வேண்டாம் என்று அனிதாவின் வாக்குமூலம் இல்லா தற்கொலையை காரணம் காட்டி சொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டு பாடநூல் சிலபசும் NEET syllabus தலைப்புகளும் ஒரே விதமாக இருப்பதை நான் ஏற்கனவே ஒன்றோடு ஒன்று ஒப்பீடு காட்டி நிரூபித்துக் காட்டிவிட்டேன், அது போக இந்த வருடம் கேட்கப்பட்ட NEET கேள்வித் தாளில் உள்ள multiple choice கேள்விகளுக்கு பாடபுத்தகங்களில் எங்கெங்கே எம்மாதிரியாக பதில் குறிப்பிடபட்டு உள்ளது அதை நாம் எவ்வாறு புரிந்து உணர்ந்து கிரகித்து (கடம் அடிக்காமல்) படித்து NEET தேர்வை சந்திக்க வேண்டும் என்பதை பற்றியும் விவரித்து பேசியும் எழுதியும் இருந்தேன்.
அது போக, இதுவரையில் +2 தேர்ச்சி விகிதத்தில் பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்கள் எவ்வாறாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
அது மட்டுமல்லாமல் இங்கே அரசு பள்ளி கூடம் என்று குறிப்பிடுகையில் அது முழுமையாக அரசு நடத்தும் பள்ளிகூடமா அல்லது அரசாங்க நிதி உதவியில் இயங்கும் தனியார் மேனேஜ்மெண்ட் பள்ளிக்கூடமா என்பதையும் தெளிவுப்படுத்தி பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன், காரணம் நம் மக்களுக்கு இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னவென தெரிவதில்லை.
அப்படியே உங்க வாதப்படியே பார்த்தாலும் கூட கடந்த ஆண்டுவரை டாக்டர் படிப்புக்கு அரசு பள்ளிக் கூடத்தில் இருந்து காசு ஏதுமே கொடுக்காமல் சென்றவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர கணக்கை பார்க்கும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... என்னமோ இந்த வருடம் மட்டும் தான் அதுவும் NEET தேர்வினால் மட்டும் தான் அந்த சேர்க்கை விகிதம் குறைந்து விட்டது போன்று அனிதா தற்கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களால் ஒரு மாயை உருவாக்கப்பட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
--------------------------------------------------------
NEET எதிர்ப்பவர்:
அப்போ மருத்துவரின் மகன் மருத்துவர்..
விவசாயின் மகன் விவசாயி.. என்ற நிலை தானா இனி... அது தான் உண்மை
அப்போ மருத்துவரின் மகன் மருத்துவர்..
விவசாயின் மகன் விவசாயி.. என்ற நிலை தானா இனி... அது தான் உண்மை
பதில்:
அப்படின்னு யார் சொன்னது? அதில் பெற்ற குடும்ப அனுபவம் கல்வியை விட பெருசாச்சே... என்ற அது ஒரு பக்கம் இருக்க.... இம்மாதிரியான வாதத்தை சந்தர்பத்துக்கு தகுந்தார் போன்று இது தான் உண்மை என்று உங்களுக்கு திரும்ப திரும்ப சில தமிழ் மொழி மற்றும் இன வெறி அரசியல் கட்சிகளால் மாயையாக உருவாக்கப்பட்டு கிளர்ச்சியை தூண்ட போதிக்கப் படுகிறது...

அதை ஓரளவு தாண்டி வந்து பலரின் பலர் பல்வேறு வகையான துறையில் வெற்றி கண்டு முன்னேறி இருக்கிறார்கள்.
ஆனாலும் கடந்த 50 ஆண்டுகளில் அப்படியாக முன்னேற்றம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் தனக்கு கிட்டிய அங்கீகாரத்தை கொண்டு தனது அடையாளத்தை மறைக்க முற்பட்டு, தாம் முன்னேறி வர காரணமாக இருந்த சகோதர சமுதாயத்தை முன்னேற்ற பாடுபடாததால் அது இன்றளவும் பின்னோக்கியே இருக்கிறது எனலாம்.
இன்று இந்த தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் உலகத்தில் ஜாதிகளின் பெயரால் தகவல்கள் விவரங்கள் மறுக்கப்படுவதில்லை தடை விதிக்கப் படுவதில்லை...
பொது போக்குவரத்து சேவை வந்த பிறகு எப்படி யாரும் பயணிக்கலாம் என்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து போனதோ அது போன்று ஸ்மார்ட் போன், கூகிள், யூடியூப், கான் அகேடமி போன்றவை எல்லாம் தற்சமயம் ஜாதி பேதம் இன்றி அநேகம் பேரால் உபயோகிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது...
----------------------------------------------------------
NEET எதிர்ப்பவர்:
இதன் அடிப்படையில் ஏழைகளின் மருத்துவக் கனவு... கனவாகவே தான் இருக்கனுமா?
இதன் அடிப்படையில் ஏழைகளின் மருத்துவக் கனவு... கனவாகவே தான் இருக்கனுமா?
பதில்:
மறுபடியும் பாருங்க திரும்ப திரும்ப புரியாமல் பேசுகிறீர்கள்...
மறுபடியும் பாருங்க திரும்ப திரும்ப புரியாமல் பேசுகிறீர்கள்...
கனவை கனவாகவே அதை நோக்கிய உழைப்பும் முயற்சியும் இல்லாமல் வைத்து இருந்தால் கனவு வெறும் கனவாக தான் போகும்....
நம் தரப்பில் இருந்து போதிய ஆக்கப்பூர்வமான வகையில் community developed measures எடுக்கப் படுவதில்லை...
அப்படியே முன்முயற்சி எடுத்தாலும் அது ஒரு அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ரசிகர் மன்றம் சார்ந்தோ தானே எடுக்கப்படுகிறது. அந்த நிலை மாறவேண்டும்.
Communitty Engagement அடிப்படையிலான Development என்பது ஜாதிமத சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட விஷயமாக இருந்தால் அல்லது பார்த்தால் மட்டுமே இதுக்கு தீர்வு காண முடியும், அதை விடுத்து இன்னமும் victim காரணம் காட்டி அரசியல் செய்தால் அது அவரகளுக்கு தான் கேடு.
நான் நசுக்கப்பட்டவன் நான் பின்னுக்கு தள்ளப்பட்டவன் என்று அந்த வட்டத்துக்குள் இருந்துக்கொண்டே வெளியேற இன்னுமும் முயலாமல் பேசுவது என்பது சலுகை ஆதாயத்தை கருத்தில் கொண்டு தான் என நான் பார்க்கிறேன்.
----------------------------------------------------------
NEET எதிர்ப்பவர்:
நீங்க என்ன சொன்னாலும்அ சரி னிதாவின் உயிரை பலிவாங்கிய NEET சட்டம் வேண்டவே வேண்டாம்.
நீங்க என்ன சொன்னாலும்அ சரி னிதாவின் உயிரை பலிவாங்கிய NEET சட்டம் வேண்டவே வேண்டாம்.
பதில்:
சரி NEET தேர்வின் அடிப்படையால் தோற்று போன அணித்தா, டெல்லி வரை விமானத்தில் போய் நல்ல ஒரு ஹோட்டலில் தங்கி இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போய் போராடிய அனிதா, தனக்கு கிட்டிய வேறு வாய்ப்பை எடுத்து இனி தனது படிப்பை தொடர்கிறேன் என்று சொல்லி இருந்த அனிதா, திடீரென தனது மரணத்தின் மூலமாகவாவது ஒரு நீதி பிறக்கட்டும் என கருதியவர், இன்னதினால் தான் நான் தற்கொலை செய்கிறேன் என்று கடிதம் கூட ஏதும் எழுதி வைக்காமலா தற்கொலை செய்துக் கொண்டார்...!!!

NEET என்பதே ஓர் தனிப்பட்ட அரசு சட்டமில்லை, மாறாக மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டும் என்பது தான் இங்கே நீதிமன்ற உத்தரவாக உள்ளது....
அது இன்று NEET என்கிற பெயரில் நுழைவுத்தேர்வாக உள்ளது நாளை வேறு ஒன்றாக கூட மாறலாம்....
என்றாலும் இங்கே பிரச்சனை நுழைவுத் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது மட்டும் தான்.
கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு காசு டொனேஷனே இல்லாமல் இத்துணை தமிழக மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று
மருத்துவம் என்கிற புரொஃபஷனல் படிப்புக்கு சென்று இருக்கையில்...
மருத்துவம் என்கிற புரொஃபஷனல் படிப்புக்கு சென்று இருக்கையில்...
நுழைவுத் தேர்வே கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
+2 வில் என்ன மார்க் எடுத்து இருந்தாலும் வெகு சிலரை தவிர சென்ற ஆண்டு வரையிலும் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தானே மருத்துவ சீட்டு கிடைத்து வந்துள்ளது.
அந்த நிலை மாறி இப்போ தானே முதன் முறையாக 2314 ச்டேட் போர்ட் ஸ்டூடண்ட் களுக்கு டொனேஷனே இல்லாமல் சீட்டு கிடைத்து இருக்கிறது. இதை ஏன் உங்க மனம் கவனிக்க மறுக்கிறது!
அப்போ உங்க வாதப்படி 2314 மானவர்களும் செல்வந்தர்களா? இதில் பிற்படுத்தப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்கமே இல்லையா!!!!
---------------------------------------------------------
NEET எதிர்ப்பவர்:
பணம் உள்ளவர்கள் தனியார் பள்ளியில் அதுவும் நல்ல தரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் அதேசமயம் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன?
பணம் உள்ளவர்கள் தனியார் பள்ளியில் அதுவும் நல்ல தரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் அதேசமயம் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன?
பதில்:
பச்ச பொய்... நல்லா ஸ்கோர் செய்ய கூடிய மாணவர்களை தனியார் பள்ளி கூடமே தேர்ச்சி விகிதம் காட்டி பெயர் பெற்றிட நாமக்கல், ராசிபுரம் மற்றும் ஏனைய ஊர்களில் உள்ள +2 க்கு பிரத்யேக கோச்சிங் கொடுத்து வந்த ஆசிரியர்களாக ஒன்று கூடி நடத்தி வந்த தனியார் பள்ளிக் கூடங்களை மறந்து விட்டீர்களா!!!

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
*NEET நுழைவுத் தேர்வு பற்றி வேறு ஒருவர் என்னுடன் உரையாடிய உரையாடல் தான் இது.